Review

வேத பழமையான சௌராஷ்டிரம் – தெஸ்மா. T.R. பாஸ்கர்

Print Friendly, PDF & Email

வேத பழமையான சௌராஷ்டிரம்
-தெஸ்மா. T.R. பாஸ்கர்
நன்றி: முஹம்மது யூசுப்

தாய்மொழி யாருக்குத்தான் பிடிக்காது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது establish ஆன மொழிகளில் அழியும் நிலையில் உள்ளது சௌராஷ்டிரம் என்று எங்கோ படித்த ஞாபகம். எழுத்து வழக்கத்தில் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள மொழியானது அழிவதில் ஆச்சரியமில்லை. சௌராஷ்டிர மொழி அந்த extinction வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளதாம் (முதலில் இருப்பது துளு மொழியாம்). ஆனாலும் சௌராஷ்டிர மக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது குஜராத்தை சேர்ந்தவர்களா என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படுவது உண்டு. நெசவுத் தொழிலை குலத் தொழிலாக கொண்ட சமூகம் குஜராத்தில் இருந்து கிளம்பி இந்தியா முழுவதும் பரவி இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டுமே பட்டுநூல்காரர் என்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்கள். வேறு எந்த மாநிலமும் சௌராஷ்டிரா சமூகத்திற்கு அங்கீகாரம் அளித்ததாக தெரியவில்லை. அந்த வகையில் நான் தமிழ்நாட்டுக்காரனாகவே உணர்கிறேன்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இல்லை எனில், மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் சௌராஷ்ட்ரா சமூகம் அங்கீகாரமின்றி நாடோடி சமூகமாகவே இருந்திருக்கும். ஜாம்நகரில் வேலைக்கு சேர்ந்து குஜராத் சௌராஷ்டிரா பகுதிகளை சுற்றிப் பார்த்த பொழுதும் எனக்கு அங்கு எந்த ஒரு ஒட்டுதலும் ஏற்படவில்லை. இத்தனைக்கும் எங்கள் குடும்பத்தார்கள் இன்னும் நெசவு தொழில் செய்கிறார்கள். மாமா எல்லாம் இன்னும் சேலை வியாபாரம் தான் செய்கிறார்கள். என் மாமனார் dyeing industry நடத்தினார். இப்பொழுது எல்லாம் தொழிலை விட்டுவிட்டு மாத சம்பளத்திற்கு படித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். தறி நெசவு செய்யும் சொந்தங்கள் பரமக்குடி எமனேஸ்வரம் மதுரை பகுதியில் இருந்தாலும், அவர்களும் இதிலிருந்து வெகு சீக்கிரம் வெளிவந்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. லாபம் இல்லை அவ்வளவுதான். சரி இந்த சமூகம் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்றால் யாரும் பெரிதாக இதை எழுதி வைத்ததாக தெரியவில்லை. சரித்திரம் இன்றி இனம் அழிந்து தான் போகும். இந்நிலையில் முஹம்மது யூசுப் இந்த சமூகம் பற்றிய ஒரு சிறிய புத்தகத்தை பற்றி எழுதியிருந்தார். Comment செய்தபோது அந்தப் புத்தகத்தை ஈமெயிலில் அனுப்பியும் வைத்தார்.

‘வேத பழமையான சௌராஷ்டிரம்’ மிகச்சிறிய ஒரு புத்தகம். ஒரே நாளில் படித்து முடிந்துவிட்டது. சௌராஷ்ட்ரா சமூகம் பற்றிய சில விஷயங்கள் இதில் உள்ளது. ஆசிரியர் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் புத்தகம் நிறையவே exaggerate செய்துள்ளது. நிறைய விஷயங்கள் நம்ப கஷ்டமாகவே உள்ளன. சுவாரசியமும் குறைவுதான். தகவல்கள் கோர்வையின்றி வழவழா கொழகொழா என்று, how to say, it’s just all over the place. இந்தப் புத்தகத்தை ஒரு referenceஆக எடுத்துக்கொள்ள கூட ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். சௌராஷ்டிர மக்கள் வேண்டுமானால் இதைப் படித்து தங்கள் egoவை கொஞ்சம் boost up செய்துகொள்ளலாம். மற்றபடி, கஷ்டம்தான்.

கொசுறு தகவல்: யூசுப் தனது அடுத்த (மூன்றாவது) புத்தகத்தில் சௌராஷ்டிரா இழையோட எழுதி இருக்கிறாராம். அதனால் சௌராஷ்டிரா பற்றி தேடித்தேடி படிக்கிறார். I am waiting for his book, because I know his writing.

My verdict: (சௌராஷ்டிரர்கள்) ஒரு முறை படிக்கலாம்.

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.