Experience

சென்னையில் ஒரு திருமண நாள்

அழைப்பு ரகுராம் அலைபேசியில் அழைத்து சொன்னபோது மறுக்கமுடியாது. மும்பையில் இருக்கும் ஒரே MIT கல்லூரித் தோழன். Batchmate. மற்றும் முக்கியமாக மதுரைக்காரன். திருமணம் சென்னையில் என்றாலும் கண்டிப்பாக வருவதாக கூறினேன். அந்த காலத்தில் நல்லவர்கள் இருந்தார்கள். விழாவை சிறப்பிக்க அழைத்தால் டிக்கெட்டும் எடுத்துக் கொடுப்பார்கள். ரகு அத்தனை நல்லவனில்லை போலும். அல்லது விவரம் போதவில்லை. பத்திரிகை மட்டும் வைத்தான். அவனை குறை சொல்ல முடியாது. கடந்த நாலைந்து வருடங்களாக இதுதான் ட்ரெண்ட் போல. என் மாமனார் வீட்டிலும் வாயார அழைப்பார்கள். விருந்தும் வைப்பார்கள். […]

Read more
Moon

நிலவைத் தேடி – நோக்கம் (0001)

(இதற்கு முன்…) Ad astra per aspera… கென்னெடி  விண்வெளி மையத்தில் இருக்கும் அப்போலோ 1 (Apollo 1)இன் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் இதன் அர்த்தம் “நட்சத்திரங்களுக்கான பாதை கரடுமுரடானது“ அப்போலோ 1 – நினைவஞ்சலி ஒரு கடினமான மிகப் பெரிய படைப்பை மனிதன் மேற்கொள்வது எதற்காக? நான் மீண்டு வரும்போது எனக்கு சகல வசதிகளும் வேண்டும் என்று எகிப்திய மன்னர்கள் கட்டியதுதான் பிரமிடுகள் (Pyramids). எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்கக் கட்டப்பட்டதுதான் சீனப் பெருஞ்சுவர். காதலுக்காக கட்டப்பட்டதுதான் தாஜ்மஹால். […]

Read more
Moon

நிலவைத் தேடி – முன்னுரை (0000)

நிலா… சொல்லும் போதே எவ்வளவு ரம்மியமாக உள்ளது பாருங்கள். நம் உலகை சுற்றும் கோள் நிலா மட்டுமே. அதுவும் தன் ஒருபக்க முகத்தை மட்டுமே காட்டி சுற்றிவரும் நிலா மட்டும் இல்லையேல் நமக்கு பாட்டி வடை சுட்ட கதை தெரிந்திருக்காது, பல குழந்தைகள் சரியாக சோறு தின்றிருக்காது, பலர் தன் காதலி / காதலனை கற்பனையில் கண்டிருக்க முடியாது, இவ்வளவு ஏன், அவ்வளவு பெரிய கடலில் அலைகளே ஏற்பட்டிருக்க முடியாது. சூரியனுக்கு அடுத்து வானில் நாம் காணக்கிடைத்த பிரகாசமான கோள் […]

Read more
Moon

காலத்தின் கோலம் – A Brief History of Time

திடீர் திடீரென்று நமக்கு சில சிந்தனைகள் தோன்றித் தொலைக்கும். அப்படி எனக்கு சில மாதங்களுக்குமுன் தோன்றியது, தமிழுக்கு நாம் எதாவது செய்யவேண்டும் என்பது. குறைந்தபட்சம் ஒரு கதையாவது எழுதவேண்டும் என்று மனம் பிறாண்டியது. எழுதலாம் என்று உட்கார்ந்தால் மண்டையில் ஒன்றும் ஓடவில்லை. ஆர்வம் இருப்பினும் அதற்கு தேவையான கற்பனைவளம் நமக்கு லேது. சரி நாமாக எழுத வேண்டாம். வெறும் மொழிபெயர்ப்பாவது என்று முடிவு செய்தேன். காப்பியடிப்பதுதானே என்று ஈசியாக நினைத்துவிட்டேன். சும்மா ஒரு கதையை மொழிபெயர்ப்பதைவிட ஒரு அறிவியல் […]

Read more
Experience

Clash of the Titans

விர்ர்ர்ர்ர்…. க்ரீரீரீரீரீச்… தொடர்ந்து ஒரு மெல்லிய டமார்… வண்டி இடித்தே விட்டது. இடித்த வண்டியின் எண்ணை பார்த்தேன். மராட்டியில் 100 என்று எழுதி இருந்தது. செத்தோம்டா சாமி. ஏதும் முக்கிய ஆளின் வண்டியாக இருக்கும் என்பது உறுதி. நான் சும்மாவே பயப்படுவேன். இப்போ சொல்லவா வேண்டும். அந்த பெரிய வண்டி – இன்னோவா என்று நினைக்கிறேன், பதட்டத்தில் சரியாக கவனிக்கவில்லை – ஓரம் கட்டி நின்றது. தப்பிக்க நினைத்தால் அது இன்னும் பிரச்சனையை கிளப்பும் என்பதால் நானும் […]

Read more