Review

எனக்குள் பேசுகிறேன் – பாலகுமாரன்

Print Friendly, PDF & Email

எனக்குள் பேசுகிறேன்
-பாலகுமாரன்
ஆனந்த நாவல்

கதை சொல்வதில் பாலகுமாரன் ஒரு வகை. கதைகள் மூலம் அட்வைஸ் மயமாக இருந்தாலும் அது ‘சாட்டை அப்பா’ சமுத்திரகனி உபதேசம் போல் இருக்காது. நெடுநாள் தோழி அல்லது வயது முதிர்ந்த பெரியவர்கள் உடனான உரையாடல் போல் எனக்கு படும். கல்லூரி காலத்தில் காதற்பெருமான் மற்றும் காதல் அரங்கம் முதலில் படித்ததாக நினைவு. பின் நிறைய பாலகுமாரன் படித்தேன். Saravana Prabhu மற்றும் Senthilkumar Arumugam எனக்கு நிறைய புத்தகங்கள் வழிகாட்டி வந்தார்கள். பாலகுமாரன் வாசிப்பு கட்டாயமாக என் மனதில், வாழ்வில், வாசிப்பில் மாற்றம் கொண்டு வந்தது. சமூக நாவல்கள் விட இவரது சங்க கால நாவல்களே என்னை மிக ஈர்த்தது. கடைசியாக வாசித்த இவரது ‘உடையார்’ ஒரு extreme நிறைவை தந்தது. சோழனுடன் நானும் வாழ்ந்து பெரிய கோவில் எழுவதை பார்த்தேன். முடிவில் சோழன் விலகும் போது அப்படி அழுதேன். (வேதாரண்யத்தில் அப்பா வேலை பார்த்த போது, தஞ்சை வழியாக ஐம்பது முறைக்கும் மேல் மதுரை சென்றிருக்கிறேன். இதுவரை பெரியகோவில் சென்றதில்லை.) உடையார் தாக்கம் மறக்க பிடிக்காது பாலகுமாரனின் வேறு புத்தகங்கள் படிக்காமல் இருந்தேன். (‘கங்கை கொண்ட சோழன்’ வாங்கி மாமாங்கமாச்சு. இன்னும் படிக்கல) இப்பொழுது ஏதோ ஒரு மனநிலையில் libraryயில் இருந்து இந்த புத்தகத்தை துழாவி எடுத்தேன்.

‘எனக்குள் பேசுகிறேன்’ கதையல்ல. கட்டுரை. பாலகுமாரன் சொல்லிக்கொண்டே வருவது போல. சொற்பொழிவு என்று கூட சொல்லலாம். நிம்மதியாக வாசித்தேன். வாழ்வு பற்றி, மனம், பேச்சு, வாசிப்பு, பொறாமை பற்றியெல்லாம் அமைதியான ஒரு நீரோடை போல சொல்லிக்கொண்டே செல்கிறார். சில சம்பவங்கள் அல்லது கதைகள் மூலமும். ஆத்மார்த்தமாக வாசித்து முடித்தேன்.

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.