Moon

நிலவைத் தேடி – நோக்கம் (0001)

Print Friendly, PDF & Email


Ad astra per aspera…

கென்னெடி  விண்வெளி மையத்தில் இருக்கும் அப்போலோ 1 (Apollo 1)இன் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் இதன் அர்த்தம் “நட்சத்திரங்களுக்கான பாதை கரடுமுரடானது
அப்போலோ 1 – நினைவஞ்சலி
ஒரு கடினமான மிகப் பெரிய படைப்பை மனிதன் மேற்கொள்வது எதற்காக? நான் மீண்டு வரும்போது எனக்கு சகல வசதிகளும் வேண்டும் என்று எகிப்திய மன்னர்கள் கட்டியதுதான் பிரமிடுகள் (Pyramids). எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்கக் கட்டப்பட்டதுதான் சீனப் பெருஞ்சுவர். காதலுக்காக கட்டப்பட்டதுதான் தாஜ்மஹால். அத்தனை படைப்புக்கும் ஏதோ ஒரு காரணம். அனால், தஞ்சை பெரியகோவில்? எதற்காக ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோவிலை கட்டினான்? பெரும் பொருட்செலவும், கடின உழைப்பும், நீண்ட காலமும் எடுத்துக்கொண்ட ஒரு படைப்பை சோழன் எதற்காக மேற்கொண்டான்? சரியப்பா, ஒரு அரசனாக கோவில் கட்ட முடிவெடுத்து விட்டான். அவன் சொல்லே முடிவு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசாங்கம் இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய முயற்சியில் எதற்க்காக இறங்க வேண்டும்? அதுவும் அமெரிக்கா போன்றதொரு தேசம்?
1969இல், அப்போலோ 11 மனிதனை நிலவில் இறக்கிய சில மாதங்களுக்கு பிறகு ரோஹ்ட்  ஐலேண்ட் (Rhode Island)இன் அமைச்சர் ஜான் பாஸ்டோர் (John  O. Pastore) ஆராய்ச்சியகமான பெர்மிலாப் (Fermilab)இன் இயக்குனர் ராபர்ட் வில்சன் (Robert R. Wilson)னுடன் விவாதித்துக்கொண்டிருந்தார். அரசாங்கம் எதற்கு 250 மில்லியன் (25 கோடி) அமெரிக்க டாலர்களைக் கொட்டி டேவட்றான் துகள் முடுக்கி (Tevatron Particle Accelerator)யை நிர்மாணிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார். மொத்த அமைச்சகமும் இவர்கள் விவாதத்தை ஆர்வமுடன் கவனித்துக்கொண்டிருந்தது.

ஜான்: சொல்லுங்கள். எதற்கு நம் அரசு இத்தனை செலவு செய்யவேண்டும்? இந்த துகள் முடுக்கி நம் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துமா?

வில்சன்: இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை.

ஜான்: எந்த விதத்திலும் இல்லையா?

வில்சன்: இல்லை. எந்த விதத்திலும் இல்லை.

ஜான்: நாட்டின் பாதுகாப்பிற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமுமா இல்லை?

வில்சன்: ஹ்ம்ம்… இப்படி வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இந்த துகள் முடுக்கி நம் நாட்டின் பாதுகாப்பை எந்த விதத்திலும் மேம்படுத்தாது. அனால், நம் நாட்டை பாதுகாக்க நாம் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் மேலும் அர்த்தமுள்ளதாக்கும். நாம் நமது நாட்டைப் பாதுகாக்க நமக்கு காரிணிகளாக விளங்கும் நமது பாரம்பரியம், நமது ஓவியர்கள், நமது சிற்பிகள் மற்றும் நமது கலைஞர்கள் போல, இந்த துகள் முடுக்கியும் ஒரு முக்கிய காரிணியாக இருக்கும்.

நிலாப் பயணமும் அத்தகையதே.

Karthik Nilagiri

Related posts

4 Comment's

  1. என்னங்க இது தொடங்குனவுடனே தொடரும்னு போட்டீங்க………..கொஞ்சம் பெருசாத்தான் எழுதுங்களேன்………..தந்திப்பேப்பர்ல கன்னித்தீவா எழுதறீங்க…..

    1. ஆமாங்க… இது ரொம்ப குட்டியா போச்சு… நான் Rocket Men என்ற புத்தகத்தில் இருந்துதான் எழுதுகிறேன்… இது அதன் preface… அதான் தனியா குட்டியா போயிடுச்சு… தொடர்பவை கொஞ்சம் பெருசா எழுதணும்…

Leave a Reply

Your email address will not be published.