சீனாவில், தியனன்மென் சதுக்கத்தில் நடக்கும் மாணவர் புரட்சியை ஒடுக்க இராணுவத்தின் பீரங்கிப் படை அணிவகுத்து வருகிறது. அதை தடுத்து நிறுத்தும் வகையில் ஒருவர் அந்த அணிவகுப்பை எதிர்த்து நிற்கிறார். பீரங்கியை ஓட்டும் ராணுவ வீரர்களிடம் பொறுமையாக, பதட்டமில்லாமல் விவாதம் புரிகிறார், அல்லது விளக்க முற்படுகிறார். இந்த சம்பவம் நடந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் அவர் யார், அவர் பெயர் என்ன, இப்பொழுது எங்கிருக்கிறார் அல்லது என்ன ஆனார் என்று இதுவரை நமக்குத் தெரியாது. அவரை டேங்க் மேன் (Tank Man), அதாவது பீரங்கி […]
தற்செயலானதா என்று தெரியவில்லை. இந்த புத்தகத்தைப் படித்த சில நாட்களுக்குள் இந்த செய்தியைக் படிக்க நேர்ந்தது. “மற்றுமொரு நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து. இரண்டு வீரர்கள் மாயம் மற்றும் ஐந்து வீரர்கள் காயம். கடந்த ஆறு மாதத்தில் பல்வேறு இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளில் ஏற்பட்ட விபத்துகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி பதவி விலகினார்.” நான் 2001’இல் வேலை தேடி அலைந்த போது தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பற்படை மூன்றுக்கும், கிராமத்தில் இருந்து ஓடிப்போகும் எந்தவொரு நாயகனுக்கும் ராணுவத்தில் வேலை கிடைத்து பார்த்திருக்கும் நம்பிக்கையில், விண்ணப்பித்து […]
(இதற்கு முன்…) ராக்கெட் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பைட்டிருந்த சாட்டர்ன் V (1970s) ‘சாட்டர்ன் V’ ராக்கெட்டின் பாகங்கள் பல்வேறு இடங்களில் இருந்து ஃப்ளோரிடாவின் VABக்கு வந்து ஒருங்கிணைக்கப்படுகின்றது. முதல் நிலை பூஸ்டரும், இரண்டாம் நிலை பூஸ்டரும் கப்பலில் வந்து இறங்கிவிடும். மூன்றாம் நிலை பூஸ்டர் கொஞ்சம் குட்டி. அதனால் அதை முதலில் சேப்பெளின் (Zeppelin) எனப்படும் காற்றடைத்த பெரிய பலூன் வாகனம் மூலம் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, சோதனை முயற்சிகள் தோல்வியடைந்ததால், கைவிடப்பட்டது. அந்த நேரத்தில் ஜான் கான்றாய் (John M. […]
இந்த வாரம் பழைய கல்லூரி நண்பன் சௌந்தர் ராஜனை சந்தித்தேன், அவன் அக்கா வீட்டில். அப்பொழுது நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதில் ஒரு கமெண்ட்டாக மற்றொரு கல்லூரி நண்பன் தியாகராஜன், ‘அப்ப இன்னொரு பதிவு எதிர்பார்க்கலாமா’ என்று கேட்டிருந்தான். Madras Institute of Technology – சுருக்கமாக MIT – பல நினைவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவு. சீனியர், ஜூனியர், நட்பு, காதல், கடலை, அடிதடி, தண்ணி, தம், தற்கொலை முயற்சி, வெள்ளிக்கிழமை சிக்கன், பண்டு, லேடீஸ் ஹாஸ்டல், ராதா […]
முகநூலில் பிரவின் குமார் என்ற நண்பர் தான் படித்த தமிழ் புத்தகங்களை பட்டியலிட்டிருந்தார். சித்தார்த் கந்தசாமி என்ற மற்றொரு நண்பர் என் பெயரை அந்த பதிவில் இணைத்திருந்தார். எத்தனை பரந்துபட்ட வாசிப்பு. பலதரப்பட்ட எழுத்தாளர்கள். நான் அதில் பத்தில் ஒரு பங்கு கூட படித்திருக்க மாட்டேன். பல ஆசிரியர்களின் பெயர்களே தெரியவில்லை. இன்னும் தேடித் தேடி படிக்க வேண்டும். என் குட்டி நூலகம் இங்கு நான் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரும் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன். ஒரு Extemporeதான். சுஜாதா. மிக […]