நீங்கள் எத்தனை பள்ளிக்கூடம் படித்திருப்பீர்கள்? இப்பொழுதெல்லாம் பலர் தங்கள் குழந்தைகளை ஒரு சிறந்த(!!!) பள்ளியில் சேர்த்துவிட்டு அதை அப்படியே மறந்துபோக எண்ணுகின்றனர். ஏனெனில், பள்ளியில் ஒரு குழந்தையை சேர்ப்பதைவிட சிரமம் பள்ளி மாற்றுவது. புது பள்ளியில் இடம் காலி இருக்க வேண்டும் முதலில். அப்படியே ஒன்றிரண்டு இடம் இருந்தாலும் அதற்கு மாநகராட்சி குப்பை அள்ளுவதற்கான குத்தகை போல அடிதடியே நடக்கும். அது போக டொனேஷன், காப்பிடேஷன், பள்ளி மாற்றுச் சான்றிதழ், லொட்டு லொசுக்கு என்று பர்ஸுக்கும் ஏகப்பட்ட வேட்டு வைத்து விடும். சேரப்போகும் வகுப்பைப் […]