இந்த வாரம் பழைய கல்லூரி நண்பன் சௌந்தர் ராஜனை சந்தித்தேன், அவன் அக்கா வீட்டில். அப்பொழுது நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதில் ஒரு கமெண்ட்டாக மற்றொரு கல்லூரி நண்பன் தியாகராஜன், ‘அப்ப இன்னொரு பதிவு எதிர்பார்க்கலாமா’ என்று கேட்டிருந்தான். Madras Institute of Technology – சுருக்கமாக MIT – பல நினைவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவு. சீனியர், ஜூனியர், நட்பு, காதல், கடலை, அடிதடி, தண்ணி, தம், தற்கொலை முயற்சி, வெள்ளிக்கிழமை சிக்கன், பண்டு, லேடீஸ் ஹாஸ்டல், ராதா […]
முகநூலில் பிரவின் குமார் என்ற நண்பர் தான் படித்த தமிழ் புத்தகங்களை பட்டியலிட்டிருந்தார். சித்தார்த் கந்தசாமி என்ற மற்றொரு நண்பர் என் பெயரை அந்த பதிவில் இணைத்திருந்தார். எத்தனை பரந்துபட்ட வாசிப்பு. பலதரப்பட்ட எழுத்தாளர்கள். நான் அதில் பத்தில் ஒரு பங்கு கூட படித்திருக்க மாட்டேன். பல ஆசிரியர்களின் பெயர்களே தெரியவில்லை. இன்னும் தேடித் தேடி படிக்க வேண்டும். என் குட்டி நூலகம் இங்கு நான் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரும் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன். ஒரு Extemporeதான். சுஜாதா. மிக […]
உதவி செய்றதுலே நம்மாளுங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. நமக்கு ஒரு உதவி தேவைப்படும்போது குபீரென்று நாலாபக்கமிலிருந்தும் ஹீரோவிடம் அடிவாங்க வரும் வில்லன் போல பாய்ந்து வருவார்கள். நிற்க. உதவி என்ற சொல்லில் பண உதவி அடங்காது. பொதுவாக உதவி என்பது அறிவுசார் (intellectual) உதவியாகவே இருக்கும். சிம்பிளா தமிழ்லே சொன்னா அட்வைஸ். நண்பனுக்கு நண்பன் எனக்கு நண்பனே என்ற கான்செப்டே இங்கு கிடையாது. எவனும் எனக்கு நண்பனேதான். உங்கள் வண்டியை சற்று ஓரமா நிறுத்திட்டு சற்று சாய்த்தோ அல்லது கொஞ்சம் தட்டிகிட்டயோ பாருங்கள். […]
“I’m a dog chasing cars. I wouldn’t know what to do with one if I caught it.” – The Joker and… I’m no Joker… 03-May-2013(வர்ஷா அப்போ பொறக்கவேயில்ல ) சிறிது நாட்களுக்குமுன் குழந்தைகளையும் சசியையும் கூட்டிக்கொண்டு அருகில் களம்போலியில் இருக்கும் McDonald’sக்கு சென்றிருந்தேன். கொதிக்கிற எண்ணைக்கு பயந்து நெருப்பிலே விழுந்த மாதிரிதான் எப்பவும் நடக்கும். வீட்டு சப்பாத்திக்கு பயந்து அங்கே போய் வறட்டு வறட்டு என்று காய்ந்த பிரட் தின்றுவிட்டு வருவோம். வீட்டு […]
அழைப்பு ரகுராம் அலைபேசியில் அழைத்து சொன்னபோது மறுக்கமுடியாது. மும்பையில் இருக்கும் ஒரே MIT கல்லூரித் தோழன். Batchmate. மற்றும் முக்கியமாக மதுரைக்காரன். திருமணம் சென்னையில் என்றாலும் கண்டிப்பாக வருவதாக கூறினேன். அந்த காலத்தில் நல்லவர்கள் இருந்தார்கள். விழாவை சிறப்பிக்க அழைத்தால் டிக்கெட்டும் எடுத்துக் கொடுப்பார்கள். ரகு அத்தனை நல்லவனில்லை போலும். அல்லது விவரம் போதவில்லை. பத்திரிகை மட்டும் வைத்தான். அவனை குறை சொல்ல முடியாது. கடந்த நாலைந்து வருடங்களாக இதுதான் ட்ரெண்ட் போல. என் மாமனார் வீட்டிலும் வாயார அழைப்பார்கள். விருந்தும் வைப்பார்கள். […]