கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

Experience

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்

நீங்கள் எத்தனை பள்ளிக்கூடம் படித்திருப்பீர்கள்? இப்பொழுதெல்லாம் பலர் தங்கள் குழந்தைகளை ஒரு சிறந்த(!!!) பள்ளியில் சேர்த்துவிட்டு அதை அப்படியே மறந்துபோக எண்ணுகின்றனர். ஏனெனில், பள்ளியில் ஒரு குழந்தையை சேர்ப்பதைவிட சிரமம் பள்ளி மாற்றுவது. புது பள்ளியில் இடம் காலி இருக்க வேண்டும் முதலில். அப்படியே ஒன்றிரண்டு இடம் இருந்தாலும் அதற்கு மாநகராட்சி குப்பை அள்ளுவதற்கான குத்தகை போல அடிதடியே நடக்கும். அது…
Read more
MIT சென்னை கல்லூரி – கவிதை மற்றும் புகைப்படங்கள் (1997-2001)

MIT சென்னை கல்லூரி – கவிதை மற்றும் புகைப்படங்கள் (1997-2001)

இந்த வாரம் பழைய கல்லூரி நண்பன் சௌந்தர் ராஜனை சந்தித்தேன், அவன் அக்கா வீட்டில். அப்பொழுது நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதில் ஒரு கமெண்ட்டாக மற்றொரு கல்லூரி நண்பன் தியாகராஜன், ‘அப்ப இன்னொரு பதிவு எதிர்பார்க்கலாமா’ என்று கேட்டிருந்தான். Madras Institute of Technology – சுருக்கமாக MIT – பல நினைவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு…
Read more
புத்தகங்கள்

புத்தகங்கள்

முகநூலில் பிரவின் குமார் என்ற நண்பர் தான் படித்த தமிழ் புத்தகங்களை பட்டியலிட்டிருந்தார். சித்தார்த் கந்தசாமி என்ற மற்றொரு நண்பர் என் பெயரை அந்த பதிவில் இணைத்திருந்தார். எத்தனை பரந்துபட்ட வாசிப்பு. பலதரப்பட்ட எழுத்தாளர்கள். நான் அதில் பத்தில் ஒரு பங்கு கூட படித்திருக்க மாட்டேன். பல ஆசிரியர்களின் பெயர்களே தெரியவில்லை. இன்னும் தேடித் தேடி படிக்க வேண்டும்.…
Read more
உதவின்னு வந்துட்டா…

உதவின்னு வந்துட்டா…

உதவி செய்றதுலே நம்மாளுங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. நமக்கு ஒரு உதவி தேவைப்படும்போது குபீரென்று நாலாபக்கமிலிருந்தும் ஹீரோவிடம் அடிவாங்க வரும் வில்லன் போல பாய்ந்து வருவார்கள். நிற்க. உதவி என்ற சொல்லில் பண உதவி அடங்காது. பொதுவாக உதவி என்பது அறிவுசார் (intellectual) உதவியாகவே இருக்கும். சிம்பிளா தமிழ்லே சொன்னா அட்வைஸ். நண்பனுக்கு நண்பன் எனக்கு நண்பனே என்ற கான்செப்டே…
Read more
சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

“I’m a dog chasing cars. I wouldn’t know what to do with one if I caught it.” – The Joker and… I’m no Joker… 03-May-2013(வர்ஷா அப்போ பொறக்கவேயில்ல ) சிறிது நாட்களுக்குமுன் குழந்தைகளையும் சசியையும் கூட்டிக்கொண்டு அருகில் களம்போலியில் இருக்கும் McDonald’sக்கு சென்றிருந்தேன். கொதிக்கிற எண்ணைக்கு பயந்து…
Read more
சென்னையில் ஒரு திருமண நாள்

சென்னையில் ஒரு திருமண நாள்

அழைப்பு ரகுராம் அலைபேசியில் அழைத்து சொன்னபோது மறுக்கமுடியாது. மும்பையில் இருக்கும் ஒரே MIT கல்லூரித் தோழன். Batchmate. மற்றும் முக்கியமாக மதுரைக்காரன். திருமணம் சென்னையில் என்றாலும் கண்டிப்பாக வருவதாக கூறினேன். அந்த காலத்தில் நல்லவர்கள் இருந்தார்கள். விழாவை சிறப்பிக்க அழைத்தால் டிக்கெட்டும் எடுத்துக் கொடுப்பார்கள். ரகு அத்தனை நல்லவனில்லை போலும். அல்லது விவரம் போதவில்லை. பத்திரிகை மட்டும் வைத்தான். அவனை குறை…
Read more

Clash of the Titans

விர்ர்ர்ர்ர்…. க்ரீரீரீரீரீச்… தொடர்ந்து ஒரு மெல்லிய டமார்… வண்டி இடித்தே விட்டது. இடித்த வண்டியின் எண்ணை பார்த்தேன். மராட்டியில் 100 என்று எழுதி இருந்தது. செத்தோம்டா சாமி. ஏதும் முக்கிய ஆளின் வண்டியாக இருக்கும் என்பது உறுதி. நான் சும்மாவே பயப்படுவேன். இப்போ சொல்லவா வேண்டும். அந்த பெரிய வண்டி – இன்னோவா என்று நினைக்கிறேன்,…
Read more