Experience

ஏப்ரல் ஃபூல்

டிஸ்கி: இது ஒரு ஏப்ரல் ஃபூல் பதிவு. ஒரு மூன்று நான்கு வருடம் முன்பு ஒரு பயிலரங்கில் சந்தித்த பெண் நிமிஷா. ஐந்து நாள் பயிலரங்கில், இரண்டாம் நாளே என்னுடன் ஒட்டிக்கொண்டாள். விகல்பமற்றவள். சிரிப்பினூடே பேசிக்கொண்டே இருப்பாள். ஆந்திரா என்றாலும், படித்து வளர்ந்தது கொச்சின். பின், எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு மீட்டிங்கில் சந்தித்து விடுவோம். மீட்டிங் நாட்களில் டீ பிரேக், லஞ்ச் நேரங்களில் ஓடி வந்து ஒட்டிக் கொள்வாள். சற்றே அதிக […]

Read more
Experience

நூறு ரூபாய்

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? இவர்களை நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்திருக்கலாம். ஒல்லியான, கணுக்கால் வரை பேண்ட் போட்டு, இன் செய்யாத முழுக்கை சட்டை அணிந்து, புகையிலை போடாமல், கறை படிந்த பற்களுடன், ரப்பர் செருப்பு அணிந்து, ஒரு மூன்று அல்லது ஐந்து வயது குழந்தையை வைத்துக்கொண்டு இருக்கும் தந்தை. அவர் பின்னே உயரம் அதிகமில்லாத, அதே ஒல்லியான, முக்காடு அணிந்தோ அணியாமலோ புடவை கட்டி, பிளாஸ்டிக் வளையல் அணிந்து, மூக்குத்தி குத்தி, ஒரு கைக்குழந்தையை வைத்துக்கொண்டிருக்கும் தாய். இருவர் முகத்திலும் பரிதாபம் […]

Read more
Experience

Whatsapp’இல் இருவர்

Whatsapp குரூப் பத்தி நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். Whatsappல இல்லாத ஆளு உண்டா? இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா? நாம பாட்டுக்கு நாம நம்ம வேலைய பார்த்துக்கிட்டு இருப்போம். த்திடீர்ன்னு நம்மள ஒரு whatsapp குரூப்’ல கோத்து விட்ருவாங்க. அதுல வர்ற காலை/மாலை வணக்கம் + நாலு அடி தாண்டி நீளும் forwardகளை delete செய்தே நாம் ஓய்ந்திருப்போம். ரெண்டு மாசம் கழிச்சி குரூப் ரொம்ம்ம்ப அமைதியா போய்ட்ருக்கும். அப்ப பொழுது போகாம யாராச்சும் […]

Read more
Experience

மின்னல் தேவதைகள்

மின்னல் தேவதைகள் திடீரென்று தோன்றுவார்கள்… அது அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா மோதிக்கொள்ளும் நாளாகவும் இருக்கலாம்… கிரிக்கெட்டில் ஆர்வமில்லை… ஆஃபீஸ் கிளம்பிவிட்டேன்… வீட்டு முக்கில் ஷேர் ஆட்டோவில் நான் ஏறிக்கொள்ள, ஒரு இருநூறு அடி தள்ளி அந்தப் பெண் ஏறிக்கொண்டாள்… மஞ்சள் கலரில் சிம்பிள் சேலை, ஒரு இரண்டு இன்ச் ஜரிகை வைத்து… தோளைத் தாண்டி தவளும் பாப்… பர்ப்பிள் ரவிக்கை… அதே கலரில் கட் ஷூ… தாமரை வடிவ டாலர் மார்பில் படர, கழுத்தில் ஒரேயொரு மெல்லிய […]

Read more
Experience

பள்ளிக்கூடம்

நீங்கள் எத்தனை பள்ளிக்கூடம் படித்திருப்பீர்கள்? இப்பொழுதெல்லாம் பலர் தங்கள் குழந்தைகளை ஒரு சிறந்த(!!!) பள்ளியில் சேர்த்துவிட்டு அதை அப்படியே மறந்துபோக எண்ணுகின்றனர். ஏனெனில், பள்ளியில் ஒரு குழந்தையை சேர்ப்பதைவிட சிரமம் பள்ளி மாற்றுவது. புது பள்ளியில் இடம் காலி இருக்க வேண்டும் முதலில். அப்படியே ஒன்றிரண்டு இடம் இருந்தாலும் அதற்கு மாநகராட்சி குப்பை அள்ளுவதற்கான குத்தகை போல அடிதடியே நடக்கும். அது போக டொனேஷன், காப்பிடேஷன், பள்ளி மாற்றுச் சான்றிதழ், லொட்டு லொசுக்கு என்று பர்ஸுக்கும் ஏகப்பட்ட வேட்டு வைத்து விடும். சேரப்போகும் வகுப்பைப் […]

Read more