மும்பை லோக்கலில்… ஒரு டஜன் ஹைக்கூ…
போன வாரம் சுஜாதாவின் ‘கணையாழியின் கடைசி பக்கங்கள்’ படிச்சேனா, அதுல வேற அவர் ஹைக்கூ பத்தி நெறைய எழுதியிருந்தாரா, எக்கச்செக்கமா எக்ஸாம்பிளும் கொடுத்திருந்தாரா, ஹைக்கூ’களும் மூணு லைன்களில் குட்டியா ஈஸியா வேற இருந்துச்சா, நானும் பேஸிக்கலா ஒரு கவிஞனாச்சா (இருங்கப்பா… ஃபுல் ஸ்டாப் வரும்… அவசரப்படாதீங்க…), மக்கள் வேற பரிதாபப்பட்டு ஃபேஸ்புக்’ல லைக் போட்டுட்றாங்களா, அப்டியே நம்ம கவிதை மனசு ஜிவ்வுன்னு ஏறிடுச்சு.
மும்பை லோக்கலில் இந்த வாரம் காலை ஆபீஸ்’க்கு போகும்போது கிடைத்த ஒரு மணி நேரத்தில், சடசடவென்று ஒரு டஜன் ஹைக்கூ எழுதித் தள்ளிட்டேன். ஃபேஸ்புக்’ல போட்டதை அப்படியே தொகுத்து இங்கே போட்டுருக்கேன். அவை ஹைக்கூ’வா இல்லையா என்பது உங்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன். பட், ரசித்தால் சந்தோஷம்.
பல் டாக்டர்
வாசலில்…
சாக்லேட் குப்பை…
சேருமுன்
பிடித்தது…
IDயின் சிரிப்பு…
சொர்க்கத்தில்
நிச்சயிக்கிறார்…
தெருமுக்கு புரோக்கர்…
ரவா உப்புமாவை
ரசிக்க வைப்பது…
சேமியா உப்புமா…
இரண்டே நிமிடத்தில்
Maggi…
தின்றுமுடித்திடவேண்டும்…
கூட்டுக்குடியிருப்புகளில்
நிறைந்திருக்கின்றன…
தனிக்குடித்தனங்கள்…
பெண்களைப்
பிடித்திருப்பதில் பிடித்தது…
டி-ஷர்ட் ஜீன்ஸ்…
பக்தர்களை
வேண்டுகிறார்…
பூசாரி…
பக்தர்களை
வேண்டுகிறார்…
பிச்சைக்காரர்…
பாகனுக்காக
பிச்சையெடுக்கிரார்…
கடவுள்…
அவசரமாகப் படிக்கிறான்
காதலியின் குறுஞ்செய்தி…
பக்கத்து மொபைலில்…
க்ருஹஸ்தனின்
மண்டைமேல்கொண்டை…
Tupperware…