(இதற்கு முன்…) அப்போலோ திட்டத்தின் மூலமாக நிலவுக்கு சென்று வந்தவர்கள் 24 பேர். அதில் 12 பேர் நிலவில் இறங்கி தடம் பதித்துள்ளனர். 12 பேர் நிலா வரை சென்று, ஆனால் அதைத் தொடாமல், திரும்பி வந்துள்ளனர். ஒவ்வொரு அப்போலோ பயணத்திலும் மூன்று வீரர்கள் இருப்பார்கள். இருவர் லூனார் மாட்யூல்’இல் கிளம்பிச் சென்று நிலவில் இறங்கி ஆராய்ச்சிக்காக கல்லையும் மண்ணையும் பொறுக்கிக்கொண்டிருப்பார்கள். ஒரு வீரர் இவர்கள் திரும்பி வரும் வரை கமாண்ட் மாட்யூல்’இல் நிலவை சுற்றி வந்துகொண்டிருப்பார். அப்போலோ 13’இன் பாதிக்கப்பட்ட சர்வீஸ் மாட்யூல் (கழற்றி […]
“All are equal; but some are more equal” யாராவது தன் அமைப்பில் தனக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி என்னிடம் புலம்பும்போது நான் உதிரும் முத்துக்கள் இவை. எப்படி என் மனதில் இது பதிந்தது அல்லது எங்கு படித்தேன் என்று எனக்கே நினைவில்லை. ஆனாலும் சொல்லிக்கொண்டிருந்தேன் – “அனைவரும் சமம்; சிலர் சற்று கூடுதலாகவே சமம்”. சென்ற திங்கட்கிழமை மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (CST) என்று தற்போது அழைக்கப்படும் விக்டோரியா டெர்மினஸ் (VT) சென்றிருந்தேன். […]
(இதற்கு முன்…) ஜூன் 12, 1969. மதியம் 12:30. ஏவல் ஆணைக்குக் காத்திருக்கும் ராக்கெட் அப்போலோ 11 – சாட்டர்ன் V ஏவுதளத்தில் நிலை கொண்டு 23 நாட்கள் ஆகிவிட்டிருந்தது. அப்போலோவின் திட்ட இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஸாமுவேல் ஸி. பிலிப்ஸ் (Lt. Gen. Samuel C. Phillips), வாஷிங்டன் D.C.’யில் அமைந்துள்ள நாசா’வின் தலைமையகத்தில் ஒரு உயர்மட்ட சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு டஜன் நிர்வாகிகள் அந்த அறையில் குழுமியிருந்தனர். மேலும், நாடெங்கிலுமிருந்து இரண்டு டஜன் நிர்வாகிகள் டெலிபோன் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர். […]