Review

கிமு கிபி – மதன்

Print Friendly, PDF & Email

கிமு கிபி
மதன்
கிழக்கு பதிப்பகம்

Suresh Potti Srinivas சுரேஷ் அண்ணா வீட்டுக்கு போனப்ப பார்த்துட்டு தூக்கிட்டு வந்தது. இந்த புத்தகம் பத்தி தெரியும். கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, படிச்சதில்ல. ஒழுங்கா படிச்சிட்டு திரும்ப தந்துருவேன்’னு சுரேஷ் அண்ணா என்னை நம்புனதாலும் (இதற்கிடையில், புத்தக copyright என்ன சொல்லுதுன்னா – This book shall not be lent without publisher’s prior consent), மதன் எழுத்து மீது எனக்கு உள்ள ஆர்வத்தாலும் இந்த கிமு கிபி’யை கொண்டுவந்து படிக்க ஆரம்பித்தேன்.

ராகுல சாங்கிருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ போல முதல் சில பகுதிகள் ஆரம்பித்தாலும், அடுத்தடுத்த பகுதிகள் மதனின் ரெகுலர் தனித்தன்மையுடன் வேகமெடுக்கிறது. வரலாறை கதையாக, சுவையாக சொல்வதில் மதன் வல்லவர். இந்த புத்தகமும் விலக்கல்ல. உலகின் தோற்றம், உலகின் முதல் மனிதனின் (பெண்) காலடித்தடம், மனிதன் நடந்து நடந்து உலகம் முழுவதும் பரவிய கதை, ஆதி கால இந்தியா (சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் மட்டும் பதினேழு வகையான விதவிதமான யானைகள் காடுகளில் திரிந்தனவாம். இப்ப உலகில் இரண்டே உண்டு – இந்தய மற்றும் ஆப்ரிக்க யானை), கடல் மாற்றத்தால் உலக வரைபடம் மாறிய விதம், நதியொட்டி தோன்றிய நாகரிகங்கள், பூசாரிகள் தோன்றிய விதம், நெருப்பு மற்றும் விவசாயம் தோன்றல் (முதல் விவசாயி ஒரு பெண் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூற்று) என்று அடித்தளம் போடுகிறது இந்த கிமு கிபி. அடுத்தடுத்த பகுதிகள் பல்வேறு நாகரிகங்கள் பற்றியும், மனித வரலாற்றின் முக்கியமான மனிதர்கள் பற்றியும் விரிகிறது.

பாபிலோனியா, அரசர் ஹமுராபி’யின் சட்டங்கள், கில்கெமெஷ் காப்பியம் (மதன் புத்தகதில் தந்த கதை சுருக்கமே அவ்வளவு அற்புதம். சூர்யாவும் வர்ஷாவும் ஆர்வமாய் கேட்டார்கள். முழுக்கதை தேடி படிக்க வேண்டும்), பண்டைய இலக்கியங்கள், பண்டைய கடவுள்கள், எகிப்து நாகரிகம், இந்தியாவின் ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ, கிரேக்க நாகரிகம், பாரசீக நாகரிகம் பற்றி சுவையான தகவல்கள் உண்டு. உலகில் முதன் முதலாக சட்டங்கள் இயற்றிய ஹமுராபி, உலக சரித்திரத்தின் தனிப்பெரும் முதல் மனிதன் (First Individual) அக்நெடான், மன்னர் டூட்டாங்க் ஆமென், வரலாற்று நூல்களின் தந்தை ஹிராடெடஸ், மருத்துவத்தின் தந்தை ஹிப்பக்ரடீஸ், தத்துவ மேதைகள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், மாமன்னர் அலெக்ஸாந்தர், ‘300’ புகழ் லியோனிடாஸ், மௌரிய சக்ரவர்த்தி சந்திரகுப்தர், ராஜகுரு சாணக்கியர், பேரரசர் அசோகர் என்று உலக மனிதனின் வழித்தடத்தை வரையறுத்த வரலாற்று நாயகர்கள் பற்றி சுவைபட கதைகளாக சொல்கிறார் மதன்.

கிமு கிபி படிக்கும்போதே சில பகுதிகள் முகநூலில் பகிர்ந்தேன். அவை கீழே:

தகுதியில்லாத பலரால் ஆளப்படும் (ஜனநாயக) நாடு உருப்படாமல் போய்விடும் என்பது பிளேட்டோவின் கருத்து! நாடாளத் தேவையான…

Posted by Karthik Nilagiri on Tuesday, November 6, 2018

பாபிலோன் மன்னர் ஹமுராபி! உலகின் முதல் பெரும் சக்கரவர்த்தி அவனே!மெஸபொடேமியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த…

Posted by Karthik Nilagiri on Tuesday, November 6, 2018

அக்நெடான் (Akhenaten) மறைந்த பிறகு பூசாரிகள், டூட்டாங்க் ஆமென் (Tutankhamun) என்ற 10 வயது சிறுவன் ஒருவனை அரியணையில்…

Posted by Karthik Nilagiri on Tuesday, November 6, 2018

இந்த கிமு கிபி புத்தகத்தின் கடைசி பக்கத்தில் ‘உதவிய நூல்கள்’ என்று மதன் ஒரு பட்டியல் போடுகிறார். அந்த பட்டியலை படிக்கும்போது எவ்வளவு (maybe கடினமான சுவையற்ற) நூல்களை படித்து இந்த கிமு கிபி’யை சுவையாக தந்துள்ளார் என்று புரிகிறது. அந்த புத்தக பட்டியல் கீழே:

  • The Dawn of Man – Steve Parker
  • The Rise of Mammals – Michael Benton
  • The Vedic People – Rajesh Kochhar
  • The celestial key to Vedas – Siddharth
  • Pre History (India) – Irfan Habib
  • Ancient Civilizations – Timothy Roberts
  • The Lessons of History – Will and Ariel Durant
  • Secrets of Indus Valley – R.Rajagopalan
  • Land of the Nile – Torstar Books
  • Egypt under the Pharos – Desmond Stewart
  • The story of Philosophy – Bryan Magee
  • Short History of the World – Geoffrey Blainey
  • A History of India – Romila Thapar
  • India & World Civilization – D.P.Singhal
  • Asoka – Vincent A.Smith

My verdict: உங்கள் நூலகத்தில் வைத்து பாதுகாக்கவும்.

Other Reviews

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.