(இதற்கு முன்…) May 20, 1969 நண்பகல் 12:30 ஃப்ளோரிடா கிழக்கு கடற்கரை அப்போலோ 11- சாட்டர்ன் V தாங்கி செல்லும் க்ராலர் மே 1969 AS-506 என்று இஞ்சினியர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சாட்டர்ன் ஐந்து (Saturn V) வகையைச் சேர்ந்த அந்த ராக்கெட் மிக மிக மெதுவாக தனது ஐந்து மைல் நீள பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது. ராக்கெட் என்பதை, தமிழில் சொல்வதானால், ‘ஏவூர்தி’ என்றும் சொல்லாமென்றாலும் நம் வசதிக்காக ராக்கெட் என்றே சொல்லுவோம். முப்பது மாடி உயரத்தில் (363 அடி) கருப்பு வெள்ளை நிறத்தில் நம் ராக்கெட், ஏவூர்தி கட்டுமானக் கட்டடத்தில் […]
அழைப்பு ரகுராம் அலைபேசியில் அழைத்து சொன்னபோது மறுக்கமுடியாது. மும்பையில் இருக்கும் ஒரே MIT கல்லூரித் தோழன். Batchmate. மற்றும் முக்கியமாக மதுரைக்காரன். திருமணம் சென்னையில் என்றாலும் கண்டிப்பாக வருவதாக கூறினேன். அந்த காலத்தில் நல்லவர்கள் இருந்தார்கள். விழாவை சிறப்பிக்க அழைத்தால் டிக்கெட்டும் எடுத்துக் கொடுப்பார்கள். ரகு அத்தனை நல்லவனில்லை போலும். அல்லது விவரம் போதவில்லை. பத்திரிகை மட்டும் வைத்தான். அவனை குறை சொல்ல முடியாது. கடந்த நாலைந்து வருடங்களாக இதுதான் ட்ரெண்ட் போல. என் மாமனார் வீட்டிலும் வாயார அழைப்பார்கள். விருந்தும் வைப்பார்கள். […]
(இதற்கு முன்…) Ad astra per aspera… கென்னெடி விண்வெளி மையத்தில் இருக்கும் அப்போலோ 1 (Apollo 1)இன் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் இதன் அர்த்தம் “நட்சத்திரங்களுக்கான பாதை கரடுமுரடானது“ அப்போலோ 1 – நினைவஞ்சலி ஒரு கடினமான மிகப் பெரிய படைப்பை மனிதன் மேற்கொள்வது எதற்காக? நான் மீண்டு வரும்போது எனக்கு சகல வசதிகளும் வேண்டும் என்று எகிப்திய மன்னர்கள் கட்டியதுதான் பிரமிடுகள் (Pyramids). எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்கக் கட்டப்பட்டதுதான் சீனப் பெருஞ்சுவர். காதலுக்காக கட்டப்பட்டதுதான் தாஜ்மஹால். […]
நிலா… சொல்லும் போதே எவ்வளவு ரம்மியமாக உள்ளது பாருங்கள். நம் உலகை சுற்றும் கோள் நிலா மட்டுமே. அதுவும் தன் ஒருபக்க முகத்தை மட்டுமே காட்டி சுற்றிவரும் நிலா மட்டும் இல்லையேல் நமக்கு பாட்டி வடை சுட்ட கதை தெரிந்திருக்காது, பல குழந்தைகள் சரியாக சோறு தின்றிருக்காது, பலர் தன் காதலி / காதலனை கற்பனையில் கண்டிருக்க முடியாது, இவ்வளவு ஏன், அவ்வளவு பெரிய கடலில் அலைகளே ஏற்பட்டிருக்க முடியாது. சூரியனுக்கு அடுத்து வானில் நாம் காணக்கிடைத்த பிரகாசமான கோள் […]