Facebook May 2017


30 April ·
Star Moviesல் Life of Pi…
ஜிகினாக்களுக்கிடையில், உண்மையான ஆரவாரமற்ற பேரழகுப் பிரமாண்டம்…


30 April ·
யெஸ் ஸார்… பார்ட் 1ல பயங்கர கிராஃபிக்ஸ் இருந்துச்சு… இப்ப, பார்ட் 2ல கிராஃபிக்ஸ் பயங்கரமா இருக்கு ஸார்…
இந்தா பார்… உன்னையெல்லாம் விமர்சகன்’னு தப்பா நம்ப வெச்சிருக்காய்ங்க… போய் ஒழுங்கா புலி’ய டவுன்லோட் பண்ணிப்பாரு…


29 April ·
ஊருக்கு போயாச்சேஏஏஏ…


29 April ·
குர்லா to பன்வேல் லோக்கல்… உள்ள பஜன் பாடிட்ருக்காங்க… ”விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி…” மெட்டுல இருக்கு…
தேவா ராக்ஸ்… மும்பை லோக்கல் எல்லாம் டிராவல் பண்ணீருக்காப்ல போல…


27 April ·
இரண்டாவது காரணம் ‘நம்பிக்கை பச்சை’யில் இருந்த அண்ணியார்கள். நாங்கள் இருநூறு பேரும் தங்க வைக்கப்பட்டிருந்த வீடுகள், தொழிலாளர்கள் குடியிருப்புக்கு நடுவே அமைந்திருந்தது. படித்து உழைத்து இந்த நம்பிக்கை நிறுவனத்தில் இணைந்து ஏகத்துக்கு சம்பாதிக்குக் கொண்டிருந்த அண்ணன்மார்கள் தங்கள் தங்கள் ஊரில் இருந்து தங்கள் ஜாதியில் இருந்து அழகான அண்ணிமார்களை திருமணம் செய்து வந்திருந்தனர். அந்த பாலைவனத்தில் அவர்கள் சோலையாக தோன்றினார்கள். அவர்களாலும் தூக்கம் போச்சு.
இருங்க, சோதனை’ன்னு சொல்லிட்டு எங்கெங்கோ தாவிட்டேன். நாம் நம் புள்ளிக்கு திரும்ப வருவோம்.

ஆப்பீஸ்-4-சோதனை


26 April ·
நா அவிங்கள follow பண்ண…
அவிங்க என்னை follow பண்ண…
Facebook boys எல்லோரும் instagramல செம ஜாலியா இருக்கோம்…


25 April ·
#Instagram
ரா புவன்

 


feeling நமக்கு எண்ட்ரடெய்ண்மெண்ட் காத்திருக்கு…
24 April ·
புது சீரியல் இன் ஜீ’தமிழ்…
ஹீரோயின் அப்பா, ”தலைவர விட நா பெரியாள்னு நம்ம பொண்ணுங்ககிட்ட சொன்னியே… எப்படி..?”
ஹீரோயின் அம்மா (அதீத அறுபது வயது வெட்கட்துடன்), “அவருக்கு ரெண்டு பொண்ணுங்க… உங்களுக்கு நாலு…”


feeling ஹேப்பி புக் டே…
23 April ·
Voracious reader… புத்தகப்புழு… yes yes yes… இவர்தான்… வாரத்துக்கொரு புத்தகம் படிப்பாரு… தமிழ்லகூட படிப்பாரு… including இலக்கியம்… பெரிய்ய்ய்ய பிரபலம்…
பாத்தியா… ஒர்த்தர் கூட கண்டுக்கல…


22 April ·
கடலோ நதியோ… நாமதான் கடக்கணும்…
இப்ப இந்த லிஸ்ட்ல புதுசா சாலையும் சேந்துருக்கு…


22 April ·
வெயில்ல மூளை உருகி அப்படியே ஆவி ஆகிரக்கூடாது’னுதான் ஹெல்மெட்’ல தெர்மாகூல் வெச்சிருக்கானுங்க…
முட்டாளல்ல நம் முன்னோர்கள்…


21 April ·
பாகிஸ்தானி’னா பொங்குறது…
கஷ்மீரி’னா பொங்குறது…
நைஜீரியா’னா பொங்குறது…
சீனா’னா அப்டியே பம்மி கண்டுக்காத மாதிரி போயிடுறது…


21 April ·
“இங்கே பணியில் சேர வேண்டுமெனில் நிவாரணக் கடிதம் கொண்டுவா” என்று எனக்கு ஆப்பு வைத்துவிட்டு அவர் அடுத்த படிவத்தை பார்க்க சென்றுவிட்டார்.
என்னடா இது. இப்படி பயம் காட்டுறாங்க. சரி எப்படியாவது அந்த நிவாரணக் கடிதம் பெற்றுவிடுவோம் என்று எண்ணினேன்.
அடுத்த ஒரு மாத தூக்கம் போச்சு.

ஆப்பீஸ்-3-நிவாரணக் கடிதம்


20 April ·
வீட்ல ஓயாம பேசிட்ருப்பேனா, ரெண்டு பட்டிமன்றத்தில் சசி என் பேர் குடுத்ததுட்டா…
Bombay Sourashtra Association’இன் 46வது ஆண்டு விழாவில், முனைவர் தா.கு.சுப்ரமணியன் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது… சென்ற ஞாயிறு மாலை Chembur முருகன் கோயிலில் பேசினேன்… சௌராட்டிர வளர்ச்சிக்கு தேவை சமூக பக்தியா அல்லது மொழி பக்தியா என்பது விவாதம்… சமூக பக்தியே என்று பேசி வென்றோம்… சௌராட்டிராவில் நான் பேசிய பகுதி கீழே… 8:04 minutes…

தொடர்ந்து, இரவு Mankhurd Cheeta Camp பாலாஜி கோயிலில் மற்றொரு பட்டிமன்றம்… இது தமிழில்… முனைவர் தா.கு.சுப்ரமணியன் தான் தலைமை… மக்கள் மனதை மிகவும் ஈர்ப்பது ராமாவதாரமா அல்லது கிருஷ்னாவதாரமா என்ற ஆன்மீக பட்டிமன்றம்… கிருஷ்ணாவதாரமே என்று பேசி இங்கும் வென்றோம்… தமிழில் நான் பேசிய பகுதி கீழே… 7:14 minutes…

திக்கித் தடுமாறித்தான் பேசியிருக்கிறேன்… ஆனாலும் Chemburல ஒரு நினைவுப்பரிசு தந்துட்டாங்க… Mankhurd Cheeta Camp’ல சால்வை போர்த்தி கௌரவப்படுத்தினாங்க… பட்டிமன்ற விவாதம் மதுரை லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகலாம்…
வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த Bombay Sourashtra Association’க்கும் அதை எனக்கு வாங்கித்தந்த Sasikala Karthik Nilagiri’க்கும் நன்றி…


20 April ·
எதுக்கோ தேடப்போய், விக்கிபீடியா பக்கத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ போஸ்டர் மாட்டுச்சு… பெத்தவங்க பண்ணதோட பலன் பிள்ளைங்களுக்கு வந்து சேரும்’ன்னு பெரியவங்க சொன்னது எவ்ளோ உண்மை பாருங்க…
இதத்தான் அண்ணா அன்றே சொன்னார், “வாழ்க்கை ஒரு வட்டம்டா…”


18 April ·
கூவாத்தூர் MLAs now be like…


17 April ·
Looking back our last year’s KRAs to fill this years KRA, be like…


17 April ·
Life of an Indian be like…
PC: Veda Pragadesh NV
Creator: https://www.facebook.com/vishakan.soundararajan


feeling Indian…
17 April ·
In a snap I uninstalled Clash of Clans, Lord’s Mobile, etc…
Now I’m downloading Yuddhbhoomi…


15 April ·
An impact of a photo is beyond description…
ஒரு புகைப்படம் ஏற்படுத்தும் பாதிப்பு விவரிப்புக்கு அப்பாற்பட்டது…
நீங்களே click பண்ணி பாத்துக்கோங்க…
http://www.mattblack.com
Link courtesy: கொழந்த


15 April ·
என்ன மாமி, இவ்ளோ மெதுவா வர்ரேள்..?
ஏதோ புது detector வந்துருக்காம்டா அம்பி… வேகமா வந்தா கண்டுபுடிச்சுருதாம்…


14 April ·
நண்பர்களே, தோழிகளே மற்றும் சகோண்ணாக்களே… காலப்பயணம், அதாவது time travel, பத்தி கதை எழுத முடியுமா..? வாட்ச் மெக்கானிக் ’24’ மாதிரி இல்லேன்னாலும் கொஞ்சம் சுமாரா இருந்தாலும் பரவால்ல… அனுப்புங்க…
பிகு: Kaarthik Mani – அண்ணே… இதுவரை மொத்தம் எத்தனை கதை வந்துருக்கு..?

https://www.facebook.com/groups/1221938814594044/


14 April ·
இந்தியாவின் கச்சா எண்ணை சுத்தரிப்பு நகரமான ஜாம்நகர் வந்தடைந்து விட்டேன். என் கனவு நிறுவனமான நம்பிக்கையிலேயே நான் இனி கருவியில் பொறியாளன். சந்தோஷமாக நிம்மதியாக உணர்ந்தேன்.
அதுக்கும் வந்தது ஆப்பு.

ஆப்பீஸ்-2-கண்டேன் ஜாம்நகர்


14 April ·
ஜியோல நல்ல வெற்றி… அதனால இந்த தடவை incrementக்கு வாய்ப்பு இருக்கும்னு காலைல teaகுடிக்கிறப்பதானடா சொன்னேன்… அதுவும் சும்மாத்தான்டா சொன்னேன்…
இப்ப லஞ்ச்’ல பாத்தா, இந்த தடவை எல்லாருக்கும் promotion + 30% incrementனு சுத்திட்ருக்காய்ங்க… என்னடாது… புரளின்னா மட்டும் வெறி கொண்டு கிளம்பிடுறீங்க…


feeling ஏன்யா கொழப்புறீங்க… நாளைக்குத்தான புத்தாண்டு… இன்னைக்கு ஏன் உசுர வாங்குறீங்க…
13 April ·
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…


13 April ·
Times of India, Page 3…


11 April ·
ப்ளடி தொப்பீஸ்… தப்பிச்சு ஓடவா பாக்குறீங்க… ஒத்த குண்டே போதும்டா உங்களுக்கு…


10 April ·
என்னடாயிது… அநியாயத்துக்கில்ல நல்லவனா இருக்கான்…


10 April ·
தமிழ் நண்பர்கள் யாராச்சும் என்னை ‘ஜீ’ போட்டு கூப்பிட்டா இப்படிதான் உணர்கிறேன்…
PC: Gayathri Desam


9 April ·
ஆர்.கே. நகர்…


9 April ·
திருக்குறள்…
எத்தனை அழகான, சுவாரஸ்யமான உரைகள்… Whatsappல் அறிமுகமான Kathir Rath எழுதி பகிர்ந்த திருக்குறள் பற்றிய உரைகளை வழக்கம்போல கடந்துகொண்டிருந்தேன்… இதொ இப்ப உக்காந்து தேடித்தேடிப் படிக்கிறேன்…
கட்டுரை, கதை, fiction, fact, நிகழ் சம்பவம்’னு கலந்து கட்டி அடிச்சிட்ருக்காரு… செம flow… செம சுவாரஸ்யம்… நாம ஒரு பதிவு எழுதினா அதுக்கு சம்பந்தமான photo போடுவோம்ல, அந்த மாதிரி இவர் திருக்குறளை பயன்படுத்திக்குறாரு…
விட்டுடாம பொறுமையா 1330 குறளுக்கும் எழுதிட்டாருன்னா இது ஒரு jolly classic…

http://www.thoovaanam.com/


watching மாப்பிள்ளை தொடர்.
7 April ·
மற்றுமொரு பாகுபலி மொமெண்ட்…


watching Saravanan Meenatchi.
7 April ·
தட் பாகுபலி மொமெண்ட்…


7 April ·
முகநூல், பதிவுலகம் பற்றி அறிந்திராத டைரிக்காலத்தில் ஒரு வடிகாலுக்காக எழுத ஆரம்பித்தேன்… இருபது இருபத்தைந்து பக்கம் எழுதியிருப்பேன்… படித்த நண்பனொருவன், ‘பாத்துக்கடா… மாட்னா வேலையவிட்டு தூக்கிரப்போறாய்ங்க…’ என பயமுறுத்தியதால் கிழித்துப்போட்டேன்… இப்ப மறுபடி எழுத ஆரம்பிச்சிருக்கிறேன்… புதிதாக… எவ்ளோ வாரம் இழுக்க முடியுதுனு பார்ப்போம்… பிரதி புதன் கிழமை வரும்… www.kalakkals.com தளத்தில்…
மத்தபடி, அங்க சொன்னதுதான் இங்கயும்… ”இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து கேட்டின் பூட்டை ஆட்டாதீர்கள்.”
#ஆப்பீஸ்

ஆப்பீஸ்-1-நம்பிக்கை


4 April ·
Legendனா சீனியர் சிடிசன்’ஆ..?


3 April ·
வாங்க… எழுதித் தள்ளுவோம்…
வெற்றிவேஏஏஏல்… வீஈஈஈரவேஏஏஏல்…
Kaarthik Mani


3 April ·
உலகின் மிகப் பெரும் தொழில் பசி…
#ஆப்பீஸ்


2 April ·
அத பார்பானேன், இங்க வந்து பொலம்புவானேன்…


Facebook March 2017

ஆப்பீஸ்

சோதனை

முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.

3-நிவாரணக் கடிதம்

ஒரு மாத தூக்கம் போச்சுன்னா அதுக்கு காரணம் நிவாரணக் கடிதம் எடுத்து வர மனித வள அதிகாரி என்னை நிர்பந்தப்படுத்தியது மட்டும் அல்ல.

சேர்ந்த 192 பேரும் ஜாம்நகரில் எங்கள் பயற்சியைத் தொடங்க துடித்துக் கொண்டிருந்தனர். களத்தில் இறங்கி ஏதாவது ஒன்றை கழற்றி தூக்கியெறிந்து ரிப்பேர் செய்ய கைகள் பரபரத்துக் கொண்டிருந்தது. நிர்வாகம் தெளிவாக இருந்தது. இவர்களை இப்படியே விட்டால் எண்ணை சுத்திகரிப்பு ஆலை கிஷ்கந்தை ஆகிவிடும் என்று அறிந்திருந்தது. அதனால் வகுப்பறை பயிற்சிகளைத் தொடங்கியது. ஆனால் கிட்டத்தட்ட இருநூறு இளைஞர்களை எங்கு அடைத்து பயற்சி கொடுக்க? அதனால் எங்கள் பயற்சி ஒரு மிகப்பெரிய அரங்கத்தில் தொடங்கியது. பல தரப்பட்ட பயற்சிகள், பழம் பெருமைகள் பேசப்பட்டன. முன்னாடி உட்கார்ந்தால் ஏதும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை. ஆனால், முதல் வரிசை ரொம்ப ரிஸ்க். இரண்டாவது வரிசையில் அமர்வேன். யாரவது கேள்வி கேட்டால் கையை உயர்த்துவேன். பதில் தெரியும் என்று என்னை சீண்ட மாட்டார்கள். தப்பித்து விடுவேன். இந்த இருநூறு பேரில் கிட்டத்தட்ட முப்பது பெண்கள். அது தான் தூக்கம் தொலைய முக்கிய காரணம். இன்ஜினியரிங் படித்த போதே எனக்கு பெண் நண்பர்கள் இருந்தார்கள் என்றாலும், இங்கு என்னிடம் ஒரு maturity இருந்தது. அல்லது, அப்படி தோன்றியது. ஒரு தோழமையுடன் பழக ஒரு வாய்ப்பாக இருந்தது. தமிழ்ப் பெண்களுடன் நட்பு உடனே ஏற்பட்டது. பஞ்சாபி பதுமைகளும் கேரளத்துப் பைங்கிளிகளும் இருந்தார்கள். அவர்களுக்கு ஹிந்தி தெரிந்தது எனக்கு வசதி. நம்மூர் பசங்க அண்ணா, கலைஞர் பேச்சை கேட்டு ஹிந்தி படிக்காதது எனக்கு வசதியானது. தேவையான அளவு கடலை போட்டேன். பரவசத்தில் தூக்கம் தொலைந்து போனது.

இரண்டாவது காரணம் ‘நம்பிக்கை பச்சை’யில் இருந்த அண்ணியார்கள். நாங்கள் இருநூறு பேரும் தங்க வைக்கப்பட்டிருந்த வீடுகள், தொழிலாளர்கள் குடியிருப்புக்கு நடுவே அமைந்திருந்தது. படித்து உழைத்து இந்த நம்பிக்கை நிறுவனத்தில் இணைந்து ஏகத்துக்கு சம்பாதிக்குக் கொண்டிருந்த அண்ணன்மார்கள் தங்கள் தங்கள் ஊரில் இருந்து தங்கள் ஜாதியில் இருந்து அழகான அண்ணிமார்களை திருமணம் செய்து வந்திருந்தனர். அந்த பாலைவனத்தில் அவர்கள் சோலையாக தோன்றினார்கள். அவர்களாலும் தூக்கம் போச்சு.

இருங்க, சோதனை’ன்னு சொல்லிட்டு எங்கெங்கோ தாவிட்டேன். நாம் நம் புள்ளிக்கு திரும்ப வருவோம்.

மனித வள அதிகாரி நிவாரண கடிதம் கேட்டு சோதனை செய்தார் என்றால், மற்றொரு சோதனை மருத்துவ அதிகாரிகளால் வந்தது. அரங்கத்தில் முன்னால் உட்கார்ந்திருந்த ரவீந்தரையும், அவளின் வெண் சங்கு கழுத்தையும், பொன்னிற குதிரைவால் கொண்டையையும் மிக கவனமாக ரசித்துக் கொண்டிருந்த பொழுது மருத்துவ அதிகாரி வந்தார். நான்கு பேரை வாசித்தார். நான், மினி, ராம்கண்ணன் மற்றுமொரு வடக்கத்திய நண்பன் – ராஜேஷ் என்று வைத்துக் கொள்ளலாம். வகுப்பு முடிந்த பின்பு மாலை மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு கூறிச் சென்றார். எனக்கு அங்கு அரங்கத்திலேயே தூக்கம் போய்விட்டது. அதன்பின் மாலைவரை ஒரு சொட்டு தூக்கம் இல்லை. நடத்தப்படும் பாடத்திலோ ரவீந்தரின் பாக்கவோ கவனம் செல்லவில்லை. மாலை மருத்துவ அதிகாரியை நாங்கள் பார்க்க சென்றபோது அவர் வேறு வேலை நிமித்தம் கிளம்பி விட்டிருந்தார். அடுத்த நாள் மாலை பார்க்க முடியும். அன்று இரவு தூக்கம் தொலைந்தது. சோதனை என்று சொல்லி என்ன விசாரிக்கப் போகிறார்களோ? ஒருவேளை என் தொண்டை பேச்சு பிரச்னை கண்டுபிடித்து விட்டார்களோ? அடுத்த நாள் அரங்கிலும் தூக்கம் கிஞ்சித்தும் இல்லை. மாலை சென்றோம். ராம்கண்ணன் பார்வை குறைபாடு இருப்பதாகவும், அவர் அதை சரி படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர் கிட்டதாட்ட முப்பதாயிரம் செலவில் LASIK அறுவை சிகிச்சை மூலம் தன் பார்வை திறனை சரிப் படுத்திக் கொள்வதாக உறுதி கூறினான். எனக்கு நான் பயந்த படி ஒன்றும் இல்லை. எடை குறைவு. 64 கிலோ இருந்திருக்க வேண்டும், என் 5 அடி 8 அங்குல உயரத்திற்கு. ஆனால் 47 கிலோ தான் இருந்தேன். Highly underweight. ஒழுங்காக சத்தான சாப்பாட்டை சாப்பிட்டு, ஜிம் போய் உடல் எடையை ஏற்றிக்கொள்வேன் என்று நான் உறுதி கூறினேன். ஏற்றுக் கொள்ளப்பட்டது. பணியில் தொடர அனுமதிக்கப்பட்டேன். எனக்கு பின்னால் வந்த மினி, பேருக்கு ஏற்றாற்போல் இருந்தார். என் உயரத்தில் இருந்துகொண்டு மொத்தமாகவே 40 கிலோ தான் இருந்தார். அவருக்கும் அதே அறிவுரை. ஆனால் ராஜேஷ் தான் பாவம். மருத்துவ அதிகாரி அவரை பணியில் இருந்து நிராகரித்து விட்டார். எடை பிரச்சனை இல்லை. ராஜேஷுக்கு ஒவ்வொரு கையிலும் மூன்று விரல்களே இருந்தன. விரல்கள் ஓட்டிப் போயிருந்தன. IITயில் M.Tech. படித்துக்கொண்டிருந்தவன். அந்த காலத்தில், 2003யில், ஒன்றரை வருடம் என்று நினைக்கிறேன். முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடம் தொடங்குமுன்பு நம்பிக்கை கம்பெனி வாய்ப்பு வர, படிப்பை விட்டு வேலைக்கு சேர்ந்திருக்கிறான். நேர்முகத் தேர்வின்போதே இந்த குறைபாடை சொல்லியிருக்கிறான். அந்த அதிகாரி பரவாயில்லை என்று சொல்ல, படிப்பை விட்டு வேலைக்கு சேர்ந்திருக்கிறான். இப்பொழுது வேலை மறுக்கப்படுகிறது. வெறுத்துப் போய்விட்டான். படிப்பும் போய்விட்டதே என்று கவலைப்பட்டான். ஆனால், நம்பிக்கை நிறுவன அதிகாரிகள் அவன் IIT பேராசிரியரிடம் பேசி படிப்பை தொடர ஆவன செய்தனர். நிறுவனம் மீது ஒரு ஓரத்தில் நம்பிக்கை துளிர்விட்டது.

எனக்கான மற்றொரு சோதனை அப்படியே இருந்தது. நிவாரண கடிதம் தொடர்பான பிரச்சனை. பழைய பெட்ரோல் பங்க் முதலாளியிடம் இருந்து நிவாரண கடிதம் கொண்டு வா, அப்பொழுதுதான் நம்பிக்கை நிறுவனத்தில் தொடர முடியும் என்று சொல்லிக்கொண்டிருந்தார் மனித வள அதிகாரி. அது கிடைக்காது என்று சொல்லிகொண்டிருந்தேன் நான். நீயே ஒரு நிவாரணக் கடிதம் டைப் அடித்து தந்துவிடு என்று நண்பர்கள் சிலர் சொன்னதை நான் முற்றாக மறுத்துவிட்டேன். நல்லதோ கேட்டதோ எது வேண்டுமானாலும் நடக்கட்டும். தப்பான வழியில் செல்ல மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த கொள்கையால் இன்றுவரை சில விஷயங்களை இழந்துள்ளேன் (தட், பாத்தியா நா எவ்ளோ நல்லவன் மொமென்ட்). நம்பிக்கை நிறுவனத்துக்கு என்ன பயம் என்றால், சட்டப்படி ஒரு ஆள் இரண்டு இடத்தில் வேலை செய்து சம்பளம் வாங்கக்கூடாது. பழைய முதலாளி வந்து ‘என் தொழிலாளியை இங்கு நீ எப்படி வேலைக்கு சேர்த்தாய்?’ என்று கேட்டுவிடுவாரோ என்ற பயம் நம்பிக்கை நிறுவனத்திற்கு இருந்தது. அப்படியெல்லாம் தேடி வர மாட்டார் என்பது என் வாதம். மேலும், பழைய கம்பெனியில் வேலை நியமன கடிதத்தில் இவ்வாறு ஒரு பாயிண்ட் உண்டு – ‘சேர்ந்த ஒரு வருடத்தில் பரஸ்பரம் எந்த அறிவிப்புமின்றி விலகலாம்’ என்ற ஷரத்து. அவர்களும் என்னை தூக்கலாம். நானும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே வரலாம். அதன்படி பார்த்தால், நான் பெட்ரோல் பங்க்’ல் வேலைக்கு சேர்ந்து பத்து மாதமே ஆகியிருந்தது. சட்டப்படியும் பழைய முதலாளி என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதெல்லாம் அந்த மனித வள அதிகாரி கேட்பதாய் இல்லை. சந்தைக்கு போணும்; ஆத்தா வையும்; காசு கொடு கணக்காய் ‘நிவாரண கடிதம் கொண்டுவா’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். என்னடா இது. என் கனவு நிறுவனத்தில் ஆசைப்பட்டு சேர்ந்த எனக்கு சோதனை மேல் சோதனை. ஆற்றாமை இரவு முழுவதும் கண்ணீராய் கரைந்தது. உண்மையிலேயே திருப்பி அனுப்பப்படுவேனோ என்று பயந்தேன். வீட்டு தோழன் கபில் என்னை எவ்வளோ ஆறுதல் படுத்தினான். எனக்குத்தான் பயம் தொலையவில்லை. தூக்கமற்ற நீண்ட இரவுகள் அவை. கடைசியில் பழைய முதலாளியிடமே போய் பணி நிவாரண கடிதம் கேட்டு பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், விடுமுறை எடுத்து நேரில் போய் கேட்க பயம். நேரில் போய் கேட்டால் பழைய முதலாளி ‘ஏண்டா ஓடிப்போனே?’ என்று சட்டையை பிடித்து உலுக்குவாரோ என்ற பயம். முக்கியமான இரண்டாவது பயம், எங்கே நான் ஜாம்நகர் விட்டு வெளியேறி மும்பை சென்றால் மறுபடி உள்ளே விடமாட்டர்களோ என்ற அல்ப மரண பயம்தான்.

இந்த இடத்தில் தான் இந்த கதையில் என் அண்ணா நடராஜ் உள்ளே வருகிறார்.

5-மொட்டை

பிகு: நடராஜ் அண்ணா பற்றி முன்பே மற்றொரு பதிவில் சொல்லியிருக்கிறேன் (சென்னையில் ஒரு திருமண நாள் – குரோம்பேட்டை கும்மி).

ஆப்பீஸ்

நிவாரணக் கடிதம்

முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.

2-கண்டேன் ஜாம்நகர்

கிட்டத்தட்ட மொத்தம் 192 பேர் என்று ஞாபகம். என்னைப் போலவே மனித வள அதிகாரியிடம் பொறுப்பாக விசாரித்து ஏப்ரல் ஒன்றாம் தேதி வந்து இணைந்தவர்கள் ஒரு 160 பேர் இருப்பார்கள். பணி நியமனக் கடிதம் தாமதமாகக் கிடைக்கப்பெற்று, ஊரெல்லாம் சுத்தி, தட்டித் தடுமாறி தேடி வாரம் பத்து நாள் தாமதமாக வந்து சேர்ந்தவர்கள் ஒரு 10 பேர் இருப்பார்கள். ஒரு பெண் கிட்டத்தட்ட இருபது நாள் கழித்து வந்து சேர்ந்தாள். இவ்வளவு தாமதமாக வந்தவரை கம்பெனி ஏற்றுக் கொண்டதில் எனக்கு எந்தவித வருத்தமோ கோபமோ இல்லை. ஏனென்றால் நான் ஜாம்நகர் ‘நம்பிக்கை பச்சை’ குடியிருப்பு நீச்சல் குளத்தில் களமாடியபோது, ‘அக்னி நட்சத்திர’ நிரோஷாவாய் குளத்தில் கரை கண்டவள் அவள் மட்டுமே. டெல்லியில் பிறந்து வளர்ந்த பஞ்சாப் தேவதை அவள் என்பது மேலதிக (மற்றும் கீழதிக + இடைமெலி) தகவல். ஒரு இருபது பேர் நிறுவனம் முதலில் அறிவுறுத்தியபடி மார்ச் இருபதாம் தேதியே வந்து சேர்ந்துவிட்டிருந்தனர். நான் விசாரித்து கெஞ்சிக் கேட்டபோதும் வந்து சேர்ந்துகொள்ள அனுமதிக்காத நிர்வாகம், அந்த இருபது பேர் மார்ச் இருபதாம் தேதி வந்து நின்றபோது எதுவும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், அவர்களை இருபதாம் தேதியிலேயே பணியிலமர்த்தி பத்து நாள் சம்பளம் வேறு தந்தது. கார்பரேட் மீதான முதல் முத்திரை இப்படி அமைந்தது. இவை இப்படிதான் இயங்கும் என்று பொட்டில் அறைந்து சொன்னது.

அனைவரும் அவரவர்க்கு அளிக்கப்பட வீட்டில் தஞ்சமடைந்தோம். என் வீட்டு தோழன் கபில் என்ற மராத்திக்காரன். நல்லவன். அமைதியான ஆனால் உறுதியான பையன். இந்த 192 பேரில் கிட்டத்தட்ட ஒரு 90 பேர் தமிழர்கள். ஒரு 50 பேர் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா முதலிய தென்னாட்டவர்கள். மீதம் 50 பேர் மட்டுமே வடக்கத்தியவர்கள். தமிழ்நாடு ஊரெல்லாம் பொறியியல் கல்லூரி ஆரம்பிச்சது வீணாப் போகல. வீட்டு தோழனை தேர்ந்தெடுக்கும் போது தங்கள் மொழிக்காரனை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்தினார்கள். பெண்கள் இதில் விதிவிலக்கு. வேற்று மொழிப் பெண்களை வீட்டுத்தோழியாக தேர்ந்தெடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்தியதாக எனக்குப் பட்டது. அது என் கண்ணுக்குப் பட்ட ஒரு தோற்றப்பிழையாகவும் இருக்கலாம். பெண்களை அவ்வளவாக நான் கவனிப்பவனில்லை பாருங்கள். அப்புறம், சில ஆண்கள் பெண்களை வீட்டுத் தோழியாகவும், சில பெண்கள் ஆண்களை வீட்டுத் தோழனாகவும் தேர்வு செய்துகொள்ள முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், நிறுவனம் மிக கவனமாக அதை தவிர்த்துவிட்டது. அந்த காலத்திலேயே எங்கள் மீது கலாச்சார காவல் வன்முறை இவ்வாறு கட்டவிழ்த்துவிடப்பட்டது.

நிவாரணக் கடிதம் relieving letter மனித வள அதிகாரி பணி நியமனக் கடிதம் offer appointment தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா surname குடும்ப பெயர்ஒரு நல்ல நாளில் நிறுவனத்துக்கு செல்ல ஆரம்பித்தோம். எங்களை அடையாளப்படுத்தும் பணி ஆரம்பமானது. சேர்ந்தவுடன் அனைவருக்கும் ஒரு எட்டு இலக்க எண் தந்தார்கள். அதுதான் எங்கள் அடையாளமாக மாறியது. இரண்டாவது அடையாளம் மின்னஞ்சல். இது இரண்டுமற்று நாங்கள் சுயமற்றவர்கள். சம்பிரதாய அறிமுகம் நடந்தது. பெண்கள் அறிமுகம் செய்துகொண்ட போது அவர்கள் பெயர்களை மட்டும் ஞாபகம் வைத்துக்கொண்டு சிறிது நேரத்திலேயே அவர்களை நினைவில் செதுக்கி பெயர்களை மறந்தோம். பின் ஒரு பேப்பர் கட்டு தந்தார்கள். எப்படியும் ஐம்பது தாள்கள் இருக்கும். ஏதோ வழிகாட்டியாக இருக்கும் என்று நினைத்து திறந்தால், அது மொத்தமாக படிவங்கள். பெயர், படிப்பு, தகுதி, அனுபவம், எடை, உயரம், வீட்டு முகவரி, பெற்றோர் தகவல்கள் என அனைத்தயும் அறியும் ஒரு தந்திரம். நிரப்ப ஆரம்பித்தோம், எங்கே எதை எப்படி நிரப்ப வேண்டுமென்றே தெரியாமல். பெண் தோழிகளுடன் கடலை போட பலருக்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது. தமிழர்களுக்கு ஒரு வினோத பிரச்சனை. அவர்கள் ஸர்நேம் எனப்படும் குடும்ப பெயர் என்ற இடத்தில் என்ன எழுதவேண்டும் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர். பெரியார் செய்த செயலால் பலர் வெறும் பெயர் கொண்டிருந்தனர், ஜாதி பெயர் இணைக்காமல். வட இந்தியா எங்கள் ஜாதி பெயரை, குடும்பப் பெயர் என்றும் சொல்லலாம், தோண்டி எடுத்தது. அதுநாள் வரை இனிஷியல் பயன்படுத்திக்கொண்டிருந்த நான் அப்பொழுதுதான் கார்த்திக் என்பதன் பின் ‘நீலகிரி’ சேர்த்துக் கொண்டேன். இப்பொழுது என் அடையாளம் ‘கார்த்திக் நீலகிரி’. அப்படி அந்தப் படிவங்களை நிரப்பும்போது நான் உளறிக்கொட்டிய உண்மை ஒரு மாதத்திற்கு மேல் என் உயிரெடுத்தது.

படிவம் நிரப்பும் போது ‘முன்னனுபவம்’ என்ற கட்டத்தில் பெட்ரோல் பங்க் அனுபவம் பற்றி எழுதிவிட்டேன். பத்து மாத அனுபவம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது அனுபவத்தில் கணக்கெடுத்துக்கொள்ளப்பட்டால் என் பதவி உயர்வு சீக்கிரம் பரிசீலிக்கப்பட்டு அதி விரைவிலேயே ஒரு உயரதிகாரி ஆகிவிடுவேன் என்ற நப்பாசை. ஆனால், ஐம்பது தாள் படிவத்தில் அந்த என் அறிவிப்பை மட்டும் சரியாகப் பிடித்தார் மனித வள அதிகாரி.

“முன்அனுபவம் இருக்கு போல?”

நான் பெருமையுடன், “ஆமா ஸார்”

“எங்க?”

“மும்பையில். ஒரு பெட்ரோல் பங்க்’ல்”

“எத்தனை வருட அனுபவம் இருக்கும்?”

“வருடம் எல்லாம் இல்ல ஸார். பத்து மாதம் மட்டுமே. படிவத்தில் குறிப்பிட்டுருப்பேனே”

“ம்ம் ம்ம். அதைப் பார்த்துத் தான் கேட்கிறேன்”

“ஆனால், அந்த பத்து மாதத்தில் நிறைய கற்றேன். பல வருடத்திற்கான அனுபவம் படித்தேன்”

“சரி, பழைய நிறுவனத்தில் இருந்து ஏதும் நிவாரணக் கடிதம் தந்தார்களா? ஐ மீன் ரிலீவிங் லெட்டர்?”

“ஆஃபர் லெட்டர் இருக்கு. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் இருக்கு. இரண்டும் இணைத்திருக்கிறேனே ஸார்”

“அதெல்லாம் சரி, நிவாரணக் கடிதம் இருக்கா?”

நான் திருதிருவென முழித்தேன். நான் தான் பழைய பெட்ரோல் பங்க்’ல் இருந்து ஓடிவந்தவன் ஆயிற்றே. தடுமாறிக் கூறினேன், “இருக்காதுன்னு நினைக்கிறேன் ஸார்”

“அதில்லாம இங்க சேர்த்துக்க முடியாது கார்த்திக். நீங்கள் திரும்பிப் போக வேண்டியிருக்கும்”

எனக்கு படபடப்பாகியது, “அந்த அனுபவம் வேண்டுமானால் எடுத்து விடுங்களேன். எப்படியும் நான் இங்கு பயிற்சி பெறப் போகிறேனே. அந்த அனுபவம் எனக்கு வேண்டாமே”

“அது முடியாது தம்பி. நீ படிவத்தில் குறிப்பிட்டது உண்மை. அதை மாற்றுவது தவறு. நீ நிவாரணக் கடிதம் பெற்று வா”

“என்ன ஸார். வேறு வழி இல்லியா?”

“இங்கே பணியில் சேர வேண்டுமெனில் நிவாரணக் கடிதம் கொண்டுவா” என்று எனக்கு ஆப்பு வைத்துவிட்டு அவர் அடுத்த படிவத்தை பார்க்க சென்றுவிட்டார்.

என்னடா இது. இப்படி பயம் காட்டுறாங்க. சரி எப்படியாவது அந்த நிவாரணக் கடிதம் பெற்றுவிடுவோம் என்று எண்ணினேன்.

அடுத்த ஒரு மாத தூக்கம் போச்சு.

4-சோதனை

ஆப்பீஸ்

கண்டேன் ஜாம்நகர்

முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.

1-நம்பிக்கை

பணி நியமன கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். மார்ச் 20ஆம் தேதி ஜாம்நகர் வந்து சேருமாறு போட்டிருந்தது. இரயில் டிக்கெட் புக் செய்துகொண்டு வருமாறு போட்டிருந்தார்கள். பணத்தை ஜாம்நகர் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் போட்டிருந்தது. பெரிய கம்பெனி. கரெக்டா தந்துருவாங்க. இருந்தாலும் கையில இருந்த காசுக்கு, ஒரு தடவை போன் பண்ணி கேட்டுட்டு டிக்கெட் போடலாம்’னு மனித வளத் துறை அதிகாரிக்கு போன் செய்தேன். உங்க கம்பனி தேர்ந்தெடுத்த என்ஜினீயர் என்று அவரை  நம்பவைக்கவே பத்து நிமிடம் ஆனது. அதிகாரி பெண்ணாய் இருந்திருந்தால் ஒருவேளை அவரை நம்ப வைக்க எனக்கு இன்னும் கொஞ்சம் இலகுவாய் இருந்திருக்கலாம். ஆங், சொல்ல மறந்துட்டேனே, அந்த கால B.Tech. இந்த கால M.Tech + MBA + PhD’க்கு சமானம். சரி, அதை விடுங்க. அதிகாரிக்கு போன் செய்தேனா, பத்து நிமிடம் நா உங்க ஆளு ஸார் என்று விளக்கிய பிறகு, “அதுக்கென்ன இப்ப?” என்ற தொனியில் கேட்டார். “இல்ல ஸார், இருபதாம் தேதி வரச்சொல்லி போட்டு இருந்தீங்களே, அதான் எந்த நேரத்துக்கு வந்து சேருற மாதிரி இரயில் புக் பண்ணட்டும் ஸார்?” என்று கேட்டேன். “அதுலதான் ஒரு சின்ன திருத்தம்” என்றார். எனக்கு பக்கென்றது.

இதுக்கு முன்னாடி தேர்வு செய்துவிட்டு ‘அப்புறமா கூப்பிடுறோம்’ என்று சொன்ன Yokogawa கடைசிவரை கூப்பிடவேயில்லை. அட, இன்னிக்குவரைக்கும் கூப்பிடலீங்க. நம்பிக்கை நிறுவனமும் இந்த மாதிரி ஏதாவது பண்ணிடுமோ? பழைய பெட்ரோல் பங்க் வேலையை வேற இதை நம்பி விட்டுட்டேனே என்று பயந்தே போனேன். பின், அவரே தொடர்ந்தார், “ஏப்ரல் ஒன்றாம் தேதி இங்க இருக்குற மாதிரி வாங்க”. அது முட்டாள்கள் தினமாச்சே என்ற சிந்தனையை தாண்டி வேறொன்று என்னை கலக்கியது. அதுவரை எங்கே தங்குவது. பத்து நாட்கள் மும்பையில் தங்குவது என்பது ஒரு சாகசம். கையில் இருந்த காசை வைத்து அதற்குமேல் அந்த சின்ன ஹோட்டலில் தங்க முடியாது. இரண்டொரு நாளில் காலி செய்தாக வேண்டும். மும்பையில் ஒரு வருடம் தங்கி வேலை தேடிய அக்கா வீடு பூட்டப்பட்டு இருந்தது. அக்கா கோடை விடுமுறைக்கோ அல்லது ஏதோ விசேஷத்திற்கோ ஊருக்கு போய் விட்டிருந்தார். அத்தானும் ஊரில் இல்லை. பெட்ரோல் பங்க்’ல் வேலை செய்த போது தங்கியிருந்த அந்தேரி-மரோல் வீட்டு நண்பர்கள் வேறு அப்போது ஊரில் இல்லை. அதிகாரியிடமே கேட்டேன், “ஸார். நான் ஜாம்நகர் வந்துடறேன். தயவு செய்து தங்கமட்டும் இடம் தாருங்கள். இங்கு மும்பையில் எனக்கு தங்க எந்த வசதியும் இல்லை. என்னால் பழைய கம்பெனி இருக்கும் கோவா’க்கு திரும்ப போக முடியாது. இருக்கும் காசுக்கும் நேரத்துக்கும் என்னால் சென்னை போயும் வர முடியாது. எனக்கு இந்த பத்து நாள் மட்டும் அங்கு ஜாம்நகர் கம்பெனி விடுதி இருந்தால் தாருங்கள்”. அவருக்கு ஏதோ அவசரம் போல, “ஒன்றாம் தேதி வாருங்கள்”, என்று கூறி படக்கென்று போனை வைத்துவிட்டார்.

ஜாம்நகர் பணி நியமன கடிதம் offer appointment மனித வளத் துறை அதிகாரி கருவியியல் பொறியாளன் அந்தேரி மரோல் பெட்ரோல் பங்க் மோடிகாவ்டி Boisar Motikhavdiவேலைக்கு கூப்பிடுவாங்களா மாட்டாங்களா என்ற பயம் தாண்டி, இந்த பத்து நாட்கள் எங்கே தங்குவது என்ற பயம் பூதாகரமாய் என் முன் நின்றது. பெருநகரங்களில் தங்குவதுதான் மிகப் பெரிய சிக்கல். ஆனால், கடவுள் ஒரு மாதிரி நல்லவர். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், வேறு வழியே இல்லாத போது நமக்கு உதவுவார். பெட்ரோல் பங்க்’இல் வேலைபார்த்தபோது அங்கு ஒரு பியூன் இருந்தார். ஜாதவ் காக்கா அல்லது ஜாதவ் அண்ணாச்சி என்று வைத்துக்கொள்வோம். கம்பனி’க்கு வரும் காசோலையை வங்கியில் போடுவது அவர் வேலை. சம்பளம் அவருக்கு இரண்டாயிரம் சொச்சம். அதில் தன் செலவு போக சேமித்து எங்கோ உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் மனைவிக்கும் இரண்டு மகன்களுக்கும் அனுப்புவார். ஐம்பது வயது இருக்கும். நாற்பது கிலோ எடையில் எழுபது வயது முதியவர் போல் தெரிவார். முதலாளியிடம் ஒரு நூறு ரூபாய் சம்பளத்தை ஏற்றித்தருமாறு இரண்டு ஆண்டுகளாய் மன்றாடிக்கொண்டிருந்தார். அவர் சம்பந்தமின்றி எதிர்பட்டார். “என்னப்பா. உங்க வீட்ல பிரச்சனை’ன்னு நம்ம கோவா பசங்க சொன்னாங்க. நீ இங்க இருக்க?” என்று அக்கறையாய் கேட்டார். வேலை கிடைத்த விஷயத்தை சொன்னேன். முதலாளியிடம் சொல்லவேண்டாம், நானே நேரம் வரும்போது சொல்லிக்கொள்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டேன். பின் தாங்கும் கஷ்டத்தையும் பேச்சு வாக்கில் அவரிடம் பகிர்ந்தேன். அவர் மறுபேச்சு பேசவிடாமல் போய்ஸர்’ல் (Boisar) இருக்கும் தன் அறைக்கு அழைத்துத் சென்றுவிட்டார். அடுத்த ஆறேழு நாட்கள் அங்குதான் வாசம். கிளம்பும் போது நன்றியை தவிர வேறெதுவும் ஏற்கவில்ல. அப்பொழுதெல்லாம் மொபைல் இல்லை. இரண்டொரு வருடம் கழித்து பொய்ஸர் திரும்ப சென்ற போது அவரை பற்றிய தடயமும் இல்லை. அவரை இன்றுவரை மறுபடி பார்க்கவில்லை.

மும்பையில் இருந்து கிளம்பி ஒருவழியாய் இரயில் ஏறிவிட்டேன். நீண்ட பயணத்தின் முடிவில் ஜாம்நகர் வந்தடைந்தேன். இரயில் விட்டு வெளியே வந்து பார்த்தபோது வெறிக்கும் வெயிலினூடே என்னைப்போல் இன்னும் சிலர் நின்றிருந்தார்கள். நவகிரகம் போல் ஆளுக்கொரு திசை பார்த்துக்கொண்டு. நம்பிக்கை நிறுவனத்தில் இருந்து ஒரு பேருந்து வந்திருந்தது. அனைவரும் பேசாமல், அறிமுகம் செய்துகொள்ளாமல் வண்டியில் ஏறினோம். புதிய ஆட்களிடம் பேச கூச்சமா அல்லது நம்பிக்கை போன்றதொரு பெரு நிறுவனத்தில் வேலை கிடைத்த திமிரா என்று தெரியவில்லை. அமைதியாகவே பயணித்தோம். முப்பது முப்பைந்து கிலோமீட்டர் பயண முடிவில் மோடிகாவ்டி எனும் இடம் வந்தடைந்தோம். மனித வள அதிகாரிகள் வரவேற்று எங்கள் அடையாளத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு எங்களை தனித்தனி விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். விஸ்தாரமான இரண்டு படுக்கை அறைகளும் கொண்ட வீடு. ஒவ்வொரு வீட்டிலும் இருவர் தங்கவைக்கப்பட்டனர். எனது அறை நண்பன் கபில். மராத்திக்காரன். நல்லவனாகவே தெரிந்தான். பழக வேண்டும். எல்லோரிடமும் பழகவேண்டும். முக்கியமாக பெண்களிடம் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் என்று குறித்துக்கொண்டேன். அன்று முழுவதும் மேலும் மேலும் ஆட்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.

இந்தியாவின் கச்சா எண்ணை சுத்தரிப்பு நகரமான ஜாம்நகர் வந்தடைந்து விட்டேன். என் கனவு நிறுவனமான நம்பிக்கையிலேயே நான் இனி கருவியியல் பொறியாளன். சந்தோஷமாக நிம்மதியாக உணர்ந்தேன்.

அதுக்கும் வந்தது ஆப்பு.

3-நிவாரணக் கடிதம்

ஆப்பீஸ்

நம்பிக்கை

முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.

கல்லூரி இறுதியாண்டில் இருந்தே இந்த நிறுவனத்தில் சேரவேண்டும் என்பது என் கனவு. கருமம், சேர்ந்த இத்தனை வருடத்தில் இன்னும் இந்த கனவு கலைய மாட்டேங்குது.

இறுதியாண்டில் வந்த வேலை வாய்ப்புகள் அனைத்தும் தவிர்த்து இந்த நிறுவனத்திற்காகவே காத்திருந்தேன். நம்பிக்கை அந்த ஆண்டு எங்கள் கல்லூரிக்கு வராதபோது வேலையின்றி கல்லூரி விட்டு வெளியே வந்து ஒரு வருடம் வேலை தேடினேன். வேலை தேட ஆரம்பிச்சப்ப ரொம்ப கெத்தா Yokogawa-Bangalore, DRDO-New Delhi, HAL-Bangalore, ONGC-Chennai, ISRO(PRL)-Ahmedabad, CEDTI-Aizawl போன்ற பெரிய நிறுவனங்களிலேயே தேடிக்கொண்டிருந்தேன். நேர்முகத் தேர்வு வரை சென்று உதைபட்டு திரும்பி வருவேன். இதற்காக இந்தியா முழுவதும் சுற்றும் வாய்ப்பு கிடைத்ததுதான் மிச்சம். ஒரு கட்டத்தில் பெரிய மற்றும் அரசு நிறுவனங்களில் நுழையும் கஷ்டத்தை அறிந்து சிறு நிறுவனங்களில் வேலை தேட ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு பத்து கம்பெனிக்காவது resume அனுப்பவேண்டும் என்பது டார்கெட். மண்ணை வாரி இறைவது போல விண்ணப்பங்களை நான் அள்ளித் தெளிக்க, இரண்டு கம்பெனியில் வாய்ப்பு வந்தது. ஒன்று எடைக்கருவி தயாரிக்கும் கம்பெனி. மளிகைக் கடைகளில் இதன் தயாரிப்புகளைப் பார்த்திருக்கலாம். இரண்டு வருட பணி நீங்கா ஒப்பந்தம் (bond) மற்றும் விஞ்ஞானி பதவி. உங்களுக்கே சிரிப்பா இருக்குல்ல, ஆனா அவங்க அவ்ளோ சீரியஸாத்தான் அந்த பதவியை தந்தாங்க. மற்றொன்று ஒரு பெட்ரோல் பங்க்’ல். பிதுக்கப்பட்ட இயற்கை வாயு (CNG) அமுக்கான்களை (compressor) பராமரிக்கும் பணி. கருவியியல் பொறியாளர் பதவி. இரண்டு இடத்திலும் மாதம் ஐந்தாயிரம் சம்பளம். வருமான வரி பிடிப்பீங்களா என்று இரண்டு இடத்திலும் சந்தேகம் கேட்டு இரண்டு இடத்திலும் அசிங்கப்பட்டேன். ஆனாலும், நம்பிக்கை நிறுவனத்தில் சேர பிதுக்கப்பட்ட இயற்கை வாயுவே சிறந்த வழியென்று தோன்றியதால் பெட்ரோல் பங்க்கிலேயே வேலைக்கு சேர்ந்தேன்.

நம்பிக்கை ஆப்பீஸ் நிறுவனம் reliance கோவா பெட்ரோல் பங்க் CNG bond compressor நேர்முகத் தேர்வு interview Yokogawa DRDO HAL ONGC ISRO(PRL) CEDTI

பெட்ரோல் பங்க்கில் வேலை சேர்ந்த எட்டு மாதத்தில் நம்பிக்கை நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு வந்தது. ஆயிரக்கணக்கானோர் தகுதித் தேர்வு எழுதினோம். அதைப்போன்ற ஒரு எளிமையான போட்டித் தேர்வை நான் எழுதியதில்லை. அதில் தேர்வு பெற்று நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டேன். நூற்றுக் கணக்கானவர்களில் ஒருவனாய் அந்த நேர்முகத் தேர்வை எதிர்கொண்டேன். அதுவரை நான் எதிர்கொண்ட நேர்முகத் தேர்வில் பொதுவாக ஏழு எட்டு பேர் தேர்வுக் குழுவில் இருப்பார்கள். குறைந்தபட்சம் நான்கு பேர். இங்கு ஒரே ஒருவர். ஒரே ஒரு கேள்வி. முந்தைய நிறுவனத்தில் என்ன செய்து கொண்டிருந்தாய். கதை அளந்து முடித்தேன். வேறு எந்த கேள்வியும் இல்லை. மூன்றே நிமிடத்தில் அறையை விட்டு வெளியே வந்திருந்தேன். எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. கனவு நிறுவன வாய்ப்பு தகர்ந்ததாய் உணர்ந்தேன். ‘உள்ளே என்ன கேள்வி கேட்டார்கள்’ குருப் கரட்டாண்டிகளை தவிர்த்து வெளியே வந்தேன். முக்கு கடையில் வழக்கம் போல இரண்டு கட்டிங் ச்சாய். தொலையட்டும், இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்று கிளம்பிவிட்டேன். இரண்டொரு நாளில் பெட்ரோல் பங்க் முதலாளி, “கோவா போகிறாயா, அங்க இருக்குற தொழிற்சாலைக்கு ஒரு ஆள் தேவை. போகிறாயா?” என்று கேட்டார். எப்படியும் வேலை கிடைக்காது என்ற நம்பிக்கையில், கோவா போயாவது சுற்றி வருவோம் என்று மும்பை இருப்பை காலி செய்து கிளம்பி விட்டேன்.

கோவாவில் பலதரப்பட்ட அனுபவங்கள். அதை தனியே எழுதலாம். இப்ப மேட்டருக்கு வருவோம். கோவா போய் சேர்ந்த இரண்டே மாதத்தில் மும்பை நண்பர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. நம்பிக்கை நிறுவனத்தில் இருந்து என் மும்பை முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாகவும், அது பணி நியமன கடிதம் எனவும் சொன்னார்கள். கோவாவில் இருந்து வீட்டு பிரச்சனை என்று சொல்லி இருப்பதை அப்படியே போட்டுவிட்டு மும்பை கிளம்பினேன். சிலபல உடைகள், சில உள்ளாடைகள் மற்றும் ஒரு பெட்டி collateral damage.

பணி நியமன கடிதம் பார்த்தேன். நல்ல ஆங்கிலம். காகிதம் மற்றும் பிரிண்ட் தான் சுமார். அதில் போட்டிருந்தபடி மருத்துவ பரிசோதனைக்கு சென்றேன். ஏதேதோ டெஸ்ட் செய்தபிறகு மருத்துவர், “உங்களுக்கு பேச்சுக் குழாயில் பிரச்சனை இருக்கு. பத்து பனிரெண்டு வருடத்தில் நீங்கள் மொத்தமாக பேசும் திறனை இழந்து விடலாம். அதிகபட்சம் பதினைந்து வருடம். பெட்டர் இப்பொழுதிலிருந்தே சைகை மொழி கற்றுக்கொள்ளுங்கள். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். போகிறீர்களா? பீஸ் கம்மிதான்” என்றார். யோவ் போய்யா, நான் கம்பெனி சேர்வதற்கான வழக்கமான பரிசோதனைக்குதான் வந்திருக்கிறேன் என்றபோது, தீர்க்கமாக என்னை பார்த்தவர் மீண்டும் பரிசோதனை செய்து திருத்தி எழுதிக் கொடுத்தார். இதோ கிட்டதட்ட பதினாலு வருடம் வருடம் ஆகிவிட்டது. இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். இது பலிக்காதா என்ற நப்பாசை என் சகதர்மினிக்கு இருப்பதாக என் மச்சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ, இனி பேச்சு போனாலும் எனக்கு கவலை இல்லை. மருத்துவ பரிசோதனை, நிரப்பப்பட்ட படிவங்கள், என் புகைப்படங்கள், சான்றிதழ்கள், நகல்கள் என்று அத்தனையும் திரட்டி தயாராக வைத்தேன். பிறகு அவர்களுக்கு போன் செய்து, “நான் தயார் ஸார். எப்ப வரட்டும்? லெட்டர்’ல போட்டுருக்குறபடி 20ஆம் அங்கே வந்துரட்ட்டா?” என்று கேட்டால், “இருப்பா. ஒரு சின்ன திருத்தம்” என்று குண்டு தூக்கிப் போட்டார் அந்த மனித வளத் துறை அதிகாரி.

அதை அடுத்த வாரம் சொல்றேன்.

2-கண்டேன் ஜாம்நகர்