Article

Facebook February 2017

Print Friendly, PDF & Email

Facebook March 2017


28 February
இத்துனூண்டு செய்தி கிடைத்தாலும், துரத்தி ஸ்டேட்டஸ் போடத்துவங்கும் முகநூல் போராளி…

 


27 February at 18:11 ·
”ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை”
கிழிச்சி தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறார்…

ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை


26 February at 05:18 ·
என்ன மிஸ்டர் MGR… போற போக்க பாத்தா குரூப் formationல சீக்கிரமே எங்கள நீங்க மிஞ்சிருவீங்க போலயே…


25 February at 18:48 ·
அம்மாவ கோவப்படுத்துற மாதிரி நடந்துக்காத பேபி… நா ஒரு ஐடியா சொல்லட்டா..?
அம்மாவ கோவப்படுதாம இருக்குற மாதிரி ஐடியாவா… நீயா பேபி பேசுற..?
#மகளதிகாரம்


25 February at 14:25 ·
முன்பொரு காலத்தில் இப்படித்தான் இயற்கையை இடைமறித்து ஒரு ஆதியோகி அமைத்தார்கள்…


24 February at 22:54 ·
அழி…


24 February at 22:38 ·
எஅதீபே…
எந்த கட்சியா இருக்கும்..? ஏதும் கெட்ட வார்த்தையா இருக்குமோ..?


24 February at 22:23 ·
எம்ஜிஆர்
அம்மா
தீபா
பேரவை
யக்கா… இப்டியா பேரை வைப்ப..? சொல்லீருந்தா நாங்கல்லா சேந்து வெச்சிருப்போம்ல..?


23 February at 21:57 ·
க்ளோஸ் எனஃப்…


23 February at 21:17 ·
டிக்கெட் போடறாங்க’னு வாட்ஸப் வசந்தி வந்ததுலேருந்து ஒர்த்தரும் சமாதிக்கு வரக்காணோம்…
ப்ளடி பெக்கர்ஸ்…


23 February at 19:17 ·
தீபக் தம்பி என்னமோ விகல்ப்பமில்லாம எதார்த்தபதார்த்தமாத்தான் பேட்டி கொடுத்துருக்கு… நொறுங்கு செய்திக்கு பழக்கமாயிட்ட நாமதான் அதை திட்டீர் எக்ஸ்க்ளூஸிவ் செய்தியாக்கிட்டோம்…


23 February at 19:09 ·
என் முகநூல் சுவரைப் பொறுத்தவரை எந்த ஒரு தனி நபரோ, குடும்பத்தினரோ ஆதிக்கம் செலுத்தமாட்டார்கள்…


feeling எத்தன..?
23 February at 17:02 ·
அம்மா
is a OPS
is a சின்னம்மா
is a EPS
is a TTVD…


23 February at 10:15 ·
யோவ்… இதுக்குத்தான் மூணு மாசம் அங்க போய் மாடலிங் பண்ணிட்டு வந்தியா… மூஞ்சி என்ன, மூக்கு கூட மேட்ச் ஆகல…
என்னமோ கோல்மால் பண்ணிட்டு வந்துருக்க… நாளை பின்ன வீடியோ எதும் ரிலீஸ் ஆச்சோ, நாஸ்தி பண்ணீருவேன் உன்ன… உன் தோஸ்த் ஜக்கி’டயும் சொல்லி வை…


23 February at 09:03 ·
ஓஓஓஹ்ஹ்… அப்ரெய்ஸல் ஃபில் பண்ணிட்டியா..? ஸோ வாட்..?


23 February at 08:59 ·
இல்லீங்க… சினிமா’ல்லாம் பாக்குறதில்லீங்க…
விமர்சனம் மட்டும்தான்…


22 February at 17:21 ·
பிஸ்னெஸ் ஐடியா’ஸ் கேட்டு ரெண்டு பேரு வந்துருந்தாங்க… எக்கச்செக்கமா சொல்லி அனுப்பிச்சிருக்கேன்…
#ஆப்பீஸ்


21 February at 18:19 ·
Walk the talk…
#Jaggi_Vasudev


21 February at 18:10 ·
Go on… Clear it… We’re going to give them God at the end…
#Jaggi_Vasudev


21 February at 15:48 ·
போட்டோ எடுத்தமா போட்டமானு இல்லாம, அதுக்குமாய்யா apps டெவலப் பண்ணுவீங்க… சோம்பேறிங்கள்…


21 February at 08:50 ·
சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மேல நம்ம சூனா சாமி கேஸ் (case) போட்ருக்காராமே… ஆதாரம் எல்லாம் கூட அடுக்கியிருக்காராமே…
மீ, ”அதெல்லாம் முடியாது… ஃபேஸ்புக், ட்விட்டர், விக்கிபீடியா’ல வர்ற வரைக்கும் நாங்க நம்ப மாட்டோம்… இங்க வந்தோடனே விசாரிச்சு சொல்லியனுப்புறோம்… போ…”


19 February at 19:07 ·
மன்னார்குடி மாப்பிள்ளை now be like…


18 February at 18:34 ·
மைலாப்பூர்’ல இருந்து ரிலீஸ் ஆனவுடன் வீட்டுக்கு போகாமல் நேரே மறுபடியும் மெரினா வந்து உக்காந்தா…
தளபதி கெத்து…


18 February at 17:46 ·

எது எப்படியோ… இப்ப விட்டா நாலு வருஷம் இதான் நிலமை… தளபதி திங்கள் காலை வரை மெரினா’ல உக்காந்துட்டார்’னா மாஸ்…
DMK மற்றும் Stalinக்கு இது அற்புதமான வாய்ப்பு…
(இவனுங்க அரெஸ்ட் பண்ணாம இருக்கணும்…)
#DissolveTNGovt


18 February at 15:13 ·

”ஷேர் செய்… ஷேர் செய்…”னு உசுப்பேத்தி உசுப்பேத்தி சேர்’ஐ வெச்சி செய்ய வெச்சிட்டீங்களேய்யா…


18 February at 14:57 ·

நடத்துங்கய்யா…
நடத்துங்க…


18 February at 14:41 ·

ரிஸார்ட் வேற மூடிட்டாங்களாம்…
இன்னைக்குள்ள ஒரு முடிவு தெரியாட்டி தொகுதிக்குத்தான் போகணும் போல…


 18 February at 12:45 ·
பல்லு விளக்கி, குளிச்சி, லஞ்ச் சாப்டு தெம்பா வர்றேன்…

18 February at 12:37 ·
EPS… OPS… மற்றும் ஸ்டாலின்…


18 February at 12:36 ·
மதியம் 1 மணி வரை ஒத்திவைப்பு…


18 February at 12:35 ·
எடுடா மேளம்…
அடிடா தாளம்…
இனிதான் கச்சேரி ஆரம்பம்…


 18 February at 11:54 ·
இப்படித்தான் போகும்’னு நேத்தே ஒருத்தர் சொன்னாரு…


18 February at 11:15 ·
அஸெம்ப்ளி நவ்..?


18 February at 10:58 ·
Twitterல ரவுண்டு கட்டி அடிக்கிறாரு ஆண்டவர்…


18 February at 09:19 ·


18 February at 07:49 ·
வழக்கம்போல வெளிநடப்பு பண்ணிறாதீங்க (செ)தலைவரே… எதா இருந்தாலும் வோட்டு போட்டுட்டே வாங்க…


18 February at 07:46 ·
கடைசிவரைக்கும் வோட்டு மட்டுமே போட்டுட்ருக்கப்போறேன் போல…


 17 February at 22:35 ·
பட், தமிழ்நாட்’ல வளர்ப்பு மகனும் சரியில்ல, சொந்த மகனும் சரியில்ல…


17 February at 21:21 ·
ஜாதி மதம் மொழி சமயம் ஆகிய அனைத்தும் தாண்டி புனிதமானது இந்த காதல் தோல்வி…


 17 February at 12:08 ·
படிச்சு பாருங்க… அத்தனை மீம்ஸ் தேத்தலாம்…
——
//உத்தரபிரதேசத்தின் தத்துப்பிள்ளை நான்.//
//சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரசிடம் இருந்து விடுபட்டால்தான் உத்தரபிரதேசம் முன்னேறும்//
//உத்தரபிரதேச மக்கள், பா.ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்து விட்டனர்.//
//இங்கு காவி பெருங்கடலே திரண்டு வந்திருப்பதை பார்க்கிறேன்.//
//இதுவரை நடைபெற்ற இரண்டு கட்ட தேர்தல்களிலும் பா.ஜனதாவே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.//
//சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் நலனுக்காகவே அரசியல் செய்து வருவதை வாக்காளர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.//
//உத்தரபிரதேசத்தை முன்னேற்றுவது இவர்களது நோக்கமல்ல. தங்கள் ஓட்டு வங்கியை எப்படி அதிகரிக்கலாம் என்றே சிந்திக்கின்றனர். பதவிக்கு வந்த பிறகு, தங்களுக்கு ஓட்டு போட்ட பிரிவினருக்கு மட்டும் நல்லது செய்கிறார்கள். இந்த கட்சிகளிடம் இருந்து விடுபட்டால்தான் உத்தரபிரதேசம் முன்னேறும்.//
//பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மை அளியுங்கள். 5 ஆண்டுகளில், உத்தரபிரதேசம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபடுவதற்கான வழிகளை நான் காட்டுகிறேன்.//
//கங்கையும், யமுனையும் பாயும் வளமான பூமி இது. இங்கு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இருந்தாலும், இங்கு வறுமை நிலவுவதற்கு மக்கள் காரணம் அல்ல. இதுவரை இருந்த அரசுகளே காரணம்.//
//பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், எந்த பாரபட்சமும் இன்றி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.//
//பா.ஜனதா மட்டுமே இளைஞர்களுக்காக பாடுபடும் கட்சி.//
//கள்ளச்சந்தையில் யூரியா விற்கப்படுவதை தடுத்துள்ளோம்.//
//இதய நோய்க்கான மருத்துவ கருவிகள் மற்றும் 700 மருந்துகளின் விலையை குறைத்துள்ளோம்.//
//எல்.இ.டி. பல்ப் விலையை குறைக்க செய்துள்ளோம்.//
//பகவான் கிருஷ்ணர், உத்தரபிரதேசத்தில் பிறந்தார், குஜராத்தை தனது கர்மபூமியாக ஆக்கிக்கொண்டார். நான் குஜராத்தில் பிறந்தேன். உத்தரபிரதேசம் என்னை தத்து எடுத்துள்ளது.//
//நான் உத்தரபிரதேசத்தின் தத்துப்பிள்ளை. இதுதான் எனது பெற்றோர். பெற்றோருக்கு துரோகம் செய்யும் மகன் நான் அல்ல. பெற்றோரை கைவிட மாட்டேன்.//
http://www.maalaimalar.com/News/National/2017/02/17002034/1068776/I-am-adopted-son-of-Uttar-Pradesh-says-PM-Narendra.vpf

17 February at 11:31 ·
எட்டு வருஷமா promotion கேக்குறேன்… ஒண்ணும் நடக்குற மாதிரி தெர்ல…
இந்த வருஷம் சென்னை வர்றப்ப ஒரு சபதமும் போட்டுற வேண்டியதுதான்…


17 February at 11:17 ·
ஆட்சி அலுவலகம்…


17 February at 11:15 ·
என்னிடம் சொந்தமாக கார் கூடக் கிடையாது…
#மோதி


17 February at 11:05 ·
வாழ்தலின் உன்னத தருணம்…


17 February at 09:14 ·
That one common friend…


17 February at 09:07 ·
காதலை கற்றுத் தொலையவே ஒருத்தி நுழைகிறாள்…


17 February at 09:02 ·
கருவாய் காதலை சுமப்பவர்கள் தோழர்களே…


17 February at 08:58 ·
பிரிந்தோர் ஆசீர்வதிக்கப்பட்டோர்…


17 February at 08:51 ·
இன்றி வாழ்வு முழுப்பெருவதில்லை…


17 February at 08:44 ·
நீதான் என் முன்றாவது காதல் என்று நம்ப வைப்பதில் தொடங்குகிறது இல்லறத்தின் நல்லறம்…
பள்ளிக் காதல் தூய அன்பாகவும், கல்லூரிக் காதல் infatuation’ஆகவும் பார்க்கப்படுகின்றன…
பிகு: இது straight ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்…


16 February at 21:15 ·
அடேய்ங்களா… TN’ன்னா டயர் நக்கி’ன்னு கேலி பண்றாய்ங்கள்டா இங்க…


16 February at 19:57 ·
கொழந்த அவ்ளோ அழகா ஒரு கேள்வி கேட்ருக்காருல்ல… யாராச்சும் பதில் சொல்லலாம்ல..?
அவரே பதில் சொல்லட்டும்னு காத்துட்ருக்கோம்…
இல்லீங்கய்யா… ஒரு லைக் இல்லேன்னா ஹாஹா ஸ்மைலியாச்சும் போடலாம்ல..? அட்லீஸ்ட் ‘பதில் தெர்ல’னு கமெண்ட்லயாச்சும் சொல்லலாம்ல..?
அவர் வரட்டும்னு காத்துட்ருக்கோம்… என்ன அவசரம்..? இப்ப என்ன குடியா முழுகிப்போச்சு..?


16 February at 18:58 ·
கூவாத்தூர் escapees be like…


16 February at 18:52 ·
OPS அணி now be like…


feeling கர்த்தரே… ரொம்ம்ம்ப கிண்டல் பண்றாய்ங்கய்யா…
16 February at 16:15 ·
மீ, ”எங்களுக்கு ஒரு வழியா முதல்வர் கெடச்சிட்டாரு…”
சக தொழிலாளி, ”  ? ? ? யாரு… உங்களுக்கு..? இப்பதைக்கு ஒரு பதினஞ்சு நாள் ப்ரேக் கெடச்சிருக்கு… அவ்ளோதான்… முதல்வரெல்லாம் இல்ல, உங்களுக்கு அடுத்த நாலு வருசத்துக்கு வெறும் ப்ரேக்கிங் நியூஸ்தான்டியேய்…”


16 February at 15:32 ·
“பன்னீர் போலவே எடப்பாடிக்கும் சொட்டை இல்ல.” – Manik Shakthi
ஜெ, ஸ்டாலின், சின்னம்மா’கு கூடத்தான் இல்லை… ஓ… நீங்க அப்படி வர்றீங்களா… விஜய்’கு இருக்கு… அஜித்’கு இல்ல…
அப்ப அஜித் தான் அடுத்த CM…


15 February at 19:31 ·
சொஸைட்டி’ல நேத்து வரை தேவதை மாதிரி சுத்திட்ருந்த ஒரு பொண்ணு, இன்னைக்கு பார்த்தால் பஞ்சப்பராரி மாதிரி சுத்திட்ருக்கு…
நேத்து எவனாச்சும் set ஆகி பொண்ணு ரிலாக்ஸ் modeக்கு போயிருச்சா,
இல்லை, நேத்து கூட எவனும் set ஆகலைன்னு விரக்தி modeக்கு போயிருச்சான்னு தெர்ல…


15 February at 13:46 ·
ஆத்தாடி… சிங்கம்தாம்லே…


14 February at 22:12 ·
என் ID ஹேக் செய்யப்பட்டுள்ளதாம்…
வீட்ல திட்றாங்க…
#காதலும்_கடந்து_போகும்


14 February at 22:03 ·
மேஜரின் மைனர் அவள்…
#காதல்


14 February at 21:56 ·
உதிரா ஊஞ்சல் அவள்…
#காதல்


14 February at 21:52 ·
உச்சத்தின் மிச்சம் அவள்…
#காதல்


14 February at 21:45 ·
என் அற்புத உலகின் ஆலீஸ் அவள்…
#காதல்


14 February at 21:43 ·
ஸ்க்ரோடிஞ்சர் பூனையின் புன்னகை அவள்…
#காதல்


14 February at 21:39 ·
என் கனவின் நிதர்சனம் அவள்…
#காதல்


14 February at 21:37 ·
கண்ணாடியும் அணியா மியா அவள்…
#காதல்


14 February at 21:35 ·
கேரளத்துக்கே காதலை ஏற்றுமதி செய்யும் கன்னி அவள்…
#காதல்


14 February at 21:29 ·
எனக்காக காத்திருக்கும் மீனாட்சி அவள்…
#காதல்


14 February at 21:26 ·
கத்தாத அண்ணியார் அவள்…
#காதல்


14 February at 21:21 ·
சிரிக்காத கீசு அவள்…
#காதல்


14 February at 21:20 ·
வாய் பேசா DD அவள்…
#காதல்


14 February at 21:17 ·
மச்சினியின் அக்காள் அவள்…
#காதல்


14 February at 21:15 ·
இடையின் சிகரம் அவள்…
#காதல்


14 February at 21:04 ·
ரசஞ்சாதத்தை லிப்ஸ்டிக் படாமல் சாப்பிடும் பெருந்தெய்வம் அவள்…
#காதல்


14 February at 12:13 ·
சின்னம்மா… almost CM ஆகும் வேளையில்…
PC: Veda Pragadesh NV


14 February at 11:30 ·
கூவாத்தூர் MLAs be like…


12 February at 23:01 ·
ஆமா… வேலன்டைன்ஸ் டே வருது…
ஸோ வாட்..?
போய்த் தூங்குங்க…


11 February ·
முகநூலர்கள் காதலர் தினத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்…


10 February ·
வெண்ணிற ஆடை
-சரவணன் சந்திரன் Saravanan Chandran
உயிர்மை பதிப்பகம்
நேற்று படிக்க ஆரம்பித்த போது சரவணன் சந்திரனுக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினேன், ‘பாஸ்… உங்க புக் தான் ஓடிட்ருக்கு…’ உடனே அவரிடம் இருந்து பதில் வந்தது, ‘என்ஜாய்…’ ஆனால் இன்று படித்து முடித்த போது அப்படி இல்லை. மனம் பாரப்பட்டு கிடக்கிறது.
‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற நிகழ்ச்சிகள் இதுவரை ஒரு முறைகூட பார்த்ததில்லை. ஒருவரின் துக்கத்தை காட்சிப்படுத்தி TRP சம்பாதிக்கிறார்கள் என்று எனக்கு படும். இந்த புத்தகத்தை எடுத்தபோது அந்த நிகழ்ச்சி சார்ந்த சம்பவங்கள் என்று தெரியாது. முன்னுரை படித்தபோதுதான் அறிந்தேன். மொத்தம் 22 நிகழ்வுகள். ஒவ்வொன்றும் மனதை அலைகழிக்கின்றன. நாம் காண விரும்பாத உலகம். நம்ப விரும்பாத உலகம்.
TVயில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வு காட்சிப்படுத்தப்பட்டதென்றால், புத்தகத்தில் நிகழ்வுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதுவும் மிக சுருக்கமாக, நெகிழ்ச்சியாக ஒரு சிறுகதை போல. ஆனாலும் ஒவ்வொரு நிகழ்வும் உணர்வை நம் மனதிற்கு கடத்த தவறவில்லை. சொல்லப்போனால், முகத்தில் மனதில் அறைகிறது. கதை மாந்தர் மேல் கோபம் வராமல் ஒரு பரிதாபமும் பாசமுமே ஏற்படுகிறது. ஒவ்வொரு பகுதி முடித்தபின்பும் கண்கள் மூடி அமர்ந்து மனதில் அழுதேன். கர்வம் நொறுங்க அமர்ந்தேன். அவர்களுக்காக பிரார்த்தித்தேன். அனைத்திலும் மிக பாதித்த பகுதி கீழே:
//
எந்த கணத்தில் உண்மையை சொல்ல முடிவெடுத்தீர்கள்?
என் கணவரது சாவை எடுத்தபிறகு மூன்றாம் நாள் காரியம் நடந்துகொண்டிருந்தது. அப்போது என் பையன் அந்தத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அவனை அழைத்த என்னுடைய உறவினர் ஒருவர் தின்பதற்கு வடையைக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அவன் ஒரு ஓரமாய் அமர்ந்து தின்று கொண்டிருந்தான். அவன் பாவமாய் அமர்ந்து தின்று கொண்டிருந்த காட்சி என்னை என்னவோ செய்தது. அந்த கணத்தில் நான் உண்மையை சொல்லிவிட தீர்மானித்தேன்.
//
இதை படித்து முடித்த போது கண்களில் கண்ணீர் துளிர்த்தது. சக பிரயாணி மிக மிக நாகரிகமானவர். என்னை கவனித்தவர், என் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி மூடி அருகில் வைத்துவிட்டு என் உணர்வை கேள்வி கேட்டு கொச்சை படுத்தாது கண்கள் மூடி தூங்கிவிட்டார்.
புத்தகம் ஆரம்பிக்கும் போது, அடுத்த வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்கும் ஒரு fetish அனுபவம் எதிர்பார்த்தேன். முடித்த போது வாழ்க்கை மற்றும் உறவுகள் மீது இன்னும் காதலாய் உணருகிறேன். வீட்டிற்கு சென்றவுடன் சசியை அணைத்துக்கொள்ள வேண்டும். சூர்யா வர்ஷாவை வாரிக் கொள்ளவேண்டும். சரவணனை நேரில் சந்திக்க முடிந்தால் நன்றி சொல்ல வேண்டும். மனுஷ்ய புத்திரனின் ‘வெண்ணிற ஆடை’ கவிதை தேடி படிக்க வேண்டும்.
Verdict: நூலகத்தில் வைத்து பாதுகாக்கவும்


10 February ·
ஒரு தனிப்பட்ட டிஸ்கஷனில் அதிகாரி ஒருவர் கேட்டார், ”உங்கள் நிறுவனம் பற்றி இப்படி ஒரு செய்தி கேள்விப் படுகிறேன்… உண்மையா..?”
”நானும் கேள்விப்படுகிறேன்… உண்மையாகவும் இருக்கலாம்…”
”அப்படியா… ஸோர்ஸ் என்ன..?”
தமிழனாய், தலை நிமிர்ந்து பதில் சொன்னேன், ”ஸோர்ஸ்’ஆ..? தெரியாதுடா… தெரியாது…”
#கான்ஃபரென்ஸ்


10 February ·
ஏன்டா… உங்களுக்கெல்லாம் பசிக்காதா..?
மணி ரெண்டாகப்போகுது…
#கான்ஃபரென்ஸ்


10 February ·
உனக்கு embarrassing’கா இருந்தா எந்திருச்சு தள்ளிப்போய் உக்காருய்யா… என்னை ஏன் எழுப்பி விடுற..?
#கான்ஃபரென்ஸ்


10 February ·
Gap விடாம பேசிட்ருக்காங்க…
#கான்ஃபரென்ஸ்


10 February ·
தண்ணி குடிச்ட்டேருக்கணும்…
#கான்ஃபரென்ஸ்


10 February ·
ஸ்டேஜ்’ல இருக்குற panelists யாரையாச்சும் பாத்துட்டே இருக்கணும்… அவர் நம்மள கவனிக்க ஆரம்பிச்சவுடன் கொட்டாவி விட ஆரம்பிச்சிடணும்…
#கான்ஃபரென்ஸ்


10 February ·
திடீர்’னு கை தட்டணும்…
எந்திருச்சு நின்னு தட்டுனா இன்னும் உத்தமம்…
#கான்ஃபரென்ஸ்


at The Lalit New Delhi.
10 February · New Delhi ·
இதைப்போன்றதொரு அழகிய தருணத்தில்தான் சென்ற முறை பிரியத்திற்கினிய பாராளுமன்ற பாடகரை சந்தித்தேன்… இம்முறை அப்படியோரு serendipity தருணம் அமையுமென்று தோன்றவில்லை…
அதனால, பயப்படாதீங்க, பதிவொண்ணும் வராது…


10 February ·
OPS’ஓ சின்னம்மா’வோ ஊழல் குற்றச்சாட்டை அடுத்தவர் மேல வைக்கல பாத்தீங்களா…
#டமிழன்டாாாாவ்வ்


10 February ·
Democrats ஏழு பேர பஸ்’ல ஏத்திட்டாய்ங்களா… கருமம் கருமம்… அடிச்சு இழுத்துட்டு வாங்கய்யா…


9 February ·
கூடை தான் இல்லை…
பட், close enough…


8 February ·
என்ன பேட்டி, என்ன ஸ்டேட்மெண்ட் எதா இருந்தாலும் 10 மணிக்கு மேல ஆரம்பிங்கய்யா…
நேத்தே வாணி ராணி miss ஆகிடுச்சு…? ? ?


8 February ·
நீங்க இப்படியே வெளாண்டுகிட்ருந்தா
இந்த சிங்கம் 3’ய எப்படிய்யா ரிலீஸ் பண்றது…


8 February ·
அப்படிப் பாத்தா, வீட்டுக்காரியவிட மச்சினிங்க கிட்ட தான் நான் அதிகம் சிரிச்சு வெச்சிருக்கேன்…


8 February ·
#Thug_life


8 February ·
காலைல எந்திருச்சா ஹிந்தி சேனல்’ல யோகா பாக்குறவன்யா நானு… என்னைய போய் காலங்காத்தால தமிழ் நியூஸ் பாக்க வெச்சிட்டீங்களேய்யா…


8 February ·
சின்னம்மா…
அப்படிப் பாத்தா இது தேசிய அளவிலான சதி…


7 February ·
தன்னந்தனியாக நின்று போராடுவேன் -OPS
Finish
The end


7 February ·
ஸ்டாலின் டெல்லி செல்ல,
OPS அம்மா சமாதியில் அமர்ந்துவிட்டார்…
#ஞானப்பழம் #CM


7 February ·
அம்மா நினைவிடத்தில் OPS அமர்ந்து தியானம்…
#ராஜதந்திரம்
மிகச் சிறந்த அரசியல்வாதி…


7 February ·
அந்த ராவ் இல்லேன்னா என்னம்மா… தீர்மானம் போட்டு நம்ம கட்சி’ல இருந்து ஒருத்தர தேர்ந்தெடுத்து கவர்னர் ஆக்குறோம்… அவரை வெச்சி உங்களை CM ஆக்குறோம்…


7 February ·
நாட்டில் பூகம்பம் ஏற்பட முகநூலில் இடப்படும் பதிவுகளே காரணம்…
#மோதி


7 February ·
அம்மா இன்று நம்மோடு இல்லதிருக்க முக்கிய காரணம் அவரது மரணம்தான்…
#பீலே


7 February ·
வீட்டில் ஆப்பீஸ்’ல் பொங்க முடியாத என்னைப் போன்ற போராளிகள்தான் முகநூலில் பொங்குகிறோம்…
#மோதி


7 February ·
பல நிரந்தர முதல்வர்களைக் கண்ட நாடு
எம் பெருமைக்குரிய தமிழ்நாடு…


7 February ·
எலேய் பன்னீரு… எறங்குடா… நா CM ஆகணும்…


feeling இதுல எங்கள பாத்து கிண்டல் வேற… நான்ஸென்ஸ்…
7 February ·
நல்லதோ கெட்டதோ இல்ல என்ன எழவோ, எங்களுக்கு எங்கள் முதல்வர் / முதல்வர் வேட்பாளர் யாரென்று தெரியும்…
பஞ்சாப், கோவா, உத்தர் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர்… உங்கள் முதல்வர் வேட்பாளர் யார்..? அறிவிக்க முடியுமா..?
யோவ் குஜராத் பங்காளி… ரிலாக்ஸ்… உனக்கு வருஷம் முழுக்க டைம் இருக்கு… யோசிச்சு வெச்சிக்க…
For good or bad or pathetic, we know who our CM / CM candidate is…
Punjab, Goa, Utrar Pradesh, Uttarakhand and Manipur… Who’s yours..? Dare to announce..?
Gujarat’bhai… Relax… Atleast you got till year end to decide…


6 February ·
சரியாக காய்கள் நகர்த்தப்பட்டால் செரினா தமிழ்நாட்டின் அம்மாவாகவும் வாய்ப்பிருக்கின்றது…
எதுக்கும், முடிவா ஒரு முடிவு தெரியுற வரை நடுநிலை ஸ்டாண்ட்’லயே ஸ்டெடியா நிப்போம்…


6 February ·
அடேய்களா… என்னை ஏண்டா அப்போலோ’ல போட்டீங்க..?


5 February ·
அதுல பாருங்க மக்களே… உங்கள மாதிரி என்னால வெளிப்படையா பேர் சொல்லி திட்டவும் முடியல…
யூ ஸீ… நா வாக்கப்பட்ட இடம் அப்படி…


5 February ·
ஜல்லிக்கட்டு.
தைத் திருநாளாம் பொங்கலின் போது நடக்கும் தமிழ்ப் பண்டிகை. காளைகளை கட்டவிழ்த்து விட்டு இளைஞர்கள் அதை அடக்கும் ஒரு வீர விளையாட்டு. ஜெயித்த வீரர்கள் பெண்களை கரம்பிடித்த கதைகளும் உண்டு. சட்டத்தால் இதற்கு தடை ஏற்பட, பல்வேறு காரணங்களால் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த மக்கள், ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக வெகுண்டெழுந்தனர். சென்னை மெரினா மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மக்கள் திரண்டனர். அனைத்து சார்பு அரசியல்வாதிகளையும் தவிர்த்து மக்களே இந்த எழுச்சியை முன்னெடுத்தனர். அரசியல் தலைவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். சினிமா துறையினர் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஜாதி மத பேதமின்றி மக்கள் இந்த எழுச்சியை முன்னெடுத்தனர். அத்தனையும் தாண்டி, இந்த எழுச்சி சாத்வீகமான முறையில் நடந்தது. காந்தி வழி நடந்த இந்த எழுச்சி வெற்றியும் தந்தது. அரசு ஜல்லிக்கட்டுக்கான சட்டம் இயற்றியது. இதோ இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது.
போராட்டத்தின் மிக முக்கிய அம்சம் பெண்கள். என்னை பொறுத்தவரை, பெண்கள் பங்களிப்பின்றி இந்த போராட்டம் வெற்றி பெற்றிருக்காது. அமைதியாக நடந்ததால் தான் பெண்கள் பங்கேற்றார்கள் என சில நண்பர்கள் கூறினார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், பெண்கள் பங்கேற்றதால் தான் இந்த போராட்டமே சாத்வீகமான முறையில் நடந்தது. வெற்றியும் அடைந்தது. இந்த வருட ஜல்லிக்கட்டு பெண்களுக்கே சமர்ப்பணம்.
சில போராட்ட கணங்கள் இப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு – பெண்கள் புரட்சி

 


feeling காசா பணமா… CM போஸ்ட் தான…
5 February ·
குணமாகி டிஸ்சார்ஜ் ஆன பின் எங்களை ஆளுக்கொரு மாதம் CM ஆக்கி அழகு பார்ப்பதாக சொல்லியிருந்தார் அம்மா… பச்ச்… வீ மிஸ் அம்மா…


5 February ·
சூழ்நிலையை திசை திருப்ப வழக்கம்போல அனிருத் ஒரு வீடியோ வெளியிடுவார்… காத்திருப்போம்…


5 February ·
வாத்தியார் பிள்ளை மக்கு’ங்குற கணக்கா…
எவரையும் தலையெடுக்க விடாமல் ஊரெல்லாம் அடக்கியாண்ட(தாக சொல்லப்பட்ட) சிங்கம் வீட்ட சரியா கவனிக்கல பாத்தீங்களா…


feeling எதுக்கும் கேட்டு வைப்போம்…
5 February ·
ரிஷப ராசி… எட்டாம் நம்பர்… யார்னா இருக்கீங்களா..?


4 February ·
OPS @ முதல்வர்…


4 February ·
“நாங்கள் எதிர்பாத்ததை விட ஆயில் அதிகமா கலந்திருக்கு” – தமிழிசை


4 February ·
பிரியாணி கொஞ்சம் காஸ்ட்லி தான்…
அதுக்காக அண்டா திருடியதை நியாயப்படுத்தினோமா…
I denounce piracy of any kind…


4 February ·
போன பதிவு இப்படி மொழிபெயர்ப்பாகியிருக்கு…
திரை சுட்ட S Suriyaa Venkatக்கு நன்றி…


4 February ·
Mayday… Mayday…
Andra Pradesh… you got a problem… I repeat… you got a problem… either donate some land to neighboring states or get some… Urgent…
Atleast change the logo…
PC: Winston Fernando


2 February ·
நேத்து ஆத்து ஆத்துனு ஆத்துனீங்க… இன்னைக்கு பாத்தா LPG cylinder 650ஓவா’னு காமிக்குது…
சைலெண்ட்’ஆ விலை ஏத்திட்டிங்க போல…


2 February ·
டீஸரை தூக்கிட்டு போகும் தல ஃபேன்ஸ், சும்மா இருக்கும் தளபதி ஃபேன்ஸ்’ஐ அஸால்ட்டாக டீல் செய்த போது…


1 February ·
Demon பயன்களெல்லாம் மோதி நமக்கு பட்ஜெட்’இல் தருவார்… வருமான வரி பாதியாகிடும்… அல்லது மொத்தமா நீக்கப்படக்கூட வாய்ப்பிருக்கு’னு முட்டு கொடுத்துட்டு திரிஞ்சாப்ல ஒரு குஜராத்தி colleague…
அந்த தோழர் முகத்தை பார்க்கணுமே…


1 February ·
ஆங்… அப்டித்தான்…
Tax slab ஏத்துங்க…
Interest Rates குறைங்க…
Deposit Rates கம்மி பண்ணுங்க…
Service Charges நீக்குங்க…
Remonitize பண்ணுங்க…
ஜனரஞ்சகமான பட்ஜெட் போடுங்க…
#திடீர்_பட்ஜெட்_பயில்வான்கள்


 

 

Facebook January 2017

Karthik Nilagiri

Related posts