Eiffel Tower
ஈஃபில் டவர் (Eiffel Tower) எனப்படும் இரும்பு கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது. மக்கள் பணம் செலுத்திப் பார்க்கும் நினைவுச் சின்னங்களில் இதுவே இன்றைய தேதிக்கு உலகில் முதலிடம் வகிக்கிறது. 2011ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் இங்கு விஜயம் செய்துள்ளனர். மேலதிகத் தகவலுக்கு உலகப் பொதுமறை விக்கிப்பீடியா பார்த்துக்கொள்ளவும்.
இனிப்புன்னு இருந்தா ஈ வந்து மொய்க்கிற மாதிரி, இந்த ஈஃபில் டவருக்கு வரும் சுற்றுலா பயணிகளும் அதிகம். முன்னெல்லாம் போனோமா, சுற்றிப் பார்த்தோமா, ஒழுங்கா திரும்பி வந்தோமா என்று இருந்தார்கள். கேமரா வந்த பிறகு போட்டோ எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். அதிலும் சிலர் குறும்பர்கள். கேமரா ஆங்கிளை ஃபோகஸ் செய்து உச்சிக்குடுமியை பிடிக்கிற மாதிரி போட்டோ எடுத்து சந்தோசப்பட்டுக் கொள்வார்கள். இந்தப் பழக்கம் ஜாதி மத வர்ண பேதமின்றி உலகெங்கும் சுற்றுலாப் பயணிகளால் கடைபிடிக்கப்படுகிறது.
நம்மாளு சிட் ஃப்ரிஸ்யெஸ்’க்கும் (Sid Frisjes) ஈஃபில் டவரை பார்க்கப் போன போது அப்படி போட்டோ எடுத்துக்க ஆசை வந்துருச்சு. ஆனா, யாரு உருண்டு பொரண்டு கேமரா செட் பண்ணி அப்படி போட்டோ எடுக்குறது. யோசிச்சாரு. சரி, வந்த வரைக்கு எடுத்துக்குவோம். அப்புறம் போட்டோஷாப்’ல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்’ன்னு முடிவெடுத்தார். நோகாம போட்டோ எடுத்துக்கிட்டாரு. அந்த போட்டோ தான் கீழே இருக்கிறது.
ஒரிஜினல்
சரி, எடுத்தது எடுத்தாச்சு. பேசாம அவரே உக்காந்து போட்டோஷாப்’இல் எடிட் செய்திருக்கலாம். ஆனா பாருங்க, அதுலே ஒரு சோம்பேறித்தனம். பார்த்தாரு. அதான் இன்டர்நெட் இருக்கே, அங்க போய் மக்கள் கிட்ட உதவி கேட்கலாம்’ன்னு முடிவு பண்ணாரு. அவர் எடுத்த போட்டோ’வ இன்டர்நெட்’ல ஷேர் செய்து, “எச்சூச்மீ ப்ளீஸ்… இந்த ஈஃபில் டவர் இருக்கே, அது என் விரலுக்கு கீழ வர்ற மாதிரி எடிட் பண்ணி தர முடியுமா…”ன்னு கேட்டு தொலைச்சாறு. அந்த ஸ்க்ரீன்ஷாட் கீழே இருக்கு.
விண்ணப்பம்
உதவின்னா நம்மாளுங்க ஒடனே ஓடி வந்துருவாங்களே, சொல்லணுமா? (இடைகுறிப்பு: உதவி பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கேன். இங்கே) புகுந்து விளையாடிட்டாங்க. ஒவ்வொருத்தரும் தங்களோட தெறமைய காட்டிட்டாங்க. அந்த படங்கள் தான் கீழே வரிசையா இருக்கு. எல்லா படங்களும் இன்டர்நெட்’ல இருந்து எடுத்துதான். ஜாலியா பாருங்க. எது எப்படியோ, நம்ம அண்ணன் சாம் ஆண்டர்சன் மாதிரி சிட் ஃப்ரிஸ்யெஸ் ஓவர்நைட்’ல பேமஸ் ஆகிட்டாரு.
என்னம்மா யோசிக்கிறாங்க!
சிரிப்பு ஒரு பக்கம்ன்னா, ஒவ்வொரு ஐடியாவும் அட்டகாசம்…