தொக்கம் – இலக்கியச் சுண்ணாம்பிதழ் (மணல்வீடு)
தொக்கம் – இலக்கியச் சுண்ணாம்பிதழ்
ஆசிரியர் குழு – திடவை வேசர் [மற்றவர்களிடையில் கழண்டுவிட்டனர்]
மணல்வீடு
ஒரு இலக்கிய இதழின் இரண்டாம் பதிப்பு. Mu Harikrishnan அனுப்பியிருந்தாரு. இலக்கியம் என்று கூறி வித்தியாசம் வலிந்து வைக்கிறது எப்பவுமே ஃபேஷன் போல. இதுலயும் தேவையான வித்தியாசம் இருக்கு. கவிதைகள், கதைகள், கதைக்குறிப்புகள், நேர்காணல், கட்டுரைகள், கேள்வி பதில் மற்றும் தனிப்பாடல்கள் உள்ளடக்கியுள்ளது.
நல்லுழவன் எழுதிய ‘நவிஈன கவிதைகள்’ கட்டுரையில் இரண்டு படங்கள் வித்தியாசமாக ஈர்த்தது.
கருத்தடையான் எழுதிய கதைக்குறிப்புகளும் ஈர்த்தது.
*
ஒருவேள நாங் செத்துட்டா என்ன செய்வ ராசா?
தலைப்பிள்ளைன்னா எரிக்கணும். நீ நடுக்கொண்டுதானே பொதைக்க வேண்டியதுதாங்.
*
ஒரு நா முழுக்க ஒங்கூடவே இருக்கணுங்
மறு நா எவங்கூட இருக்கணுங்கே?
*
மற்றபடி கவிதைகள் பலதில் விரச வார்த்தைகள் வலிந்து திணிக்கப்பட்டதாக எனக்கு தோன்றியது. இலக்கியம் என்றால் இப்படிப்பட்ட சொல்லாடல் ஒரு தைரியமான வெளிப்பாடு என்ற கருத்து மாற வேண்டும். இல்லேன்னா விளங்காது.
* மேலேங்கும் யோனிகள்
* உதடுகளை புளுத்திக்கொண்டு
* அக்குள் மயிர்களின் ஆடர்த்தி
* புட்டத்து பருக்களின் எண்ணிக்கை
* பூக்களிட்ட ஜட்டி
வித்தியாசம் முக்கியம்தான். அதைவிட முக்கியம் சுண்டியிழுக்கும்படி சுவைபட சொல்வது. ஏதோ பாத்து பண்ணுங்க.