ஐந்து முதலைகளின் கதை – சரவணன் சந்திரன்
ஐந்து முதலைகளின் கதை
-சரவணன் சந்திரன்
உயிர்மை பதப்பகம்
திமோர் என்றொரு தேசம். கேள்விப்பட்ட ஆனால் அறியாத தேசம். அதில் தொழில் தொடங்க செல்லும் ஒருவனின் அனுபவமே இந்த புத்தகம். புனைவு என்று கூற முடியாத, உண்மைக்கு அத்தனை அருகில் பயணிக்கும் எழுத்து. தடதடக்கும் இரயிலைப் போல அத்தனை வேகமான எழுத்து. கதை என்பதை தாண்டி ஒரு தொழில் முனைவன் எதிர்கொள்ளும் சவால்களே இந்த புத்தகம். தேவையற்ற வர்ணனைகள் இல்லை. பாசாங்குகள் இல்லை. விரிவுகள் இல்லை. பல விஷயங்கள் நம் யூகத்திற்கே விட்டுவிடுவது சிறப்பு. யாரிடமும் பகிரக்கூடாத ஒரு இரகசியம் என்று சொல்லி அதை வாசகனிடமும் கூறாமல் விடுவது அழகு. திமோரின் மக்கள், வளம், ஏழ்மை, வாழ்க்கை முறை, அரசியல், வணிகம், ஏமாற்றங்கள், நம்பிக்கைகள், கொண்டாட்டம், சண்டை, மனஸ்தாபங்கள், துரோகங்கள், செக்ஸ் என விரிந்துகொண்டே போகிறது. கொலாஜ் போன்ற வடிவமைப்பே இந்த புத்தகத்தை சுவாரசியப்படுத்துகிறது.
Verdict: தொழில் முனைவோர் ஒரு முறையேனும் படிக்க வேண்டிய புத்தகம்.