வாக்குமூலம்
வாக்குமூலம்
2084’ஆம் ஆண்டு அரசு ‘தேச முன்னேற்ற சட்டம்-286’ வெளியிடுகிறது… தன் வாழ்க்கையை முழுதாக அனுபவித்து முடித்தவன், பிறர் வற்புறுத்தலின்றி, நோய் அல்லது தற்கொலை எண்ணம் போன்ற காரணங்களின்றி, சுயமாக முடிவெடுத்து, தெளிந்த மனநிலையுடன், இந்த தேச முன்னேற்றத்திற்காக தன் உயிரை போக்கிக் கொள்ள இந்த இந்த சட்டம் வழிவகுக்கிறது…’
சட்டத்தை ஒருவாறு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இராஜசேகரன், இந்த சட்டத்தை இயற்றி அதை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் ஏபிள் தாம்ப்ஸன்’ஐ சந்தித்து ஒரு பிரதியை வாங்கிக்கொள்கிறார்… மூன்று அடிப்படை நோக்கங்களுடனும் பத்து நிபந்தனைகளுடனும் உள்ள இந்த சட்டம், இந்த சட்டத்தை பயன்படுதிக்கொள்ளுபவர் தெளிவான மனநிலையில் இருப்பதை உறுதிப் படுத்திக்கொள்ள ஒரு 110 கேள்விகளை முன்வைக்கிறது… மேலும் ஒரு நூறு பக்கத்திற்கு ஒரு வாக்குமூலம் கேட்கிறது…
கேள்விகள் சில (புத்தகத்தில் இராசசேகரனின் பதில் இல்லை):
- நீங்கள் உங்களுடனேயே பேசிக்கொள்வதுண்டா?
- உங்களுக்கு உங்கள் தொழில், பணம் சம்பாதிப்பது இவைகளை தாண்டி ஏதாவது லட்சியம் உண்டா?
- உங்கள் சொந்தத் தாய்மொழியில் எழுதுவதைவிட அயல்நாட்டு மொழியில் எழுதுவது மேல் என்று நினைகிறீர்களா? அப்படி நினைத்தால், ஏன்?
- நீங்கள் எதைப்பற்றியும் சொந்தமாக சிந்திக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறீர்களா? முறையான கல்வி எவ்வளவு தூரம் இந்தப் பயற்சிக்கு இடையூறாக இருக்கிறது?
- ஜனரஞ்சக எழுத்தாளர் இல்லை என்ற நிலையில் நீங்கள் எவ்வளவு புத்தகங்களை உங்கள் செலவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெளியிட்டிருக்கிறீர்கள்? இந்த முயற்சிகளால் உங்களுக்கு செலவழித்த முதல் கூடக் கிடைக்கவில்லையென்றால் நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள்?
- உங்களுக்குத் தெரிந்த எந்த ஒருவரையும் ஒருவித உத்தேசமுமின்றி அவர் வீடு தேடிச் சென்று எப்பொழுதாவது அவரை நீங்கள் பார்ப்பதுண்டா?
- கேள்வி முக்கியமா? விடை முக்கியமா?
- அத்வைத அடிப்படையில், யார் நீ, நீ யார் என்பதற்கும் என்ன வித்தியாசம்?
- உங்களுக்கு வேடிக்கை பார்க்க முடியுமா? இதை இப்படியும் கேட்கலாம் – எதையும் நீங்கள் வேடிக்கையாகப் பார்க்கப் பழக்கிக்கொண்டிருக்கிறீர்களா?
- உங்களுக்கு என்று ஒரு உலகம் இருக்கிறதா? அது எது?
- உங்களுக்கு சந்தோஷமாகவே இருக்கத் தெரியாதா?
அதன் பின் தொடருகிறது நீண்ட வாக்குமூலம்… ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னால் நாம் பக்கம் பக்கமாக எழுதிவிடுவோம்… ஆனால் இலக்கின்றி எழுதச் சொன்னால் திணறிவிடுவோம்… மனதில் தோன்றுவதை எல்லாம் கோர்வையாக எழுத நாம் இன்னும் பழகவில்லை… பட், இந்த இராஜசேகரனின் வாக்குமூலம் இலக்கின்றி எங்கெங்கோ அட்டகாசமாக ஜாலியாக பயணிக்கிறது… Random non-linear thoughts… ஒரு ஐம்பது பக்கம் நீளும் இந்த ‘வாக்குமூலம்’ ஒரு அற்புதம்…
இராஜசேகரனின் மற்றும் சிலரின் ‘வாக்குமூலத்தை’ ஆராயும் அரசு குழு என்ன முடிவெடுக்கிறது என்பது அடுத்த பகுதி…
கடைசி ஒரு பக்கப் பகுதி (எனக்குப் புரிந்த அர்த்தத்தில்) பின்நவீனத்துவம்…
நாவல் என்றாலும் இந்த புத்தகம் ஒரு சிறுகதை அளவே உள்ளது… போனால், சிறுகதையை விட கொஞ்சம் பெரிது எனலாம்… குட்டி புத்தகமென்றாலும் அட்டகாசம்…
Verdict: உங்கள் நூலகத்தில் வைத்துப் பாதுகாக்கவும்.