இந்த வாரம் பழைய கல்லூரி நண்பன் சௌந்தர் ராஜனை சந்தித்தேன், அவன் அக்கா வீட்டில். அப்பொழுது நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதில் ஒரு கமெண்ட்டாக மற்றொரு கல்லூரி நண்பன் தியாகராஜன், ‘அப்ப இன்னொரு பதிவு எதிர்பார்க்கலாமா’ என்று கேட்டிருந்தான். Madras Institute of Technology – சுருக்கமாக MIT – பல நினைவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவு. சீனியர், ஜூனியர், நட்பு, காதல், கடலை, அடிதடி, தண்ணி, தம், தற்கொலை முயற்சி, வெள்ளிக்கிழமை சிக்கன், பண்டு, லேடீஸ் ஹாஸ்டல், ராதா […]
அழைப்பு ரகுராம் அலைபேசியில் அழைத்து சொன்னபோது மறுக்கமுடியாது. மும்பையில் இருக்கும் ஒரே MIT கல்லூரித் தோழன். Batchmate. மற்றும் முக்கியமாக மதுரைக்காரன். திருமணம் சென்னையில் என்றாலும் கண்டிப்பாக வருவதாக கூறினேன். அந்த காலத்தில் நல்லவர்கள் இருந்தார்கள். விழாவை சிறப்பிக்க அழைத்தால் டிக்கெட்டும் எடுத்துக் கொடுப்பார்கள். ரகு அத்தனை நல்லவனில்லை போலும். அல்லது விவரம் போதவில்லை. பத்திரிகை மட்டும் வைத்தான். அவனை குறை சொல்ல முடியாது. கடந்த நாலைந்து வருடங்களாக இதுதான் ட்ரெண்ட் போல. என் மாமனார் வீட்டிலும் வாயார அழைப்பார்கள். விருந்தும் வைப்பார்கள். […]