Moon

நிலவைத் தேடி – முன்னுரை (0000)

Print Friendly, PDF & Email
நிலா…
சொல்லும் போதே எவ்வளவு ரம்மியமாக உள்ளது பாருங்கள். நம் உலகை சுற்றும் கோள் நிலா மட்டுமே. அதுவும் தன் ஒருபக்க முகத்தை மட்டுமே காட்டி சுற்றிவரும் நிலா மட்டும் இல்லையேல் நமக்கு பாட்டி வடை சுட்ட கதை தெரிந்திருக்காது, பல குழந்தைகள் சரியாக சோறு தின்றிருக்காது, பலர் தன் காதலி / காதலனை கற்பனையில் கண்டிருக்க முடியாது, இவ்வளவு ஏன், அவ்வளவு பெரிய கடலில் அலைகளே ஏற்பட்டிருக்க முடியாது. சூரியனுக்கு அடுத்து வானில் நாம் காணக்கிடைத்த பிரகாசமான கோள் நம் நிலா.
நிலவு – வட துருவத்திலிருந்து
இத்தனை அழகான நிலாவை பற்றி கவிதைகள் எழுதித் தள்ளிவிட்டாலும் இப்பொழுதுதான் ‘சந்திராயன்’ மூலம் அதைத் தொடப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே, 1969இல், நிலவில் மனிதனை இறக்கி விட்டது நம் பெரியண்ணன் அமெரிக்கா. அது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. இன்று அத்தனை விஞ்ஞான வசதிகள் கொண்டு செவ்வாயில் (Mars) காலடி வைக்க முயற்சி எடுக்கிறோம் என்பது ஒரு விஷயமே அல்ல. ஆனால் அந்த நிலா முயற்சிக் காலத்தில் அத்தனையும் முதல் முதலாக செய்து பார்க்கப்பட்டது. அத்தனையும் புது கண்டுபிடிப்புகளே. நிலவுக்கு மனிதன் சென்றானா அல்லது அது வெறும் அமெரிக்கா தன் பலத்தைக் காட்ட ஜோடிக்கப்பட்ட கதை என்று ஒரு விவாதம் நடந்துகொண்டே இருக்கிறது. அது நமக்கு தேவையில்லை. நாம் நிலவுக்கு சென்ற, செல்ல எடுத்துக்கொண்ட முயற்சிகளைப்பற்றி பார்ப்போம். அந்த நிலவைத்தொடும் முயற்சி ஒரு அட்டகாசமான பயணம். மனிதனை நிலவுக்கு அழைத்துச் சென்ற ‘அப்போலோ 11 (Apollo)‘இன்  உருவாக்கம் கிட்டத்தட்ட 4 லட்சம் மனிதர்களின் ஊன் உறக்கமற்ற உழைப்பைக் கொண்டுள்ளது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் (Neil Armstrong) என்ற அந்த ஒரு மனிதனின் நிலவின் மீதான முதல் காலடி இத்தனை மக்களின் உழைப்பை கொண்டுள்ளது. நமது இந்த கட்டுரைத் தொடர் இந்த முயற்சிகளின் தொகுப்பு. நமது தொடர் பயணிக்கப்போவது…

நிலவைத் தேடி…

(தொடர்ந்து…)

முன்குறிப்பு:

நண்பர்களே… ஒரு முக்கியமான விஷயம்… நிலவைப் பற்றியும் அதற்கான பயணத்தைப் பற்றியும் நான் தேடித் தேடி படித்து இந்த கட்டுரைகளை ஆர்வமுடன் எழுத முழு முதற் காரணம் – க்ரேய்க் நெல்சன் (Craig Nelson) எழுதிய ராக்கெட் மென் (Rocket Men) என்ற புத்தகம் தான்… நான் ராக்கெட் மென் படித்து, அதில் உள்ள விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றை நம் தமிழில் எழுதலாம் என்ற என் ஆர்வக்கோளாறுதான் இந்தக் கட்டுரைகள்… பல விஷயங்களை இந்த புத்தகத்தில் இருந்துதான் எழுதப் போகிறேன்… புகைப்படங்கள் பிரதானமாக நாசா தளத்தில் இருந்து உபயோகப்படுத்தப்படவுள்ளன… அப்புறம், இருக்கவே இருக்கு நம்ம விக்கி…

 • க்ரேய்க் நெல்சன் பற்றியும் அவரது எழுதிய புத்தகங்களைப் பற்றியும் படிக்க அவரது தளத்துக்கு செல்லுங்கள்… http://www.craignelson.us/
 • நாசா பற்றி உண்மையிலேயே ஆர்வமிருந்தால் அந்த நிறுவனத்தைப் பற்றி படிக்க  http://www.nasa.gov/ செல்லுங்கள்…
 • விக்கிபீடியாவின் தளம்… அட, இதையும் சொல்லணுமாங்க… சரி சரி அழாதீங்க, சொல்லித் தொலைக்கிறேன்…  http://www.wikipedia.org/

இந்த என் கட்டுரை வரிசையின் மொத்த கிரெடிட்ஸ் க்ரேய்க் நெல்சன்’இன் ராக்கெட் மென், நாசா, விக்கி மற்றும் இலவச இணையத்துக்கே…

Credits for my this series on moon goes to Craig Nelson’s Rocket Men, NASA, Wiki and the free internet.

Karthik Nilagiri

Related posts

7 Comment's

 1. நீங்க பிளாக் எழுவீங்கன்னு சொல்லலலலலலவே இல்ல :). நிறைய அறிவியல் மற்றும் துறைசார்ந்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம்….

  1. அப்பப்ப எழுதுவேங்க… தொடர்ச்சியா எழுதுனா சொல்லலாம்… இப்போ தொடர்ச்சியா எழுதலாம்ன்னு இருக்கேன்… பார்க்கலாம்…

   BTW , முக்கியமா உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது – குறைகள்…

   எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைகளை கண்டுபிடித்து சொல்லுங்கள்… I believe that “Audiences refine an Artist”… என்ன நாஞ்சொல்றது ?

  2. நமக்கு ரொம்ப ஈஸீயானதும், புடிச்சவிசயமும் இந்த குறை சொல்றதுதானே….. பிச்சு உதறிடமாட்டோம்…..:))

 2. Remove the Captcha code option….torturing…:)

  1. Done…

   Captcha Code is one of the most irritating thing (apart from the Blog itself) for a real reader who want to comment on the Blog… I checked with a friend on how to remove it (he inturn googled to find it out) and have now removed the Captcha Code option…

   Now, I’m eagarly waiting to see if anybody other than humans comment on my Blog…

  2. hehehe…. when you release new post, don’t forget to give me a link in my personal box…. I may not notice a new post in my dashboard.

Leave a Reply

Your email address will not be published.