Poem

நேரம் கெட்ட நேரத்தில்…

Print Friendly, PDF & Email
tamil poem reading books anywhere anytime

வரிசைகளில்…
கழிவறையில்…
நூலகங்களில்…
நகைக்கடைகளில்…
மெட்ரோ இரயிலில்…
புத்தகக் கடைகளில்…
மோனோ இரயிலில்…
பல் விளக்குகையில்…
புடவைக் கடைகளில்…
காஃபி குடிக்கும் போது…
விமான நிலையங்களில்…
வோட்கா தருணங்களில்…
மனம் பறக்கும் நேரங்களில்…
மிக பாரமான வேளைகளில்…
இரயிலுக்கு காத்திருக்கையில்…
காலை டிஃபன் சாப்பிடும்போது…
இரயில் மாற காத்திருக்கையில்…
நள்ளிரவில் முழிப்பு வருகையில்…
மருத்துவமனைக் காத்திருப்புகளில்…
நீண்டதூர இரயில் பிரயாணங்களில்…
பழக்கடையில் ஜூஸ் குடிக்கையில்…
அலாரம் ஸ்நூஸ் இடைவெளிகளில்…
விடியற்காலை தூக்கம் கலைகையில்…
மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கையில்…
முக்கியமான மீட்டிங்’க்கு தயாராகையில்…
அழகியொருத்தி என்னைக் காணும்போது…
ஆட்டோவில் ஸ்டேஷன் செல்லும்போது…
மனைவி விசேஷத்துக்கு தயாராகும்போது…
குழந்தைகள் விளையாடாமல் தூங்கும்போது…
மனைவி அம்மா வீட்டுக்கு சென்றிருக்கையில்…
மாமனார் மாமியார் வீட்டுக்கு வந்திருக்கையில்…
இரயில் கூட்டத்தில் பிதுங்கி மேலே பை வைத்தபின்…
விமானத்தில், பணிப்பெண்கள் அருகிலில்லாதபோது…
குழந்தைகள் விளையாட வெளியில் சென்றிருக்கும்போது…
மனதிற்கு பிரியமான நண்பர்களுடன் அமர்ந்திருக்கையில்…
‘இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வந்துர்றேங்க…’ நிமிடங்களில்…
‘இன்னைக்கு பேசாதீங்க… செம கடுப்புல இருக்கேன்…’ தருணங்களில்… 

இதற்கிடையில், எப்படா படிக்கிறே என்பவர்களுக்கு என்னிடம் பதிலிருக்கிறது…

ஏன் படிக்கிறே என்பவர்களுக்குத்தான் பதில் யோசிக்கவேண்டும்…
கவிதையாய்…
கல்லறையில் உமிழ்ந்தாற்போல்…

(Photo credits: www.nerysparry.com)

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.