ஆப்பீஸ் மொட்டை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 4-சோதனை சண்டைக்காரன் கால்ல விழுகுறதவிட சேட்டைக்காரன் கால்ல விழலாம். பழைய முதலாளிகிட்டயே நாம வேணா நிவாரணக் கடிதம் கேட்டுப்பாப்போம் என்று முடிவெடுத்தேன். ஆனா, அவரிடம் நேரில் போகத்தான் பயமாக இருந்தது. ஆளு வேறு புல்க்க்கா இருப்பாப்ல. உண்மையில் சொல்லப்போனால் அவரை போனில் அழைத்து பேசக்கூட பயம். இதில் நான் எங்குட்டு போய் […]
Whatsapp குரூப் பத்தி நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். Whatsappல இல்லாத ஆளு உண்டா? இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா? நாம பாட்டுக்கு நாம நம்ம வேலைய பார்த்துக்கிட்டு இருப்போம். த்திடீர்ன்னு நம்மள ஒரு whatsapp குரூப்’ல கோத்து விட்ருவாங்க. அதுல வர்ற காலை/மாலை வணக்கம் + நாலு அடி தாண்டி நீளும் forwardகளை delete செய்தே நாம் ஓய்ந்திருப்போம். ரெண்டு மாசம் கழிச்சி குரூப் ரொம்ம்ம்ப அமைதியா போய்ட்ருக்கும். அப்ப பொழுது போகாம யாராச்சும் […]
இந்த வாரம் பழைய கல்லூரி நண்பன் சௌந்தர் ராஜனை சந்தித்தேன், அவன் அக்கா வீட்டில். அப்பொழுது நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதில் ஒரு கமெண்ட்டாக மற்றொரு கல்லூரி நண்பன் தியாகராஜன், ‘அப்ப இன்னொரு பதிவு எதிர்பார்க்கலாமா’ என்று கேட்டிருந்தான். Madras Institute of Technology – சுருக்கமாக MIT – பல நினைவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவு. சீனியர், ஜூனியர், நட்பு, காதல், கடலை, அடிதடி, தண்ணி, தம், தற்கொலை முயற்சி, வெள்ளிக்கிழமை சிக்கன், பண்டு, லேடீஸ் ஹாஸ்டல், ராதா […]
அழைப்பு ரகுராம் அலைபேசியில் அழைத்து சொன்னபோது மறுக்கமுடியாது. மும்பையில் இருக்கும் ஒரே MIT கல்லூரித் தோழன். Batchmate. மற்றும் முக்கியமாக மதுரைக்காரன். திருமணம் சென்னையில் என்றாலும் கண்டிப்பாக வருவதாக கூறினேன். அந்த காலத்தில் நல்லவர்கள் இருந்தார்கள். விழாவை சிறப்பிக்க அழைத்தால் டிக்கெட்டும் எடுத்துக் கொடுப்பார்கள். ரகு அத்தனை நல்லவனில்லை போலும். அல்லது விவரம் போதவில்லை. பத்திரிகை மட்டும் வைத்தான். அவனை குறை சொல்ல முடியாது. கடந்த நாலைந்து வருடங்களாக இதுதான் ட்ரெண்ட் போல. என் மாமனார் வீட்டிலும் வாயார அழைப்பார்கள். விருந்தும் வைப்பார்கள். […]