வரிசைகளில்…கழிவறையில்…நூலகங்களில்…நகைக்கடைகளில்…மெட்ரோ இரயிலில்…புத்தகக் கடைகளில்…மோனோ இரயிலில்…பல் விளக்குகையில்…புடவைக் கடைகளில்…காஃபி குடிக்கும் போது…விமான நிலையங்களில்…வோட்கா தருணங்களில்…மனம் பறக்கும் நேரங்களில்…மிக பாரமான வேளைகளில்…இரயிலுக்கு காத்திருக்கையில்…காலை டிஃபன் சாப்பிடும்போது…இரயில் மாற காத்திருக்கையில்…நள்ளிரவில் முழிப்பு வருகையில்…மருத்துவமனைக் காத்திருப்புகளில்…நீண்டதூர இரயில் பிரயாணங்களில்…பழக்கடையில் ஜூஸ் குடிக்கையில்…அலாரம் ஸ்நூஸ் இடைவெளிகளில்…விடியற்காலை தூக்கம் கலைகையில்…மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கையில்…முக்கியமான மீட்டிங்’க்கு தயாராகையில்…அழகியொருத்தி என்னைக் காணும்போது…ஆட்டோவில் ஸ்டேஷன் செல்லும்போது…மனைவி விசேஷத்துக்கு தயாராகும்போது…குழந்தைகள் விளையாடாமல் தூங்கும்போது…மனைவி அம்மா வீட்டுக்கு சென்றிருக்கையில்…மாமனார் மாமியார் வீட்டுக்கு வந்திருக்கையில்…இரயில் கூட்டத்தில் பிதுங்கி மேலே பை வைத்தபின்…விமானத்தில், பணிப்பெண்கள் அருகிலில்லாதபோது…குழந்தைகள் […]
(இதற்கு முன்…) அப்போலோ திட்டத்தின் மூலமாக நிலவுக்கு சென்று வந்தவர்கள் 24 பேர். அதில் 12 பேர் நிலவில் இறங்கி தடம் பதித்துள்ளனர். 12 பேர் நிலா வரை சென்று, ஆனால் அதைத் தொடாமல், திரும்பி வந்துள்ளனர். ஒவ்வொரு அப்போலோ பயணத்திலும் மூன்று வீரர்கள் இருப்பார்கள். இருவர் லூனார் மாட்யூல்’இல் கிளம்பிச் சென்று நிலவில் இறங்கி ஆராய்ச்சிக்காக கல்லையும் மண்ணையும் பொறுக்கிக்கொண்டிருப்பார்கள். ஒரு வீரர் இவர்கள் திரும்பி வரும் வரை கமாண்ட் மாட்யூல்’இல் நிலவை சுற்றி வந்துகொண்டிருப்பார். அப்போலோ 13’இன் பாதிக்கப்பட்ட சர்வீஸ் மாட்யூல் (கழற்றி […]
“All are equal; but some are more equal” யாராவது தன் அமைப்பில் தனக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி என்னிடம் புலம்பும்போது நான் உதிரும் முத்துக்கள் இவை. எப்படி என் மனதில் இது பதிந்தது அல்லது எங்கு படித்தேன் என்று எனக்கே நினைவில்லை. ஆனாலும் சொல்லிக்கொண்டிருந்தேன் – “அனைவரும் சமம்; சிலர் சற்று கூடுதலாகவே சமம்”. சென்ற திங்கட்கிழமை மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (CST) என்று தற்போது அழைக்கப்படும் விக்டோரியா டெர்மினஸ் (VT) சென்றிருந்தேன். […]
(இதற்கு முன்…) ஜூன் 12, 1969. மதியம் 12:30. ஏவல் ஆணைக்குக் காத்திருக்கும் ராக்கெட் அப்போலோ 11 – சாட்டர்ன் V ஏவுதளத்தில் நிலை கொண்டு 23 நாட்கள் ஆகிவிட்டிருந்தது. அப்போலோவின் திட்ட இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஸாமுவேல் ஸி. பிலிப்ஸ் (Lt. Gen. Samuel C. Phillips), வாஷிங்டன் D.C.’யில் அமைந்துள்ள நாசா’வின் தலைமையகத்தில் ஒரு உயர்மட்ட சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு டஜன் நிர்வாகிகள் அந்த அறையில் குழுமியிருந்தனர். மேலும், நாடெங்கிலுமிருந்து இரண்டு டஜன் நிர்வாகிகள் டெலிபோன் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர். […]
நமக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. எந்தவொரு பழக்கத்தையும் லேசில் விட மாட்டோம். ஏன் செய்கிறோம் என்று தெரியாது, ஆனால் செய்வோம். அதில் ஒன்று ‘பிள்ளையார் சுழி’. ஒரு பக்கத்தில் எழுத ஆரம்பிக்கும் போது, தலைப்பில், இந்த பிள்ளையார் சுழி போடுவது தமிழர்களின் வழக்கம் மற்றும் கலாச்சாரம். முழு முதற் கடவுள் பிள்ளையார். கோவிலிலும் அவரைத்தான் முதலில் வணங்குவோம். தெய்வீக அம்சம், மஹாபாரதம் எழுதியவர், பொதுத் தேர்வுகளில் பாஸ் செய்ய உதவுபவர் என்ற பல காரணத்தால் பிள்ளையாரும் அவர் பெயரால் நிலவும் இந்த […]