Review

War of the Ring – LOTR

Print Friendly, PDF & Email
“War of the Ring” படைத்தவர்களுக்கு இருந்த அதே குழப்பம் தான் எனக்கும். இதை எனக்கும் எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. ஆனால் இந்த படைப்பை பற்றி எழுதாவிட்டால் எனக்கு ஆறாது. Blogக்கே Blogஆ என்று எண்ண வேண்டாம். நான் இதை புத்தகமாகவே பார்க்கிறேன். Ebooks பல என்னிடம் கொட்டிக்கிடந்தாலும் நான் முழுதாக படித்த முதல் மின்புத்தகம் இது தான்.
நான் Twitterஇல் இருந்து விலகி வந்த மூன்று வருடம் கழித்து Twitterஇல் மீண்டும் நுழைந்து அதே வேகத்தில் பந்து போல திரும்பியும் வந்தேன். ஆனால், இந்த re-entry மூலம் பல Blogs பற்றி அறிந்தாலும்,  சட்டென்று கவனம் ஈர்த்தது ‘கருந்தேள் கண்ணாயிரம்’ (http://karundhel.com). திரைப்படங்கள் பற்றி அலசும் ஒரு தளம். அதிலும் சட்டென்று கவனம் கவர்ந்தது நான் மிகவும் விரும்பும் படம் – செல்லமாக LOTR என்று அழைக்கப்படும் – The Lord of the Rings. சில பதிவுகளை படிக்கும் பொது மிகவும் நன்றாக இருந்தது. அதில் பல பதிவுகள் இருக்கக் கண்டேன். கவனித்தால் ஒரு மின் புத்தகம் ‘War of the Ring’ என்ற பெயரில் இருந்தது. Link குறித்துக் கொண்டு வீட்டில் போய் என் Tabletஇல் download செய்து பார்த்தேன். புத்தகம் LOTRஇன் மொழிபெயர்ப்பாக இருக்குமென்று எண்ணிய எனக்கு அது LOTR பற்றிய பதிவுகளின் தொகுப்பு என்று தெரிந்த போது சந்தோஷமாக இருந்தது. மேலும், இலவசமாக அல்லவா கிடைத்தது இந்த புத்தகம்.

அட்டைப்படம்

முதல் முறை அட்டைப்படம் பார்த்த போது  அந்த படம் வெறும் Graphics வேலையாக தோன்றியது. IT  மக்கள் இந்த PhotoShop வேலையில் எல்லாம் கைதேர்ந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் புத்தகம் படித்து முடித்து மறு முறை புரட்டிய பொது இந்த Cover  உண்மையில் யோசித்து வடிவமைக்கப்பட்டதாக தோன்றுகிறது. Cover  குறிப்பவை என எனக்கு தோன்றுவது:

 • நீங்கள் LOTR என்ற பிரமாண்ட உலகில் நுழைகிறீர்கள்.
 • LOTR பற்றிய விஷயங்களில், நீங்கள் இருளில் இருந்து ஒளியில் அழைத்து செல்லப் படுகிறீர்கள்.
 • நீங்களே தான் துடுப்பு போட்டு LOTR  நோக்கி செல்ல வேண்டும்.
 • Rajesh  என்பவர் அதன் அடித்தளம்.
 • வெகு சிலரே செல்லப் போகின்றனர் – ஆட்டு மந்தை போன்ற கூட்டம் அல்ல.
இவை எல்லாம் உண்மையாக cover வடிவமைக்கப்படும் போது யோசிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. இல்லாத பட்சத்தில், cover design செய்தவரை ஓட்டுவதர்க்கென்றே  ஒரு group கருந்தேள் வட்டத்தில் உள்ளது. அவர்கள் இதை படித்தால் designerஐ தக்கவாறு கவனித்துக் கொள்வார்கள்.

தொடங்கிய விதம்

ஒரு விஷயத்தை பிடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

எனக்கு LOTR  படங்கள் பிடித்திருந்ததற்கு முக்கிய காரணம் அதன் பிரமாண்டம். ஒரு படத்தை இத்தனை பிரமாண்டமாக எடுக்க முடியுமா? அதுவும் தொடர்ச்சியாக 3 படங்கள். எப்படி ஒருங்கிணைத்திருப்பார்கள்? நடிகர்கள் எப்படி தொடர்ச்சியாக நடித்தார்கள்? Technicians எப்படி சம்பளம் உயர்த்தாமல் வேலை செய்தார்கள்? Continuity எப்படி கையாளப்பட்டது? கதை எப்படி பிடித்தார்கள்? இத்தனை கேள்விகள் எல்லாம் இருந்தாலும், படம் பார்க்கும் பொது வாய்மூடாமல் படம் பார்ப்பேன். பிரமாண்டம் கட்டிப்போட்டது – உதாரணமாக, Legolas  அந்த Oliphantஐ கொல்லும் காட்சி.
கருந்தேள் வட்டத்திற்கு LOTR பிடித்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் தங்களுக்கு பிடித்த விஷயத்தை புத்தகமாக கொண்டு வந்ததில் அவர்கள் தனித்து நிற்கின்றனர். Hats Off to them. புத்தகத்தின் முன்னுரையில் LOTR மீதான ஈர்ப்பை Rajesh சொல்கிறார். எனக்கு மிகவும் பிடித்த ‘Age of Empires’ அவருக்கும் பிடித்தது என்று படித்த போது இந்த புத்தகத்தின் மீதும் எனக்கு ஒரு bonding ஏற்பட்டுவிட்டது. அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று தயக்கமின்றி ஒப்புக்கொள்கிறார்கள். Terror comments போடுபவர்களை பற்றி வாறி விடும்போது, இந்த புத்தகம் ரொம்ப seriousஆக இருக்கப்போவதில்லை என்று தெரிந்து விட்டது. (இதற்கு பயந்து அல்ல, WOTR பிடித்ததலேயே இந்த பதிவு).  மேலும் இந்த புத்தகம் blog நடையிலேயே இருக்கப்போகின்றதென்று  தெரிந்து விட்டது. அனைத்தையும் தாண்டி என்னை ஆச்சரியப்படுத்தியது
எங்கிருந்து எடுக்கப்பட்டதோ, அங்கேயே முழு நிறைவுடன் இந்த மின்புத்தகம் வைக்கப்படுகிறது
என்று சொல்லி இதை இலவசமாக இணையத்தில் வெளியிட்டதுதான்.
கொழந்த Saravana Ganesh ஒரு trailer உருவாக்கியிருக்கிறார், இந்த WOTRருக்காகவே ஸ்பெஷலாக. அதையும் பார்த்து விடுவது நல்லது. இல்லையெனில் கருந்தேள் வட்டம் உங்களை சும்மா விடாது. பார்த்தாலும் கருந்தேள் வட்டத்தில் இருவர் உங்களை சும்மா விடப்போவதில்லை.

எழுத்து நடை

எந்த புத்தகத்தையும் படிக்க தூண்டுவது அதன் எழுத்து நடை தான். அது சரி இல்லேனா எல்லாம் குப்பை ஆயிடும். பள்ளி பருவத்தில் பாடங்கள் சில பிடிக்காமல் போக எழுத்து நடையே காரணம் என்பது என் கருத்து. இந்த Blog யுகத்தில் எழுத்து நடையே மிகவும் simple ஆகி விட்டது. ஆனால் பலருக்கும் இந்த simple  நடை தான் பிரச்சினை. நம்ம levelக்கு கீழே வந்து புரிய வைக்க வேண்டும். இப்படி எனக்கு பிடித்த நடையை படித்தது மதனின் “வந்தார்கள் வென்றார்கள்” புத்தகத்தில் தான். மிக எளிதாக புரியும் வகையில் இருக்கும். WOTR எனக்கு அதைப்போல தோன்றியது. Blog என்பதால் மேலும் சில விஷயங்களும் விஷமங்களையும் மிக எளிதாக நுழைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, முதல் தொகுதி முடிவில் பழைய LOTR படம் பார்த்து பின் மூன்று பாகங்களையும் படித்து முடித்த 17 வயது இளைஞர் பற்றி WOTR இரண்டாம் பாகத்தில் படித்த போது ‘நா அப்படியே ஷாக் ஆயிட்டேன்’. பின் seriousஆக போவோம் என்று கூறினாலும் WOTR முழுக்க இது போன்ற எழுத்து நடை கையாளப்பட்டுள்ளது. மேலும் சில மாதிரிகள் கிழே:

 • சிறுவனாக இருந்த ஜாக்சன் வளர்ந்தான் (சைக்கிள் பெடலை சுற்றாமலேயே).
 • ஹார்வி மட்டும் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால், பீட்டர் ஜாக்சனின் வீட்டுக்கு எக்கச்சக்க ஆட்டோக்களை அனுப்பியிருப்பார்.
 • ‘ஜாலிக்கிறுக்கு’ சண்டைக்காட்சிகள்.
 • சில சமயங்களில் ஜாக்சன் கொஞ்சம் ஓவராகவே கதையில் கைவைப்பதின் உதராணம் இது.
 • படத்திலோ, இருவரும் தாமுவையும் வையபுரியையும் போல காமெடியன்களாகவே காட்டப்படுகிறார்கள்.
இவை தவிர பல தூவல்கள் உள்ளன, புத்தகமெங்கும்.

விஷயம்

அட்டகாசம்.

இணையத்தில் இன்று அனைத்தும் கிடைக்கும் வேளையில் அதை தேட பொறுமை வேண்டும். “That, Detective, is the right question”, என்று I, Robotஇல் சொல்வது போல.  எத்தனை விஷயங்கள்? எவ்வளவு உழைப்பு? LOTR மீது கொண்ட காதலால் கருந்தேள் வட்டம் இதை ரசித்தே செய்திருக்கும். பிரமிக்கவைக்கும் விஷயங்கள். நாம் யோசித்திருக்கவே செய்யாத விஷயங்களையும் சொல்லி “பார்”, “இதை கவனி” என்று நம் கை பிடித்து அழைத்து செல்கிறது. ஒவ்வொரு விஷயம் படித்த பின் –

 • “ஆமால்லே”
 • “இப்படி இருக்கும்னு யோசிக்கலேல்லே”
 • “இது நிசமா?”
 • “இந்தாளு கதை விடரானோ?”
 • “இதை செக் பண்ணி பார்த்துடணும்”
 • “எல்லாம் ஐ’வாஸ். நாம ஒரிஜினல் படிக்க மாட்டோம்’ன்ற நெனப்புலே எழுதுராப்புலே”
போன்ற எண்ணம் தோன்றுவதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. அவ்வளவு ஆழமான quest of informations. ஏன் இவ்வளவு தேடல்? ஒரு விஷயத்தை இவ்வளவு ஈடுபாடோடு அணுக முடியுமா? விஷயங்கள் 25க்கும் மேற்ப்பட்ட தொகுதிகளாக நீள்கின்றன. சில விஷயங்கள் கீழே:
 • படத்தின் உரிமை மற்றும் விற்பனை
 • நடிகர்களின் தேர்வு மற்றும் பின்னணி
 • WETA
 • சித்திரங்கள் மற்றும் இசை
 • ஐந்து வகையில் கையாளப்பட்ட Bigatures
 • உடைகள் மற்றும் ஆயுதங்கள்
 • கொல்லும் (இத மறந்தா கருந்தேள் வட்டம் என்னை கொல்லும்)
 • MASSIVE
 • வரலாறுகள் – Rohan, Elf, Dwarf, Numenor, Hobbit, Saruman, etc. (அட, அந்த Shelob சிலந்திக்கு கூட வரலாறு இருக்குப்பா)
 • காண்டாரின் விளக்குகள்
 • டோல்கீன் அறிந்த மற்றும் உருவாக்கிய மொழிகள்
 • LOTR புத்தகம் மற்றும் படத்தின் வித்தியாசங்கள்
 • வரைபடங்கள்
LOTR பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த WOTR ஒரு எளிதான கையேடாகும்.

வடிவமைப்பு

அழகான பெண்ணுக்கு அலங்காரம் போல WOTRஇன் வடிவமைப்பு அசத்துகிறது.

செய்திக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் அதற்கேற்ப படங்கள் உள்ளன. பீட்டர் ஜாக்சனின் “எப்படியிருந்த நான்…” ஒரு உதாரணம். எனக்கு பிடித்தது Screenplay தொகுதியில் உள்ள படங்கள் – மிக எளிதாக 3 படங்களையும் சொல்லி விடுகிறது. அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட screenshots கன கச்சிதம். நான் ரசித்த மேலும் சில கீழே:

 • Cast and Charsஇல் உள்ள நடிகர்களின் படங்கள் மற்றும் அதன் pencil drawing பின்னணி
 • எந்த இடத்திலும் ராமராஜனை தோற்கடிக்கும் வண்ணம் இல்லை – அந்த Rohan பச்சை தவிர்த்து
 • ஒவ்வொரு தொகுதியின் முன்படமும் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (Numenor மட்டும் புரியாமல் சந்தேகம் கேட்டதால் ‘ஹாலிவுட் பாலா’வுக்கு என் மேல் சற்று வருத்தம் இருக்கலாம்)
 • ‘The Horse’ மற்றும் ‘Appendix’ கொஞ்சம் scientificஆக ஆகி விட்டது
 • Shelob தொகுதிக்கு SpiderMan பின்னணி கொஞ்சம் காமெடி என்றாலும் (அந்த Shelobக்கான seriousness போய்விடுகிறது) பொருந்துகிறது
 • எடிட் செய்யப்படாத ‘editing’ தலைப்பு ஒரு நல்ல ஐடியா
மொத்தத்தில் வண்ணப் பதிப்பு போட்டாலும் புத்தகம் அட்டகாசமாக மிளிரும்.
‘Creation of Gollum’ தொகுதி மட்டும், பத்திகள் இரண்டு பக்கமும் மாறி மாறி தொடர்வதால், சற்று தலையை ஆட்டி ஆட்டி படிக்க வேண்டி இருந்தது.
‘Maps’ தொகுதி நான் கூர்ந்து பார்க்கவில்லை. அது தனியாக ரொம்பவும் informative ஆகிவிட்டதால் நான் skip செய்துவிட்டேன்.

துணுக்குகள்

பல வருடங்கள் முன்பு ‘முத்தாரம்’ மற்றும் ‘கல்கண்டு’ படித்ததுண்டு. அனைத்து விஷயங்களும் குட்டி குட்டியாக அழகாக இருக்கும். இப்போது விகடனில் வரும் ‘இன்பாக்ஸ்’ வரை இந்த துணுக்கு format படிக்க தூண்ட தவறியதில்லை. அந்த வகையில் WOTR முழுக்க இப்படிப்பட்ட துணுக்குகள், பக்கத்துக்கு ஒன்றாக, தூவப்பட்டுள்ளதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இருப்பதிலேயே துணுக்கு எழுதுவது தான் கஷ்டம் என்பது என் எண்ணம். துணுக்கு குட்டியாக, சுவையாக, உண்மையாக இருக்க வேண்டும். வர்ணனைக்கெல்லாம் அதில் இடம் இல்லை. மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் துணுக்கு மிகவும் பயன்படும். Twitter எவ்வளவு famous ஆக காரணம், இந்த சுருங்கச் சொல்லும் துணுக்கு முறை தான். WOTR துணுக்குகள் சில கீழே:

 • ஒரே மூச்சில் படித்தால் (அதாவது தொடர்ச்சியாக) LOTR படிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
 • அறுபதுகளில், LOTR படங்களில் நடிக்க ஆசைப்பட்ட இசைக்குழு எது?
 • New Zealand  அரசு எதற்காக LOTRகென்றே ஒரு அமைச்சரை நியமித்தது?
 • ‘டோல்கீன்’ என்பதன் அர்த்தம் என்ன?
 • LOTR நடிகர்களில் Tolkeinஐ நேரில் சந்தித்த ஒரே நபர் யார்?
 • ‘Quenya’ மொழியின் வரலாறு என்ன?
 • Bilbo Bagginsஇன் வீடு ஏன் இரண்டு set வடிவமைக்கப்பட்டது?
 • கிம்லி உயரமா? லேகோலஸ் உயரமா?
 • மோதிரம் அழிக்கப்படும் தேதி ‘March 25’. ஏன்?
 • Orcsஇன் வாய் ஏன் & எப்படி கறுப்பாக்கப்பட்டது?
 • LOTR நாடக வடிவத்தின் பிரதான இசையமைப்பாளர் யார்?
 • மார்டோரின் ‘Black Gates’ ஏன் படத்தில் இரண்டாக உருவாக்கப்பட்டன?

இவை சாம்பிள் தான். படிக்க படிக்க இன்னும் பிரமிப்பு ஏற்படும். இந்த துணுக்குகளை நண்பர்களிடம் பகிர்ந்து, நான் LOTR விஷயங்களில் பிஸ்து என்று collarஐ தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

உணர்வுகள்

இருநூற்றி ஐம்பது பக்கம் எழுதியும் தீராமல் மேலும் இரண்டு பக்கத்துக்கு feelings. ஆனால், yes, ஒரு நல்ல விஷயம் முடியும் போது விட்டு வர மனம் வராது. இன்னும் கொஞ்சம் அதிலேயே உழலத் தோன்றும்.

பாலா ஒப்புக்குள்ளும் “this is my precious” ஒரு உண்மையான எண்ணம். அதை ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்டதற்கு பாராட்டுக்கள். “அடடா… நாமும் இந்த முயற்சியில் பங்கு கொள்ள தவறி விட்டோமே” என்று எண்ணவைத்து விட்டது WOTR படித்து முடித்தபோது; எனக்கு LOTR  பற்றி முன்பு எதுவும் தெரியாது என்றபோதிலும். LOTR போல பைத்தியமாக்கும் படி வேறு விஷயம் கிடைத்தால் அது பற்றி எழுதுவதாக சொல்லி இருக்கிறார்கள். அப்படி கிடைத்தால் நானும் பங்கு எனக்கு மிகவும் ஆர்வம் (தகுதி வேறு விஷயம்). பார்க்கலாம்.

தமிழில் இந்த மின்புத்தகம் வந்ததில்லை. இதற்காவே இந்த புத்தகத்தை என் Tabletஇல் வைத்துக்கொண்டு அனைவருக்கும் காண்பித்துக்கொண்டிருக்கிறேன், தமிழ் தெரியாதவர்களிடமும். WOTRக்கான நேரடி Linkஐ இங்கு நான் தரவில்லை. கருந்தேள் பதிவில் சென்று நீங்களே தேடிக்கொள்ளுங்கள். ஏனெனில், அப்படிப்பட்ட தேடலின் போது மேலும் பல பதிவுகளை நீங்கள் சந்திப்பீர்கள்.

மெருகூட்டல்

எழுத்துப் பிழைகள் உள்பட சில திருத்தங்கள் உள்ளன. மிகச் சிறந்த ஓர் புத்தகத்தில் என் கண்ணில் பட்ட இவைகளும் நீக்கப்பட்டால் இன்னும் அருமை. கருந்தேள் வட்டம் அனுமதிக்கும் பட்சத்தில் அவற்றை இங்கேயே update செய்ய உத்தேசம்.
WOTRஇன் ஆசிரியர் ராஜேஷின் அனுமதியின் பேரில் கீழ்க்கண்ட மெருகூட்டல்களை முன்மொழிகிறேன். இவை திருத்தப்பட்டால் இங்கேயே “திருத்தப்பட்டது” என்றும் குறித்து வைப்பேன்.
 1. Chapter 10 – Costumes & Propsக்கு பிறகு நேராக Chapter 12 – Music  வந்துவிடுகிறது. அதன் பின் Chapter 11 – Fellowship of the  Ring வருகிறது. இந்த தலைப்புப் பக்கங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். பக்கங்கள் 96 மற்றும் 104 swap செய்யப்படவேண்டும். அப்படி தலைப்புப் பக்கங்கள் மாற்றப்பட்டால் பக்கம் 8இல் index வரிசையும் மாற்றப்பட வேண்டும். அல்லது index வரிசை மாற்றாமல் Chapter 11 மற்றும் Chapter 12 மொத்தமாக swap செய்யப்பட வேண்டும். – திருத்தப்படவேண்டும்
 2. பக்கம் 10 வலது பத்தி கடைசி வரியில் வரும் ‘NZDC’ திருத்தப்பட வேண்டும், ‘NZFC’யாக. – திருத்தப்படவேண்டும்
 3. பக்கம் 16இன் துணுக்கு, “கோல்லுமின் ஒரேயொரு frame , முழுதாக திரையில் தெரிய எட்டு நிமிடங்கள் ஆனது” முதலில் படித்தபோது புரியவே இல்லை. பக்கம் 160இல் உள்ள பி.கு. படித்த பிறகுதான் புரிந்தது. ஒரு வேளை, “கோல்லுமின் ஒரேயொரு frame , முழுதாக திரையில் கொண்டுவர எட்டு நிமிடங்கள் ஆனது” என்றிருந்தால் புரிந்திருக்குமோ?
 4. பக்கம் 60 Faramir பத்தி இரண்டாவது வரியில் வரும் ‘விட்ட்டுவிட்டு’ திருத்தப்பட வேண்டும், ‘விட்டுவிட்டு’ என. – திருத்தப்படவேண்டும்
 5. பக்கம் 116 Creation of Gollum பத்தி ஐந்தாவது வரியில் வரும் ‘தேவு’ திருத்தப்பட வேண்டும், ‘தேர்வு’ என. – திருத்தப்படவேண்டும்
 6. பக்கம் 121 Riddle in the dark பத்தி முதல் கேள்வியில் வரும் ‘GOES,W’ திருத்தப்பட வேண்டும், ‘GOES,’ என. – திருத்தப்படவேண்டும்
 7. பக்கம் 130 Intercuts பத்தி ஏழாவது வரியில் வரும் ‘கோட்ட்டையாகிய’ திருத்தப்பட வேண்டும், ‘கோட்டையாகிய’ என. – திருத்தப்படவேண்டும்
 8. பக்கம் 151 last but third வரியில் வரும் ‘இயோமர’ திருத்தப்பட வேண்டும், ‘இயோமர்’ என. – திருத்தப்படவேண்டும்
 9. பக்கம் 170 பலாண்டிர் பத்தி பதினாலாவது வரியில் வரும் ‘தன’ திருத்தப்பட வேண்டும், ‘தன்’ என. – திருத்தப்படவேண்டும்
 10. பக்கம் 205 இடது பக்க பத்தியில் உள்ள ‘பண்டையகால கிரேக்கம்’ indent செய்யப்பட வேண்டும். – திருத்தப்படவேண்டும்
 11. பக்கம் 206 இடது பக்க நாலாவது பத்தி இரண்டாவது வரியில் வரும் ‘எல்விஷ’ திருத்தப்பட வேண்டும், ‘எல்விஷ்’ என. – திருத்தப்படவேண்டும்
 12. பக்கம் 229 வலது பக்க பத்தி பனிரெண்டாவது வரியில் வரும் ‘சம்பவவங்களின்’ திருத்தப்பட வேண்டும், ‘சம்பவங்களின்’ என. – திருத்தப்படவேண்டும்
 13. பக்கம் 229இன் துணுக்கில் வரும் ‘எல்விஷ’ திருத்தப்பட வேண்டும், ‘எல்விஷ்’ என. – திருத்தப்படவேண்டும்
 14. பக்கம் 237 Novel version  of தியோடனின் மரண sequence 10இல் வரும் “இயோமர் தியோடனிடம் பேசுகிறான்” தவறோ என்று தோன்றுகிறது. “இயோவின் தியோடனிடம் பேசுகிறாள்” என்றிருந்திருக்க வேண்டுமோ? – திருத்தப்படவேண்டும்
 15. பக்கம் 244 இடது பக்க மூன்றாவது பத்தி எட்டாவது வரியில் வரும் ‘ஹாபித்ஸ்’ திருத்தப்பட வேண்டும், ‘ஹாபிட்ஸ்’ என. – திருத்தப்படவேண்டும்

உன் blogஇல் தவறுகள் மற்றும் spelling mistakes இல்லையா என்று கேட்பவர்களுக்கு – போங்க சார்… காமெடி பண்ணாதீங்க. நாம தமாசுக்கு எழுதுறோம். கொஞ்சம் முன்ன பின்ன தான் இருக்கும். WOTR அப்படி இல்லை. புத்தக உருக்கொண்டுவிட்டது. பிழைகள் இல்லாதிருந்தால்அட்டகாசமாக இருக்கும். அதனால் தான் இந்த மெருகூட்டல். யாரும் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது please.

ராஜேஷ், பாலா மற்றும் சரவணா கணேஷ் எப்போது கூறினாலும் ‘மெருகூட்டல்’ படுதியை தூக்கிவிடுவேன். நீங்கள் மெயில் செய்ய வேண்டிய எனது மின் அஞ்சல் [email protected]

Karthik Nilagiri

Related posts

2 Comment's

 1. மிக்க நன்றி நண்பரே… ஆதி முதல் அந்தம் வரை பிரித்து மேய்ந்து விட்டீர்கள்!! உங்களது கூர்மையான அவதானிப்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். எழுத்துப்பிழைகளைப் பற்றி- உள்ளதை உள்ளபடியே நீங்கள் போடலாம். தவறே இல்லை. மிகுந்த ஆர்வத்துடன் உங்கள் பதிவைப் படித்தேன் 🙂

 2. அட்டகாசமான விமர்சனம்.. அதிலும் அந்த துணுக்குகள் பற்றி எல்லாம் சொல்லி அசத்திடிங்க..

Leave a Reply

Your email address will not be published.