தென்றல்
அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
வாசல்லே கோழி ரெக்கை கெடந்தா…
பறக்குற பருந்தைக் கேளுடா…
பூசாரியைக் கேக்குறே…
பழம் பஞ்சாங்கம்…
மச்சான் குடிச்சது ஊருக்கே தெரியும்…
ஆவியா வந்தா மாரி மூலமாவா கேட்டுருப்பான்…
மாரி தாம்லே உங்கள பயமுறுத்தி சரக்கு வாங்கிட்டான்…
ஆவி எறங்குறதெல்லாம் கப்ஸா…
கொள்ளி வாய்ப் பிசாசா…
உடம்பை எரிக்கிரப்ப நரம்பு முருக்குதுடா…
தாத்தனை எரிச்சப்ப பாத்திருக்கேன்…
இது வெறும் உடலியல்…
நாடு ராத்திரி மீன்கொழம்பு வாசனை வருதா…
பட்டாளத்தான் வீட்டுக்கு வந்துருப்பான்…
மக்கா, அந்தப் பக்கம் போய்டாதே…
பின்னே, ஜெகன் மோகினியா சமைச்சிக்கிட்டிருக்கும்…
எலுமிச்சம்பழம் கெடந்தா…
எடுத்து பிழிஞ்சு ஜூஸ் போட்டு குடிச்சு
போய்க்கிட்டே இருலே…
மாந்த்ரீகமாம்…
மண்ணாங்கட்டி…
மோகினி பிசாசெல்லாம் இல்லே மச்சி…
நம்ம முக்கு தெரு காயத்ரி…
பழனிச்சாமி வீடு வரைக்கும் போகும்…
ஏதோ லவ்வு மேட்டரு…
அத்தனை தர்க்கங்களையும் தகர்த்தெறிந்தது…
வறட்டு தைரியத்தை பெயர்த்தெறிந்தது…