நமக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. எந்தவொரு பழக்கத்தையும் லேசில் விட மாட்டோம். ஏன் செய்கிறோம் என்று தெரியாது, ஆனால் செய்வோம். அதில் ஒன்று ‘பிள்ளையார் சுழி’. ஒரு பக்கத்தில் எழுத ஆரம்பிக்கும் போது, தலைப்பில், இந்த பிள்ளையார் சுழி போடுவது தமிழர்களின் வழக்கம் மற்றும் கலாச்சாரம். முழு முதற் கடவுள் பிள்ளையார். கோவிலிலும் அவரைத்தான் முதலில் வணங்குவோம். தெய்வீக அம்சம், மஹாபாரதம் எழுதியவர், பொதுத் தேர்வுகளில் பாஸ் செய்ய உதவுபவர் என்ற பல காரணத்தால் பிள்ளையாரும் அவர் பெயரால் நிலவும் இந்த […]
சீனாவில், தியனன்மென் சதுக்கத்தில் நடக்கும் மாணவர் புரட்சியை ஒடுக்க இராணுவத்தின் பீரங்கிப் படை அணிவகுத்து வருகிறது. அதை தடுத்து நிறுத்தும் வகையில் ஒருவர் அந்த அணிவகுப்பை எதிர்த்து நிற்கிறார். பீரங்கியை ஓட்டும் ராணுவ வீரர்களிடம் பொறுமையாக, பதட்டமில்லாமல் விவாதம் புரிகிறார், அல்லது விளக்க முற்படுகிறார். இந்த சம்பவம் நடந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் அவர் யார், அவர் பெயர் என்ன, இப்பொழுது எங்கிருக்கிறார் அல்லது என்ன ஆனார் என்று இதுவரை நமக்குத் தெரியாது. அவரை டேங்க் மேன் (Tank Man), அதாவது பீரங்கி […]