கலியுகக் கர்ணன்கள்
![]() |
| இந்தக் கர்ணன் மாடலே |
சம்பளம் பத்தவில்லை…
பிரமோஷனுக்கு வழியில்லை…
Designation கௌரவமாயில்லை…
வீட்டின் அருகாமையிலில்லை…
கான்டீன் சரியில்லை…
பாஸ் பெருந்தொல்லை…
கூட வேலை பார்ப்பவர்கள் அனுசரணையாயில்லை…
படிப்பிற்கான வேலையில்லை…
Flexi-timing இல்லை…
திறமைக்கு தீனி இல்லை…
வேலை நேரம் ஒழுங்கில்லை…
வெளிநாட்டு பயணம் கிடைப்பதில்லை…
சனிக்கிழமை விடுமுறையில்லை…
கேட்ட லீவு தருவதில்லை…
Gmail, Facebook அனுமதியில்லை…
ஆடை சுதந்திரமில்லை…
ஆபீஸில் நான்-வெஜ் சாப்பிட அனுமதியில்லை…
Work from home options இல்லை…
ஒழுங்காக Relieving லெட்டர் தருவதில்லை…
PCயன்றி லேப்டாப் வழங்கவில்லை…
கலர் பிரிண்ட் எடுக்க அனுமதியில்லை…
போட்டோ ஸ்கேன் செய்ய முடிவதில்லை…
ஆபீஸில் அழகான பெண்களே இல்லை…
உப்பில்லை…
காரமில்லை…
இருபத்தியெட்டுக்கும் மேற்பட்ட காரணங்கள்
கம்பெனி விட்டு விலக…
அப்ப ஏன்டா இங்கே சேர்ந்தே என்று கேட்டா மட்டும்
ஒரு பதிலுமில்லை இவர்களிடம்…
உங்களை சேர்த்த துரியோதனன்களாய்
அத்தனை கம்பெனிகளும்…





சூப்பர் !!
🙂 நன்றி KSP…