Article

Unprepared Indian migration – Corona COVID-19

Print Friendly, PDF & Email

திடீரென்ற ஒரு அதிரடி முடிவால் சாலையில் நிற்க வைக்கப்பட்ட இந்தியர்கள், மற்றொரு தயாரற்ற தடாலடி முடிவால் இன்று நடக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்… நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக…

மனிதர்கள் உலகம் முழுவதும் நடந்தே பயணித்திருக்கிறார்கள்… வாழ்ந்த இடங்களில் இருந்து, உணவைத் தேடியும் நல்வாழ்வைத் தேடியுமே அந்த ஆதி பயணங்கள் இருந்திருக்கின்றன… ஆனால், இப்பொழுது மக்கள் தமக்கு வாழ்வளித்த இடங்களை விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்… ஆதி மனிதன் போல் நடந்தே…

முகமது பின் துக்ளக் காலத்தில் மக்கள் இப்படி நடக்க வைக்கப்பட்டார்கள்… ஆனால் அப்படி நடந்தவர்கள், தில்லி நகரத்து மக்கள் மட்டுமே என்று கொஞ்சம் ஆறுதல் கொள்ளலாம்… இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போதும் மக்கள் நடந்து தங்கள் விரும்பிய கனவு தேசத்தை அடைந்தார்கள்… அதில் இரு நாட்டு மக்கள் நடந்தார்கள் என்றும் கொள்ளலாம்… ஆனால் இப்பொழுது நடப்பது இந்தியர்கள்… இந்தியர்கள் மட்டுமே..‌.

Corona எனும் கொடும் சுவாசத் தொற்றுநோய் உலகமெங்கும் பரவி மக்களை கொன்று கொண்டிருக்க, நாம் மெதுவாக ஒரு வெளிநாட்டு ஜனாதிபதியை வரவேற்று விழாவெடுத்து கௌரவித்து விட்டு, ஒரு மாநில ஆட்சியை கலைத்து மாற்றி, தலைநகரில் ஒரு மதக் கூட்டத்திற்கு அனுமதி அளித்து, சிவராத்திரி கொண்டாடிவிட்டு திடீரென விழித்து ஊரடங்கு அறிவித்தோம்… மக்கள் முடங்கினர்… தொழில்கள் அப்படி அப்படியே நின்றன… இதில் பிரதானமாக பாதிக்கப்பட்டது ஏழைகள்… அன்றாடங்காய்ச்சிகள்… தினக்கூலியான அவர்கள், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி, வேலை வாய்ப்பின்றி சொந்த ஊருக்கு திரும்ப விரும்பினர்… இரயில், பஸ் போன்ற எந்த வசதியும் இல்லாததால் நடந்தே ஊர் திரும்பத் தொடங்கினர்… இந்தியாவின் மிக சோகமான நடைபயணம் இது… அந்த வலியின் ஆவணமாக இதைக் கொள்ளலாம்…

#AatmaNirbharBharat

#CoronaQuarantine

படம் 1: Corona பாதிப்பு புகைப்படங்களில் இந்தப் புகைப்படம் மறக்கவே முடியாத மற்றும் மறக்கவே கூடாத ஒன்றாகும்… உணவு என்பதை வாழ்வின் மிகப்பெரிய privilegeஆக கருதுபவன் நான்… அப்படிப்பட்ட இயற்கை உணவு ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடக்கிறது… ஊருக்கு செல்ல வசதி இல்லாததால், சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டதால், இந்தியர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தில் தங்கள் ஊரை நோக்கி நடந்து சென்றிருக்கின்றனர்… இரவில் ரயில் தண்டவாளத்திலேயே உறங்கிய (so, இது விபத்து தான், தற்கொலை அல்ல) அந்த குடும்பத்தினர் மீது இரவில் ஏறி அவர்கள் இறந்திருக்கிறார்கள்… அவர்கள் சமைத்து கொண்டு சென்ற, இங்கே சிதறிக்கிடக்கும் உணவு அவர்களின் தொலைந்துபோன நம்பிக்கைக் கீற்று…
படம் 2: நடந்தே தேயும் இந்தியனின் பாதங்கள்…
படம் 3: வலது கால்…
படம் 4: விரக்தி…
படம் 5: ஆற்றாமை…
படம் 6: பசி…
படம் 7: பயந்தது நடக்கத் தொடங்கியிருக்கிறது… //ஒரு கட்டத்தில் மக்கள் சூறையாட தொடங்கலாம்… முதலில் கடைகள், பிறகு தனி மனிதர்கள் மேல் தாக்குதல்கள் நடக்கலாம்…//
படம் 8: இந்த ஆல்பத்தில், ‘பப்பு’ என்று நக்கல் செய்யப்படும் ராகுல் காந்தி இந்திய migrantsகளுடன் பேசி ஆறுதல் தரும் இந்த புகைப்படத்தை பகிர நிறையவே யோசித்தேன்… அரசியலாக பார்க்கப்படலாம் என்பதால்… ஆனால் பாரத தேசத்தின் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் புலம்பெயர் இந்தியர்களைப் பற்றி உதிர்த்த முத்துக்களுக்கு பிறகு இப்புகைப்படம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது…
படம் 9: காயமடைந்த தன் மகனை கட்டிலில் கிடத்தி, Ludhiana (Punjab) to Singrauli (Madhya Pradesh) 900 km, தோளில் தூக்கி செல்லும் தந்தை…
படம் 10: தன் ஒரு வயது மகனின் மரணத்தை கேட்டு, Delhiயில் இருந்து கிளம்பிய Biharஇன் Ram Pukar Pandit, UP Gateல் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப் படுகிறார்… மரணித்த மகனே நேரில் காண முடியாமல் போனில் விசாரிக்கும் தந்தை…
படம் 11: வேலை பார்க்கும் ஆந்திரப் பிரதேச கடப்பாவில் இருந்து 1300 km தாண்டி சட்டீஸ்கரில் உள்ள தன் சொந்த ஊருக்கு, குழந்தைகளை தூளி கட்டித் தூக்கிகொண்டு கிளம்பிய தந்தை…
படம் 12: குஜராத்தின் சூரத்திலிருந்து தன் சொந்த ஊரான உத்திர பிரதேச பாஸ்திக்கு லாரியில் சென்று கொண்டிருந்த அம்ரித் ராமச்சந்திரனுக்கு வழியில் dehydration + காய்ச்சல் ஏற்பட, கொரனா என்று பயந்து லாரியிலிருந்து (மத்திய பிரதேச ஷிவ்புரியில்) இறக்கி விடப்பட்டார்… நண்பனுடன் இறங்கி அவன் இறக்கும் வரை கூட இருந்த யாகூப் முஹமது இப்பொழுது கொரனா தனிமை வார்டில் கண்காணிப்பில் உள்ளார்…
படம் 13: Pet என்பதும் பிள்ளைதான்…
படம் 14: செல்லப்பிராணி என்பது செல்லப் பிள்ளைக்கு சமானம்…
படம் 15: பசியை வென்ற புன்னகை…
படம் 16: When a little girl the same age as my daughter Reeham, walking barefoot for three days holding a potli on her head, hungry and covered in sweat and dust, with chapped lips, looks you in eye with no expressions and says, “Bahut bhookh laga hai, Uncle.” — it is a whiplash on your soul.
படம் 17: நான் தங்களின் மிதிவண்டியை தங்களின் அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள், எனது மகன் ஒரு சிறப்புக் குழந்தை. அவனை அழைத்துக் கொண்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி என்ற எனது கிராமத்திற்குச் செல்வதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை.!
படம் 18: நெடுஞ்சாலைகள் வழியே தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி நடந்து செல்லும் மக்களின் கால் காயங்களுக்கு மருந்திடும் சீக்கியர்கள்…
படம் 19: டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் இரயிலில் பயணிப்பதற்காக காத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அதிக அழுத்தம் கொண்ட இயந்திரம் மூலம்  கிருமிநாசினியை தெளித்த டெல்லி கார்ப்பரேஷன்… May 25 முதல் flight operations ஆரம்பிக்குது… அந்த விமான பிரயாணிகளை என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்… என்ன அவங்க கொஞ்சம் காசு இருக்கிற ஆடுங்க…
படம் 20: பதுருதின் அலகாபாத்தில் காலனியகம் நடத்தி வருகிறார்… புலம் பெயர்ந்து நீண்ட தூரம் நடைபயணமாக செல்லும் மக்களின் பரிதாப நிலையை கண்ட இவர் தன் கடையில் உள்ள சரக்குகளை எடுத்து வந்து ரோட்டோரத்தில் கடைவிரித்து, “இந்த காலணிகள் தொழிலாளர்களுக்கும், தேவை உடையர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்” என்று பேனர் வைத்துள்ளார்…
படம் 21: ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்… “நில்லுங்கள்… உணவு உண்ணுங்கள்… நீர் அருந்துங்கள்…”

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.