(இதற்கு முன்…) டிசம்பர் 23, 1968. அப்போலோ 8 விண்கலம் நிலவை சுற்றிவர பயணப்பட்டிருந்தது. அதில் மூன்று வீரர்கள் அமர்ந்திருந்தனர் – ஃப்ரான்க் போர்மன் (Frank Borman), ஜிம் லோவெல் (Jim Lovell) மற்றும் பில் ஆண்டெர்ஸ் (Bill Anders). புவியை விட்டுச் சென்று, நிலவைச் சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் பத்திரமாக மனிதர்களை பூமிக்கு கொண்டுவந்த முதல் விண்கலம் இது. பல மாதங்கள் வீரர்களுக்கு பயற்சியளித்து, அவர்களை விண்வெளி பயணத்துக்கு தயார்படுத்துகிறது நாசா. ஆனால், முழுதும் தயாரான பின்பு […]
சகாயம் IAS மதுரையின் பரபரப்பானதொரு சாலையில் மதிய வெயில் வாட்டிக் கொண்டிருக்கிறது. காரில் சென்றுகொண்டிருக்கும் மதுரை மாவட்ட கலெக்டர், உபகாரம்பிள்ளை சகாயம், செல்போனில் பேசியபடியே பைக் ஓட்டிச் செல்லும் ஒரு இளைஞரைப் பார்க்கிறார். தன் டிரைவரிடம் சொல்லி அந்த செல்போன் இளைஞரை நிறுத்தி, அங்கேயே உடனடி தண்டனையும் அளிக்கிறார் – 24 மணி நேரத்தில் 10 மரக் கன்றுகளை நட வேண்டும். வித்தியாசமான தண்டனை இல்லை??? ஆனால், சகாயம் வழிமுறை இதுதான். “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து” […]
(இதற்கு முன்…) அப்போலோ திட்டத்தின் மூலமாக நிலவுக்கு சென்று வந்தவர்கள் 24 பேர். அதில் 12 பேர் நிலவில் இறங்கி தடம் பதித்துள்ளனர். 12 பேர் நிலா வரை சென்று, ஆனால் அதைத் தொடாமல், திரும்பி வந்துள்ளனர். ஒவ்வொரு அப்போலோ பயணத்திலும் மூன்று வீரர்கள் இருப்பார்கள். இருவர் லூனார் மாட்யூல்’இல் கிளம்பிச் சென்று நிலவில் இறங்கி ஆராய்ச்சிக்காக கல்லையும் மண்ணையும் பொறுக்கிக்கொண்டிருப்பார்கள். ஒரு வீரர் இவர்கள் திரும்பி வரும் வரை கமாண்ட் மாட்யூல்’இல் நிலவை சுற்றி வந்துகொண்டிருப்பார். அப்போலோ 13’இன் பாதிக்கப்பட்ட சர்வீஸ் மாட்யூல் (கழற்றி […]
(இதற்கு முன்…) ஜூன் 12, 1969. மதியம் 12:30. ஏவல் ஆணைக்குக் காத்திருக்கும் ராக்கெட் அப்போலோ 11 – சாட்டர்ன் V ஏவுதளத்தில் நிலை கொண்டு 23 நாட்கள் ஆகிவிட்டிருந்தது. அப்போலோவின் திட்ட இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஸாமுவேல் ஸி. பிலிப்ஸ் (Lt. Gen. Samuel C. Phillips), வாஷிங்டன் D.C.’யில் அமைந்துள்ள நாசா’வின் தலைமையகத்தில் ஒரு உயர்மட்ட சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு டஜன் நிர்வாகிகள் அந்த அறையில் குழுமியிருந்தனர். மேலும், நாடெங்கிலுமிருந்து இரண்டு டஜன் நிர்வாகிகள் டெலிபோன் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர். […]
நமக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. எந்தவொரு பழக்கத்தையும் லேசில் விட மாட்டோம். ஏன் செய்கிறோம் என்று தெரியாது, ஆனால் செய்வோம். அதில் ஒன்று ‘பிள்ளையார் சுழி’. ஒரு பக்கத்தில் எழுத ஆரம்பிக்கும் போது, தலைப்பில், இந்த பிள்ளையார் சுழி போடுவது தமிழர்களின் வழக்கம் மற்றும் கலாச்சாரம். முழு முதற் கடவுள் பிள்ளையார். கோவிலிலும் அவரைத்தான் முதலில் வணங்குவோம். தெய்வீக அம்சம், மஹாபாரதம் எழுதியவர், பொதுத் தேர்வுகளில் பாஸ் செய்ய உதவுபவர் என்ற பல காரணத்தால் பிள்ளையாரும் அவர் பெயரால் நிலவும் இந்த […]