Review

Asura – Anand Neelakantan

Print Friendly, PDF & Email

Asura
Anand Neelakantan
Leadstart Publishing

Asura was by a new author Anand Neelakantan and I took the book because it was about one of my favourite stories Ramayana, others being Mahabharata and Iliad. The book starts with death of Ravana, the Asura who is portrayed as a villain of the Ramayana by most of the writers. I have heard of Ravana Kaaviyam (Tamil) where Ravana is the hero, however never got a chance to read it. Luckily I stumbled upon this book Asura which was a great read and changes the entire perception towards the characters of Ramayana. The beauty is that, even the ‘Asura’ Ravana is not the hero of the book but could just say as the lead character. The real hero is the commoner Bhadra. The entire story goes through the eyes of Bhadra. From the eyes of an oppressed poor towards the rich and powerful. The book is by itself named “Asura : Tale of the Vanquished”. The emotions that this book brings out of us is beyond explanations. You must read to experience it.

People must read this book. They should shed their inhibitions and read this Asura. I would like to tell a small incident. After I had bought and read Asura in English, Leadstart asked me if I could read and review Asura. I asked if I could get a Tamil version for the read. They agreed, however gave me a Malayalam version. I was annoyed that Leadstart could not differentiate between the Dravidian languages. Obviously, I could not read Malayalam. So I offered Malayalam version of Asura to my colleagues in office, for free. Still, when I tell them of the gist of the book, they would flatly deny taking it. They were not even ready to read bad of Ram and good of Ravana. I believe that the same reaction of denial would have come from most of the other peoples, had I given them the Asura in Tamil, Telugu, Kannada, Hindi, Marathi and Gujarati versions. I repeat again. People should shed their inhibitions, come out of their shell and experience Asura.

Now, regards reviewing this book, I failed again and again to review this book to the extent it should be explained. Nothing was justifying the emotions this book evoked. I was postponing or deleting the drafts I wrote. In the meanwhile, I stumbled upon Kishoker Stainstas’s review of Asura in his Facebook post. When I read his review, I felt that I could not write or add anything more than he has said. With his permission, I share his Facebook post at the end of this blog, below links of various other reviews in English. You would be blessed if you could read Tamil.

Vardict: Secure in your library

Other Reviews:

Kishoker Stanislas‘s review of Asura in his Facebook post is below:

அசுரன்
……………..

நான் எட்டாவது ஒன்பதாவது தரங்களில் படித்துக்கொண்டிருந்த போது “சமூகக்கல்வியும் வரலாறும்” பாடப்புத்தகத்தில் , அனுராதபுரம் இராசதானி பற்றிய பாடத்தில் “எல்லாளன் “என்ற தமிழ் மன்னனின் வரலாறும் வருகிறது. அவனைப்பற்றி குறிப்பிடும் போது “எல்லாளன் ஒரு இந்திய தமிழ் மன்னன், அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு இலங்கையை நாற்பது ஆண்டுகாலம் ஆண்டுவந்தான். அவன் தமிழனாக‌ இருந்த போதும் இலங்கையின் அனைத்து மக்களையும் நேர்மையான முறையில் ஆட்சி செய்த நல்லாட்சியாளன். அவனது ஆட்சிக்காலத்தில் அனுராதபுர ராசதானி செல்வம் செழித்து விளங்கியது. பின்னர் துட்டகைமுனு என்ற சிங்கள இளம் அரசனுடன் போர் ஏற்பட்ட போது, இரு தரப்பிலும் ஏற்படப்போகும் உயிராபத்தை தவிர்க்கும் முகமாக துட்டகைமுனுவுடன் ஒற்றைக்கு ஒற்றையான போரில் பங்கேற்ற அறைகூவல் விடுத்தான் , இளைஞான துட்டகைமுனுவை சமாளிக்க முடியாமல் அந்த வயோதிக மன்னன் கொல்லப்பட்டான். எதிரியாக இருந்த போதும் , எல்லாளனின் சிறப்பான ஆட்யினால் கவரப்பட்ட துட்டகைமுனு, எல்லாளனுக்கு அனுராதபுரத்தில் மாபெரும் சிலை ஒன்றை வைத்தான். இன்றும் அந்த சிலையை காணலாம்” இப்படியாக இரண்டு பெரிய பத்திகள் எல்லாளனைப் பற்றி இருந்தது. எங்கள் அம்மா படிக்கும் போது இதே இலங்கை அரசின் பாடப்புத்தகத்தில் , இதே எல்லாளனைப் பற்றி ஒரு தனி பாடமே இருந்ததாகவும் , பாடத்தின் முடிவில் எல்லாளனை , சிங்கள இளைஞனான துட்டகைமுனு நயவஞ்சகமாக முதுகில் குத்தி கொன்று ஆட்சியை பிடித்தான் என்றும் இருந்ததாகவும் சொல்வார். எனது தம்பிகள் படிக்க ஆரம்பித்த போது எல்லாளனைப் பற்றிய இரண்டு பத்திகள் ஒன்றாகிப் போனது. எல்லாளன் என்ற மன்னன் அனுராதபுரத்தை ஆண்டான் என்ற தொனி மட்டுமே இருக்கிறது. அவன் நல்லது செய்தான் என்ற பேச்சையே காணோம். அவன் ஒரு தமிழன் என்பது கூட அவ்வப்போது இருட்டடிப்பு செய்யப்படுகிறது. எல்லாளன் என்ற தமிழ் பெயர் கூட “எல்லாள” ஆகியிருக்கிறது என்பது வேற விடயம். சரி… அதைவிடுவோம். தோற்கடிக்கப்பட்ட ஒரு நல்ல ஆட்சியாளன் பற்றிய பேச்சே இப்போது இலங்கை வரலாறுகளில் காணமுடியாதுள்ளது , இருட்டடிப்புச் செய்யப்படுகிறது , திரிக்கப்படுகிறது . மாறாக அவனை நயவஞ்சமாக தோற்கடித்த துட்டகைமுனு அவதார புருஷனாக சித்தரிக்கப்படுகிறான். இரண்டாவது முறையாக மஹிந்த ராஜபக்க்ஷே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது , துட்டகைமுனு ஒரு அவதார புருஷன் என்றும் , தான் அவர் வழி வந்தவர் வகையறா பிரச்சாரங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பரவலாக பரப்பப்பட்டது. இப்போதும் சிங்கள‌ கடும்போக்கர்களுக்கு , பராக்கிரமபாகுவை விட ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனை விட துட்டகைமுனுவை பிடிக்கும். அவனை ஒரு அவதார புருஷனாக கொண்டாடுவார்கள்.

இதே தான் இராவணனுக்கும் – இராமனுக்கும் நடந்தது. இங்கே இராவணன் எல்லாளன், ராமன் துட்டகைமுனு. மகாபரததோடு ஒப்பிடும்போது மிகச்சமீபமாக இருக்கிற அனுரதபுர இராசதானிக்கால வரலாற்றையே , வெறும் முப்பது வருட இடைவெளியில் , படித்த ஒரு சமூகம் இருக்கத்தக்கதாகவே இலங்கை அரசால் திரிக்கவும் , இஷ்டப்பட்டபடி மாற்றவும் முடிந்திருக்கிறது என்றால் , இராவண – ராம வரலாற்றை மகா திரிபுபடுத்தி பச்சைப்பொய்யான ஒரு காவியத்தை கம்பர் கொடுத்திருப்பத்தில் ஆச்சரியமே இல்லை.

இதுவரை காலமும் இராமனின் வரலாறு மட்டுமே சொல்லப்பட்டுக்கொன்டிருந்த நேரத்தில் , சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக நாடோடிக்கதையாக இருந்த இராவணனின் கதையை மலையாளத்தில் “ஆன்ந்த் நீலகண்டன் “எழுத தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்து வந்திருக்கும் நாவல்… இல்லை வீழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றுப்பதிவு தான் “அசுரன் “.

இயற்கையோடு இணைந்த , எந்த வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறது அசுர குலம். கவனிக்க! இங்கே அசுரர்க்ள் என்பது ஒரு குலம், ஆனால் கம்பன் செய்த வம்பினால் அது அரக்கர்கள் என்ற பிம்பமாகி இருக்கிறது. நியாயம் , தர்மம் , போர் விதிகள் என்று பொத்திப் பொத்தி போர் செய்த படியால் , இந்திரன் , விஷ்ணு , திருமால் போன்ற தேவ குல – கவனிக்க ! தேவர் என்பதும் குலம். கடவுள்கள் அல்ல- காட்டுமிராண்டி அரசர்களிடம் தோற்றுப் போகிறது அசுர சாம்ராஜ்ஜியம். தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும் , மக்கள் மீது பீதியை ஏற்படுத்தவும் சாதீயக் கொள்கைகளையும் சமூகத்தின் மீது திணிக்கின்றனர் தேவர்கள். ஒருபக்கம் சாதீய மற்றும் , தேவர்களின் பண்டிதப் பிராமணர்கள் மற்றும் சமஸ்கிருத மொழி மேலோங்கியமையால் அசுர குலம் நிலைகுலைந்து போகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைமைகள் இருந்தாலும் , ஒரு ஸ்திரமான் தலைமை அசுர குலத்திற்கு இருக்கவில்லை. காலப்போக்கில் தேவ குலம் தங்கள் முன்னோர்களின் அரசர்களாக இருந்த விஷ்ணு, திருமால் , இந்திரன் போன்றவர்களை கடவுள்களாக்கி விடுகிறார்கள். அதன் பிறகு தேவ அரசர்களாக வந்தவர்களை , கடவுள்களின் அவதாரம் என்றும் , மடிந்துபோன கோடிக்கணக்கான வீரர்களை தேவர்கள் என்று நம்ம வைக்க ஆரம்பிகிறார்கள் பிராமணர்கள். இந்த நேரத்தில் சிறுவனாக இருக்கிறான் ராவணன், வளர வளர அசுர குலத்திற்கு தனி நாடொன்று தேவையென்பதையும், அந்த காட்டுமிராண்டு தேவர்களை விரட்டியடித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் கைப்பற்ற வேண்டுமென்றும் அவனுக்குள் லட்சிய வெறி எழுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தயார்ப்படுத்துகிறான் , சிறுபடை சேர்க்கிறான் , பெரும்படை ஆக்குகிறான், நாடு கொள்கிறான் , சக்கரவர்த்தி ஆகிறான், தன் மகளை தன்னிடமே கவர்ந்து வருகிறான் , அதுகுறித்து இறந்தும் போகிறான். இது தான் கதைச்சுருக்கம். ஆம்… நீங்கள் இராமாயணத்தில் படித்தது போலவே தான்.

ஆனால் அசுரன் எப்படி வேறுபடுகிறது? இராம – இராவண கதையை இராவணனின் தரப்பில் இருந்து சொல்கிறது. நாவலில் இராமன் வரும் இடம் கடைசி சில பகுதிகள் தான். மாற்றவையெல்லாம் அசுர குலத்திற்க்காக ஒரு ராஜ்ஜியத்திற்கு கனவுகண்ட அதன் தோற்றத்திற்கும் இருப்பிற்கும் பாடுபட்ட பேரரசர் ராவணனைப் பற்றியே நகர்கிறது. ராமன் என்ற ஒரு தேவ அரசனை கடவுளாக்குவதன் மூலம் பிராமணத்தையும் , சாதீயத்தையும் வேரூன்ற வைக்க கம்பர் என்ற வம்பர் செய்த அயோக்கியத்தனம் எதுவுமே இங்கே செய்யப்படவில்லை, கதையின் நாயகன் ராவணனே ஆனாலும் அவன் ஒரு அவதார புருஷனாகவோ நன்னெறி தவறாத மனிதராகவோ சித்தரிக்கப்படவில்லை. பசிக்கு திருடுகிற சிறுவன் , கோபப்படும் , பேராசைப்படும் இளைஞன் , பல மகளிரைக்கூடும் அக்கால அரசர்களை போலவே சராசரி ஆசைகளை கொண்ட ஒருவன் , இராஜ்ஜியங்கள் மீது பேராசை கொண்டவன், புகழ் மோகம் கொண்டவன். இப்படியாக ஒரு சராசரி அரசனாக இராவனன் இருக்கிறான். இது அத்தனையுமே அரசர்களிடத்தில் இருப்பது தான். ராவணன் தரப்பு கோபம் என்னவென்றால், யாரோ ஒரு தேவ குல அரசன் ராவணனோடு போரிட்டதை திருபுபடுத்தி , அவனையும் அவன் குலத்தாரையும் அரக்கர்களாக்கி , பிராமணத்தைப் புனிதப்படுத்தி , சாதீயத்தை வேரூன்றப் பண்ணிய பித்தலாட்டம் மீதானது தான். எப்படி தாம் அடிமைப்படுத்திய மக்கள் மீது தங்களின் மனிதக் கடவுள்களையும் அவர்களின் சம்பிரதாயத்தையும் திணித்து , இன்றுவரை அவற்றை – எந்த ராவணனின் குலம் அதை எதிர்த்து நின்றதோ அதுவே – பின்பற்றிக்கொண்டிருக்குமாறு தேவ குலத்தவர்கள் செய்தார்களோ -தேவ குலத்தவர்கள் இந்தியாவின் வடக்கில் இருந்திருக்கிறார்கள் . இன்னும் அங்கே தானே இருக்கிறார்கள் இல்லைய?- அதுபோல ஒரு பச்சைப் புழுகு காவியம் இயற்றி அதை உலகுமுழுதும் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் வம்பர் . கம்பர் வெற்றிபெற்றிருக்கிறார். காரணம் வென்றவர்களின் கதையைத்தானே வரலாறு குறித்துவைத்துக்கொள்கிறது. தோற்றவர்களையும் , அவர்கள் தடையங்களையும் அழித்துவிட முடியுமாகையால் தோற்றவர்கள் குறித்தும் , வென்றவர்களின் வெற்றி குறித்தும் எந்தத் திரிபையும் செய்துவிடவும் முடிகிறது.

இராமாயணத்தில் சொல்லப்படுகிற, அனேகரால் கிண்டலடிக்கப்படுகிற , உண்மைத்தன்மை கேள்விக்குறியாகிற விடயங்கள் யதார்த்தத்தில் எப்படி இருந்தது என்பதை அசுரன் சொல்கிறது. பின்னாளில் இராமன் என்ற மனிதை அயோக்கியத்தனம் செய்து கடவுளாக்கும் முயற்சியில் கம்பர் அவற்றைக்கு எல்லாம் அமானுஸ்யம் பூசி கேலிக்கூத்து ஆக்கிவிட்டிருக்கிறார். உதாரணமாக இராவணனின் பத்து தலை , புஷ்பக விமானம் , பூமி எப்படி பிள்ளை- சீதை- பெற்று வெளியே துப்பும் ? , இராமன் வளைத்த வில் , கும்பகர்ணனின் தூக்கம் , குரங்கு மனிதர்கள் , இராமனின் பாலம் , மாய மான் மாரீசன் , இந்திரனும் சகபாடிகளும் , விஷ்ணு என்கிற கொள்ளையனும் ,திருமால் என்கிற அரசனும் கடவுளான கதை , சீதையின் தீக்குளிப்பு , சீதையின் இறப்பு , இப்படியாக ராமாயணம் படிக்கும் போது அறிவியலுக்கு எட்டாமல் சிரிப்புக்காட்டிக்கொண்டிருக்கிற பல விடயங்களை யதார்த்ததில் – உண்மையில் – எப்படி இருந்தது என்று சொல்கிறான் அசுரன். கம்பர் எப்படி கபட நாடகம் ஆடியிருக்கிறார்ன் என்பதை நாமே ஊகித்துக்கொள்ளலாம். தவிர , போர் நெறி பிறழ்ந்து சூழ்ச்சிகரமாக ஒருவனை கொன்றவனை , தன் மனைவியையே பிராமணர்களுக்கு பயந்து சந்தேகித்தவனை கடவுளாக்கியது மட்டுமல்லாது , அவன் செய்த ஒவ்வொரு இழிச்செயலுக்கும் தாமே உருவாக்கிய வேதத்திலிருந்து சப்பைக்கட்டு கட்டி கடவுளாக்கிய முறை எவளவு மகா மட்டமானது? படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்.. உங்களில் எத்தனை பேர் உங்கள் காதலியோ மனைவியோ தாயோ வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டால் அதை நியாயபடுத்தி பிரிந்து செல்வீர்கள்? சாதாரண மனிதர்கள் நாமே அதை செய்யமாட்டோம் என்றிருக்க கடவுளாக சித்தரிக்க படும் ஒருவன் செய்கிறான், இப்படியான அபத்தங்களையெல்லாம் கமுகமாக காமடி செய்கிறது அசுரன்.

ஒரு நாவலாக…

எழுத்தும் மொழிமெயர்ப்பும் கொண்டாட்டமாக இருக்கிறது. அலுப்புத்தட்டாத சுவாரசியமான எழுத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார் ஆனந்த் நீலகண்டன். சுவாரசியக் குறைவு இல்லாத மொழிபெயர்ப்பும் கூட. எந்த இடத்திலும் அலுப்புதட்டவே இல்லை. இரண்டு நாட்கள் விடுமுறை தொடர்ர்ச்சியாக கிடைக்குமாக இருந்தால் ஒரே மூச்சில் படித்துமுடித்து விடலாம். அட்டகாசமான நாவல்.

இரண்டு பேர் கதை சொல்கிறார்கள். ஒருவர் ரவணன், அடுத்தது ராவணனின் இளமைப் பிராயம் தொட்டு ராவணனோஉ இருக்க அல்லது ராவணைனை கண்காணிக்க வாய்க்கப்பெற்ற பத்ரன் என்ற ஒரு குடிமகன். இவன் தான் பின்னாளில் இராமன் இராவணனை வெற்றிகொண்ட பிறகு , அயோத்தியில் வாழ்ந்துவரும் நேரம் , குடித்துவிட்டு, மனைவியை அடிக்கும் போது “ராமனை போல என்னை நினைத்தாயா? களங்கம் அடைந்த மனைவியை ஏற்றுக்கொள்ள”என்று கேள்வி கேட்ட சலவைகாரன். அசுர சாம்ராஜ்ஜியம் ஒன்றை அமைகும் போது அரச தரப்பிலும் , குடிமக்கள் தரப்பிலும் என்ன நடந்த்து என்பதை அரசனே சொல்லிக்கொண்டிருப்பதோ அல்லது , ஒரு கீழ்நிலை குடிமகனோ சொல்லிக்கொண்டிருபதோ பொருத்தமானதாக இருக்காது என்பதால் அரச தரப்பு கதைகளை ராவணனும், கடநிலை மக்கள் மத்தியில் அதன் விளைவுகளை பத்ரனும் சொல்வது கதையைப் புனைந்த ஆசிரியரின் நுட்பம் அபாரம். தவிர , கதைப் போக்கில் நடந்தவற்றைக் கூறிக்கொண்டிருக்க வேண்டுமென்பதால் , எப்போதும் பத்ரன் என்ற கதாபாத்திரம் ராவணனுக்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொண்ட லாவகம் மெச்சத்தக்கது. ராவணன், பத்தரன் சொல்லும் கதைகளில் எனக்கு சுவாரசியமாக இருப்பது பத்ரன் சொல்லும் கதைகள் தான். `மனதுக்கு அவளவு நெருக்கமாக இருக்கும். அர்ச அல்லது அரசியல் நிலைப் பார்வைகள் இல்லாமல் அவற்றை கீழிருந்து, எமது கண்மட்டத்தில் வைத்து விமர்சிக்கும் சாதாரண குடிமகனின் பொதுப்புத்தி எனக்கும் இருப்பதால் அப்படியான ஒரு கதாபாத்திரம் சொல்லும் கதை எனக்கு நெருக்கமானதாகப்பட்டு இருக்கலாம். இராவணன் சொல்லும் கதைகள் சீரான கோட்டில் பயணித்தாலும் பத்திக்கு பத்தி சிலநேரம் சம்மந்தம் இல்லாதது போல் தோன்றும். முதற்பத்தியில் ஒன்று கதைத்து , இரண்டாம் பத்தியில் அதற்கு முரணான ஒன்றை ராவணன் பாத்திரம் பேசிக்கொண்டிருக்கும். சில வேளை அடுத்த வசனமே முன்வசனத்துக்கு முரண்படும். ” எனக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது. ஆனாலும் அவனை முத்தமிட விரும்பினேன்’ இப்படியாக, ஆனால் இது சாதாரண ஒரு மனித மனநிலையை , ஒரு க்ளம்சியான அரசனின் மனநிலயை வாசகனிடத்தில் பதிவுசெய்து அந்த அரசன் குறித்த பிம்பத்தை ஏற்படுத்த ஆசிரியர் கையாண்ட உத்தியாகப் பார்க்கிரேன்.

பாதகமாக என்றால் , சில சொல்லாடல்கள் நெருடியது. இரண்டு இடத்தில் “ராஸ்கல் “என்ற வார்த்தை வருகிறது. ஒரு இடத்தில் “சுனாமி “என்ற வார்த்தைப்பிரயோகம் வருகிறது. இந்த இரண்டு அந்நிய சொற்களும் எபோது தமிழில் கலந்தது? அது போக இந்த இரண்டு சொற்களின் தோற்றத்தின் காலமும் , கதை சொல்லப்படும் காலமும் ஒன்றிற்கு ஒன்று மிகுந்த தூரமானவை. மூலத்திலேயே இதே சொற்கள் தான் இருந்ததா இல்லை , மொழிபெயர்ப்புத்தவறா தெரியவில்லை. இது தவிர நாவலில் நெருடும் படியாய் எதுவுமே இல்லை.

வரலாற்றையோ , அல்லது எது உண்மை? ராமாயணமா அசுரனா என்ற வாதத்தையோ தள்ளிவைத்துவிட்டு பார்த்தால் கூட ஒரு நாவலளவிலும் அட்டகாசமாக இருக்கிறத்து அசுரன்.

எதை நம்புவது?

ராமன் – ராவணன் தொடர்பில் இரண்டுவிதமான கதைகள் இப்போது கண்ணுக்கு முன்னே இருக்கின்றன- ஏற்கனவே ஊருப்பட்ட ராமாயணங்கள் இருப்பதாகவும் , அவற்றுக்கிடையில் கூட வேறுபாடுகள் , அடிதடிகள் இருப்பதாகவும் கேள்வி. – உண்மையை பிரட்டப்போனால் அப்படித்தான் ஆகும். ஒரே போல அனைத்தும் இருக்காது – அப்படியிருக்க ராவணனின் கதை சுமந்து வந்திருக்கும் அசுரனா ? இல்லை ராமாயணமா? எதில் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கிறது? என்னைக்கேட்டால் ராமாயணம் ஒரு பித்தலாட்டம் என்றும் திரிக்கப்பட்டது என்றும் கூறுவேன். உண்மையில் , இராம – இராவண யுத்தம் நடந்திருந்தால் அது அசுரனில் சொல்லப்பட்டது போலவே தான் இருந்திருக்கும். ராமாயாணம் ஒரு பித்தலாட்டம் என்றும் ராமன் கம்பனின் கருணையால் வலிந்து கடவுளாக்கப்பட்ட சாதாரண ஆசாபசங்கள், அயோக்கியத்தனக்கள், இரக்கம், கோபம் அத்தனையும் நிறைந்த மனிதனாக மட்டுமே இருந்திருப்பான் என்பதற்கும் நான் நம்பும் சில காரணங்கள்.

அதிக பாடல்கள் : ராமனே கதாநாயகனாக இருந்தாலும் அதிக பாடல்கள் பாடப்படுவது ராவணனுக்கு தான். உண்மையை மறைக்க வம்பருக்கு அதிக பாடல்கள் தேவைப்பட்டிருக்கிறது.

வம்பரின் குற்றவுணர்ச்சி : என்னதான் ராமனை சப்பைக்கட்டுகள் கட்டி ராமன் செய்த போக்கிரித்தனங்களை போக்கு காட்டினாலும் , ஆங்காங்கே ராவணனையும் புகழ்ந்து தள்ளிக்கொண்டேயிருப்பார் கம்பர். சிறந்த கலைஞன் , சிவபக்தன் இந்த மாதிரியாக. ஒரு அரக்கனை புகழவேண்டிய அவசியம் என்ன வம்பருக்கு? வரலாற்றை மறைத்துக்கொன்டிருக்கும் தன் குற்றவுணர்ச்சி போகவேண்டுமே!

வம்பருக்கும் , அவர் எங்கிருந்து சுட்டு பிரட்டி எழுதினாரோ , அந்த வால்மீகிக்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகள்.

நிஜமும் – மாயமும் : ராமாயணத்தில் சொல்லப்படும் அத்தனையுமே அறிவியலுக்கு சற்றும் அண்டாத தேனாண்டாள் ரிலீஸ் படம் போல இருக்கும். ஆனால் அசுரன் அத்தனைகும் தர்க்க நியாயம் கற்பித்து யதார்த்தை பேசுகிறது.

இன்னமும் இருக்கும் வெறுப்பு மனோ பாவம்: இப்போதும் வட இந்தியர்களுக்கு தென்னிந்திய குறித்த் ஏளனம் , தோல் நிறம் குறித்த வெறுப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அவர்களின் சாதீயமும் வெறியும் அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க , அசுரனில் சொல்லப்படுவது போல படையெடுத்துப் போய் , தங்களது நம்பிக்கைகளை தாங்கள் வெறுக்கும் மக்களை “அரக்கர்கள்” பட்டம்சூட்டி அவர்கள் மீது திணித்திருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஒன்றை யோசிப்போம். நாம் எல்லோரும் தமிழர்கள். நமது கோவில்களில் சமஸ்கிருதம் எப்படி வந்தது? ஏன் வர வேன்டும்? ஏன் நாம் அதை இன்னமும் அனுமதித்துக்கொண்டே இருக்கிறோம்.

என்னைக்கேட்டால் ராமனும் கடவுள் இல்லை, ராவணனும் இல்லை. ராமனும் ராவணனும் ஒரே மாதிரியான ஆட்கள் தான். ஆனால் ராவணன் தன் இனத்துக்காகவும் , அதன் விடிவுக்காகவும் கனவு கண்ட அதை நிறைவேற்ற பாடுபட்ட ஒரு பேரரசன். சாதீய வெறிகொண்ட ராமனும் அவன் கூட்டமும் அதை நசுக்கி , எந்த ராவணன் தன் குலதிற்கான சுதந்திர கனவுகள் கண்டானோ , அவனது குலத்தின் மீதே தங்களது சம்பிரதாயாத்தை திணிப்பதில் வெற்றிகண்டிருக்கிறார்கள்.

உண்மை தான்! வெற்றிபெற்றவர்களது கதைகள தான் இங்கே வீரகாவியங்களாக படைக்கப்படுகின்ற. தோற்றவர்கள் பாவம் அரக்கர்களாகவோ அல்லது தீவிரவாதிகளாகவோ வரலாற்றினால் ஞாபகம் வைத்துக்கொள்ளப்படுக்றார்கள்.

அருமையான நாவல். இல்லை… மறைக்கப்பட்ட ஒரு வரலாறு !

லவ் யூ ராவணா! எம் குல கடவுளே!

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.