நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

இவர்களை நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்திருக்கலாம். ஒல்லியான, கணுக்கால் வரை பேண்ட் போட்டு, இன் செய்யாத முழுக்கை சட்டை அணிந்து, புகையிலை போடாமல், கறை படிந்த பற்களுடன், ரப்பர் செருப்பு அணிந்து, ஒரு மூன்று அல்லது ஐந்து வயது குழந்தையை வைத்துக்கொண்டு இருக்கும் தந்தை. அவர் பின்னே உயரம் அதிகமில்லாத, அதே ஒல்லியான, முக்காடு அணிந்தோ அணியாமலோ புடவை கட்டி, பிளாஸ்டிக் வளையல் அணிந்து, மூக்குத்தி குத்தி, ஒரு கைக்குழந்தையை வைத்துக்கொண்டிருக்கும் தாய். இருவர் முகத்திலும் பரிதாபம் தாண்டவமாடும். கைக்குழந்தை தூங்கியிருக்கும். பெரிய குழந்தை அமைதியாய் தந்தையின் தோளில் வீற்றிருக்கும். அல்லது தந்தையின் நிலையை காணச் சகிக்காமல் அதுவும் தூங்கியிருக்கும். இந்த நால்வர் குடும்பத்தை எந்த பரபரப்பான ரோட்டின் முச்சந்தி/நாற்சந்தியிலும் பார்த்திருக்கலாம்.

நானும் என் அறைத் தோழன் தீபாங்கர் க்ஹாடா’வும் அப்படி ஒரு குடும்பத்தைக் கண்டது சூரத்தில் உள்ள பிப்லோத் பகுதியில். அதற்கு முன்பே அப்படிப்பட்ட குடும்பங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் உதவத் தோன்றியதே இல்லை. ரிலையன்ஸ் சேரும் முன் நிதி நிலைமையும் சரியில்லை. நானும் பார்க்க பஞ்சப் பராரியாகத்தான் தெரிவேன் என்பதால் அவர்களும் என்னிடம் காசு கேட்டதில்லை. இந்த முறையும் அந்த குடும்பம் என்னை சீண்டவில்லை. தீபாங்கரிடம் சென்று காசு கேட்டார்கள். வேலைக்காக கட்ச் பகுதியில் இருந்து சூரத்துக்கு அருகில் இருக்கும் மோரா கிராமத்துக்கு வந்திருந்தார்களாம். மூன்று மாதம் வேலை முடிந்து ஊருக்கு கிளம்புகையில் பார்த்தால் அவர்களிடம் இரயில் பயண செலவுக்கு எண்பத்தைந்து ரூபாய் குறைகிறதாம். நூறு ருபாய் கொடுத்தால் நிம்மதியாக ஊருக்கு போய்ச் சேர்ந்துவிடுவோம் என்று கூறினார்கள்.

தீபாங்கர் உணர்வுப்பூர்வமானவன். ரொம்ப நல்ல மனசுக்காரன். ஏதோ ஒரு முறை நானும் அவனும் எங்கள் அபார்ட்மெண்ட்’இல் தேநீர் தயாரித்து குடித்துக் கொண்டிருந்தோம். என் கை வழுக்கி நான் குடித்துக் கொண்டிருந்த டீ கப் கீழே விழுந்து அதன் பிடி உடைந்து விட்டது. சரி தொலையுது என்று நானும் அள்ளிக்கொண்டு போய் குப்பையில் போட்டு விட்டேன். தீபாங்கர் என்னை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். இரவு வரை அமைதியாக இருந்தான். என்னோடு பேசவில்லை. “என்னடா… ஆசையா வாங்குன உன்னோட டீ கப் ஒடஞ்சு போச்சுன்னு வருத்தமா… வேற வாங்கித் தர்றேன்டா… பேசாம இருக்காதே…” என்று அவனிடம் நான் கூறிய போது, அவன் சொன்னான் “டேய்… நீ உடைச்சது பத்தி கோவமே இல்ல… ஆனா, இவ்ளோ அழகான பொருள் உடைஞ்சிருக்கு… ஆனா நீ மனசே உறுத்தாம அதை குப்பைல அள்ளிப் போட்டுட்டு போயிட்டே… ஒரு நல்ல பொருள் வீணா போயிருசேன்னு உனக்கு கொஞ்சமும் வருத்தம் இல்ல… உன்னோட இந்த மனோபாவம்தான் என் மனசை சங்கடப் படுத்துது…” குழந்தை மனசுக்காரன். அவனிடம் போய் குழந்தையை வைத்துக்கொண்டு காசு கேட்டால் என்ன செய்வான் பாவம். அந்த தந்தையிடம் அக்கறையுடன் கதை கேட்டு நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தான். பின் குழந்தைகளை பார்த்தவன் “சாப்ட்டாச்சா…” என்று கேட்க, அவர்கள் பதில் சொல்ல வாய் திறக்கும்முன் மேலும் இரண்டு நூறு தாள்களை அந்த தந்தை கையில் அழுத்தினான். “அடேய்… இவங்கல்லாம் ஏமாத்துக் காரங்களா இருப்பங்கடா…” காசு தராத என் செயலை நியாயப் படுத்த வேண்டிய கடமை எனக்கு. ஆனால் தீபாங்கர்க்கு அந்த குடும்பம் தெரிந்ததேயன்றி  நான் தெரியவேயில்லை. அவன் அப்படிதான்.

கிட்டத்தட்ட ஆறு மாதம் சென்றிருக்கும். சூரத்தின் டப்கர்வாட் பகுதியில் நானும் தீபாங்கரும் வழக்கம் போல் சுற்றிக்கொண்டிருந்தோம். திடீரென்று என்னிடம் இருந்து வேகமாக விலகி சாலையை கடந்து எதிர்ப் பக்கம் சென்றான், யாரையோ துரத்துவது போல. இருபுறமும் வரும் வாகனங்களை கவனித்து நான் சாலையை கடந்த போது அவன் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். இவன் பரிதாபமாக ஏதோ கேட்க, அந்த மனிதர் தலை குனிந்து நின்றிருந்தார். கையில் ஒரு மூன்று அல்லது ஐந்து வயது குழந்தை. பின்னே ஒரு பெண். அவர் கையில் ஒரு கைக்குழந்தையை. ஆறு மாதம் முன்பு தீபாங்கரிடம் பணம் வாங்கியவர்கள். அதே குடும்பம். ‘அதான் நான் அப்பவே சொன்னேன்லே… இவங்கல்லாம் ஏமாத்துக்காரங்க…‘ என்று தீபாங்கரிடம் சொல்லும் தைரியம் எனக்கு வரவில்லை. அந்தத் தந்தையிடம் அவன் கோபப்படவோ சண்டை போடவோ இல்லை. மாறாக வருந்திக் கொண்டிருந்தான். ஏன் இப்படி ஏமாத்தணும் என்ற கேள்வியே அவனிடம் இருந்தது.

வாழ்க்கை நமக்கு பெரும்பாலும் ஏமாற்றங்களையே அளிக்கிறது.

சென்னையை மாபெரும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. அரசியல்வாதிகளைக் காணோம். மக்கள் பிரதிநிதிகள் பேச மறுத்தார்கள். அப்படியே அகப்பட்டவர்களும் மைக் முன்பு பதில் தராமல் (அல்லது தர அஞ்சி / தர தெரியாமல்) நழுவினார்கள். தந்தவர்களும் தங்கள் பெற்ற தாயின் ஆணைக்கிணங்க அருள்வாய் மலர்ந்தார்கள். இவர்களையா நாம் ஓட்டு போட்டு மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்தோம்?

சாலையே தெரியாமல் தண்ணீர் நிறைந்திருக்க, கடமை தவறாமல் சுங்கச் சாவடிகள் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். மழை வெள்ளத்துக்கு அஞ்சி ஊரை விட்டு ஓடிக்கொண்டிருப்பவர்களிடம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஊருக்குள் நிவாரணப் பொருட்களை கொண்டு வருபவர்களிடமும். ரோடே இல்லாமல் சுங்கம் வசூலிக்கவா சட்டம் இயற்றி இருக்கிறோம்?

கிராமங்கள் நோக்கி உதவி கொண்டு செல்லும் வாகனங்களை மறித்து கையில் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்காகவா வேலைவெட்டி விட்டு கைக் காசு போட்டு நிவாரணம் கொண்டு வந்தோம்? ஒருவருடமாய் சிறுக சிறுக சேர்த்த காசை கொட்டிக் கொடுத்தோம்?

ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் சென்னை மற்றும் கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்க, இரண்டு பேர் பீப் பாடலை வெளியிடுகிறார்கள். இவர்கள் நடனம், படம் மற்றும் இசைக்கா நாம் கை தட்டி தாளம் போட்டோம்?

சாமானியனும் ஏழையும் தன்னால் முடிந்த காசை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்க, நட்சத்திர நாயகர்கள் வெறும் லட்சங்களில் அருளி அமைதியானார்கள். ஒருவர் மட்டும் போனா போகுதேன்னு ‘தமிழ் நாட்டு மக்களுக்கு நான் ஏதாவது செஞ்சே ஆகணும்’ என்று திருவாய் மலர்ந்தார். இவர்களுக்கா பேனர் கட்டி, பாலாபிஷேகம் செய்து, முதல் நாள் முதல் ஷோ பதிவு செய்து கோடீஸ்வரர்களாக்கினோம்?

பள்ளியில் லிஃப்ட்’இல் தலை சிக்கி ஒரு நான்கு வயது குழந்தை உயிர் இழக்கிறது. ஒரு பெண்ணை கடத்திச் சென்று இரண்டு வாரம் பாலியலாக துன்புறுத்தி, அவள் மார்பிலும் அடி வயிற்றிலும் துப்பாக்கியால் சுட்டு, நீரற்ற ஒரு பாழும் கிணற்றில் தூக்கி எறிந்துச் செல்கிறார்கள். அவள் இரவு முழுவதும் அபயக் குரல் எழுப்பி, காலையில் அந்தப் பக்கம் வந்த ஒரு ஆட்டிடையனால் கண்டெடுக்கப் படுகிறாள். போர்வெல் துவாரத்தில் மேலும் ஒரு குழந்தை விழுந்து உயிர் துறக்கிறது. இன்னொரு குழந்தை பாலியல் வல்லுரவுள்ளாகிறது. கூட்டாக வல்லுறவு கொண்டு, உடலைக் குதறி, குடலை உறுவி குப்பையாய் ஒரு பெண்ணை தூக்கி எறிந்தவன், சட்டம் நிர்ணயித்த வயதின்படி ஒரு சிறுவன் என்பதால் எந்தவித தண்டனையும் இன்றி, வெறும் மூன்று வருட சீர் திருத்தப் பள்ளி வாழ்க்கைக்கு பிறகு சுதந்திர மனிதனாக வெளிவருகிறான். போதையில் வண்டியோட்டி ஒருவரை கொன்றவன், எந்தவித தண்டனையும் இன்றி சட்டத்தால் விடுவிக்கப் படுகிறான். மாட்டிறைச்சி இருப்பதாக சந்தேகப்பட்டு ஒரு பெரியவரை அடித்தே கொல்கிறார்கள். தீவிரவாத தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கியவன் சிறையில் இருக்கும்போது பலமுறை பரோல் அளிக்கப்பட்டு கடைசியில் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப் படுகிறான். தன்னை எதிர்த்தவன் தன்னை விட கீழ் ஜாதிக்காரன் என்பதால் மூன்று வயது மழலை மற்றும் ஒரு வயது தேவதை தீயிட்டு கொளுத்தப்படுகிறார்கள்.

இவர்கள் எல்லாம் நம்மை அயற்சியடைய வைத்திருக்கிறார்கள். இவங்களுக்காகவாடா இவ்ளோ பண்றோம் என்று எண்ண வைத்திருக்கிறார்கள். நம் உதவிகளையே கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். நாம் நியாயம் என்று நம்புவதை கேலிக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இவர்களால் வாழ்க்கையில் ஒரு அவநம்பிக்கை ஏற்படுகிறது.

தளர்ந்து போய் அனைத்திலிருந்தும் விலகிச் செல்கிறேன். உலகமே ஜீவனற்று தெரிகிறது.

சட்டென்று எங்கிருந்தோ ஒரு அற்புதமான பூவாசம் வருகிறது.

மிக அழகானதொரு பூ பூக்கிறது.

தானியம் கொத்திக்கொண்டிருக்கும் புறாக் கூட்டத்திற்குள் புகுந்த ஒரு குழந்தையை தோள் சுருங்கிச் சிரிக்கச் செய்துவிட்டு புறாக்கூட்டம் பறக்கிறது.

தொட்டவுடன் தன் இலைகளை உள்ளிழுத்துக் கொள்ளும் ‘தொட்டச் சுருங்கி’ செடியைத் தொட்டு தொட்டு ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறது. இலை சுருங்கிவவுடன் அட்டகாசமாய் புன்னைகைக்கிறது. பின் வானத்தைப் பார்த்து புன்னகைக்கிறது. பின் என்னைப் பார்த்தும்.

மலை மீது ஏறி களைத்தபோது எனக்கும் என் இரண்டு குழந்தைகளுக்கும், தான் அடிவாரத்திலிருந்து கொண்டு வந்த தண்ணீர் குடத்திலிருந்து ஒரு குவளை நீரை குடிக்கத் தருகிறார் ஒரு பன்னிரண்டு வயது நங்கை.

பிச்சை எடுக்காமல் களைத்துக் படுத்திருக்கும் ஒரு பாட்டிக்கு ஒரு ‘வடா பாவ்’ வாங்கித் தந்தால், அதில் சிறிய துண்டை அருகில் இருக்கும் நாயுடன் பகிர்கிறார்.

தள்ளுவைண்டியில் இருந்து விழுந்து உருண்டு சென்ற தக்காளியை துரத்திப் பிடித்து, துடைத்து, மீண்டும் வண்டியில் வைக்கிறது ஒரு மூன்று வயது குழந்தை. பொக்கைவாய் தள்ளுவண்டி தாத்தா முகமலர்ந்த புன்னகைனூடே அதற்குள் விளையாட ஓடிவிட்ட குழந்தையை ஆசீர்வதிக்கிறார்.

வழிவிட்ட பாதையில் முந்திச் செல்லும் ஆம்புலன்ஸ்’இன் பின்புறம் ஒரு பெரியம்மா அமர்ந்திருக்க, மடியில் ஏதோவொரு சொந்தம் இருக்கலாம். கண்ணோடு கண் நோக்கியாவுடன் நாங்கள் கையெடுத்து கும்பிட்டு மேலே கடவுளைக் காட்ட, அவர் எங்களை ஆசீர்வாதம் செய்கிறார்.

லிஃப்ட் நின்றவுடன் நான்கு சிறுவர்கள் வெளியில் ஓடிவிட, ஒருவன் மட்டும் திரும்பி வந்து மெதுவாக வரும் ஒரு பாட்டி லிஃப்ட்’இல் ஏறும் வரை கதவைத் திறந்து வைத்து காத்திருந்து, பாட்டி ஏறியவுடன் தன் நண்பர்களைத் துரத்தி தலை தெறிக்க ஓடுகிறான்.

தலைகுனிந்து மொபைலை நோண்டிகொண்டிருந்தவர்கள் ஒரு வெள்ளத்தின் போது தகவல் தொடர்பால் மட்டுமே துணை கொண்டு ஒரு நிவாரண இராஜாங்கமே நடத்துகிறார்கள்.

முகமறியா நண்பர்கள் முகநூல் அறிமுகம் மட்டுமே கொண்டு நம்பிக்கையாக வெள்ள நிவாரண நிதி அனுப்புகிறார்கள். இன்றைய தேதிக்கு கிட்டதட்ட நாற்பத்தியோரு லட்சம் ரூபாய் (நிசப்தம்).

சமூக ஆர்வலர் என்று நாங்கள் வேடிக்கையாக கேலி செய்த ஒரு சகோதரர் வெள்ளத்தின் போது ஒரு இராணுவ தளபதி போல் செயல்படுகிறார்.

தொல்லைகள் வரும் என்று கண்டிப்பாக தெரிந்தேயிருந்தாலும், அதையும் மீறி உதவி செய்வதே பிரதானம் என்று கருதி, வெள்ள நிவாரணத்தின் போது தங்கள் அலைபேசி எண்களை பொதுவில் பகிர்கிறார்கள் தோழிகள்.

அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி வெள்ள பாதிப்பின் போது சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வைக்கிறார் ஒரு தோழர்.

பணமாக கொடுத்தால் மட்டுமே போதுமா, உடலுழைப்பே முக்கியம் என்று கருதி அரபு நாட்டில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு கடலூர் வெள்ள நிவாரணத்துக்கு வருகிறார் ஒரு நண்பர்.

சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் பொத்திக் கொண்டிருக்க, இரு நல்லவர்கள் வெள்ள நிவாரணத்தை மிகப் பெரிய அளவில் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

கடலில் அவர்கள் சுடப்பட்டபோது நாம் அவர்களை கொண்டுகொள்ளவில்லை. ஆனால் நாம் வெள்ளத்தில் சிக்கியபோது அவர்களே தங்கள் படகு கொண்டுவந்து நம்மை மீட்டார்கள்.

அத்தனை வெள்ள அமளியிலும் எந்தவொரு சட்ட ஒழுங்கு பிரச்னையும் இல்லை. கொள்ளை இல்லவே இல்லை. (கொண்டு வரும் நிவாரண பொருட்களை வழியில் மக்கள் எடுத்துக் கொள்வதை கொள்ளை என்று நான் கருதவே இல்லை… உங்கள் குழந்தை பசியால் குளிரால் வாடும்போது, அரசாங்கத்திடம் இருந்து உதவி வராதபோது நீங்கள் வேறு என்ன தான் செய்வீர்கள்??? அப்படியும் அவர்கள் பிறர் வீட்டையோ, கடையையோ, பொருட்களையோ கொள்ளையடிக்கவே இல்லை… நிவாரணத்துக்கு என வந்தவைகளையே எடுத்துக்கொண்டனர்…)

கொண்டு வரும் நிவாரண பொருட்களை வழியில் மக்கள் எடுத்துக் கொண்டாலும், கொண்டு வந்தவர்கள் அவர்களை அடித்து விரட்டவோ திட்டவோ ஏளனப்படுத்தவோ இல்லை. “அண்ணா அண்ணா… வெறும் துணி’ண்ணா… விடுண்ணா… வெறும் சாப்புடுற பொருள்தாண்ணா இருக்கு…” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் பொருட்கள் கொண்டு வந்தவர்.

வெள்ளத்தின் போது நிறைமாத கர்பிணியான தன்னை காப்பற்றியவரின் நினைவாக தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ‘யூனுஸ்’ என்று பெயர் வைக்கிறார் ஒரு ஹிந்துப் பெண். அதே வேளையில், கோவிலில் பிறக்கும் தன் குழந்தைக்கு ‘கணேஷ்’ என்று பெயர் வைக்கிறார் ஒரு முஸ்லிம் பெண்.

முழங்காலளவு தண்ணீரில் நின்றுகொண்டு தான் உண்ணும் பிஸ்கட்டை, அருகில் அதே பசியோடு தண்ணீரில் நின்றுகொண்டிருக்கும் நாயோடு பகிர்ந்து கொள்கிறார் ஒரு இராணுவ வீரர்.

மார்பளவு தண்ணீரில், தலைக்குமேல் ஒரு பெரிய தட்டை சுமந்து அதில் உணவு எடுத்துக்கொண்டு விநியோகிக்க செல்கின்றனர் முகம் தெரியாத நால்வர்.

கோவில்களில் புகுந்து உணவை வினியோகித்துக் கொண்டிருந்தார்கள் நம் முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள். ஆண்களும் பெண்களும் பள்ளிவாசல்களில் நீர் நிரப்பிக் கொண்டிருந்தார்கள், ஜாதிமத பேதமின்றி.

டிசம்பர் 6 எந்த வித பதட்டமும் இன்றி அமைதியாக பரஸ்பர உதவிகளால் சப்தமின்றி நழுவிச் செல்கிறது.

வெள்ளத்தின் போது நாலாயிரம் பேருக்கு மேல் சமைத்துப் போடுகிறார் ஒரு அறுபது வயது பெரியவர்.

வெள்ளத்தினூடே தவறாமல் பால் பாக்கெட் போடுகிறார் ஒரு அப்பாச்சி.

உடலை வருத்தி சேர்த்த பணத்தை, வயிறை வருத்தி மிச்சம் பிடித்து ஒரு லட்சம் ரூபாய் அனுப்புகிறார்கள் மும்பையில் இருக்கும் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சகோதரிகள். (இது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமாய்யா…)

வாழ்க்கை ஒண்ணும் அவ்ளோ மோசமில்லையா. நல்லவைகள் அங்கங்கே பரவலாக சிந்தியே கிடக்கிறது. நாம்தான் தவறவிட்டுவிடுகிறோம்.

“போகும் வழியெலாம் அன்பை விதைப்போம்; எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்.”ஷாஜஹான்

வாழ்க்கை நமக்கு பெரும்பாலும் ஏமாற்றம் அளிப்பது போலவே இருக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டிப் பார்த்தால் வாழ்க்கை நமக்கு மிகப் பெரும் நம்பிக்கையையே அளித்து வந்திருக்கிறது. அதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை.

இதற்கிடையில், நான் அவர்களை நெருங்கி விட்டிருந்தேன். கனத்த அமைதி நிலவிக்கொண்டிருந்தது. தீபாங்கர் அழுது விடுவான் போல் இருந்தான். அந்த தந்தை தலை குனிந்திருந்தார். குழந்தை செய்வதறியாமல் தந்தையின் சட்டையில் இருந்து ஒரு நூலை பிரித்துக் கொண்டிருந்தது. தீபாங்கர் தோளைத் தொட்டு, “டேய்… விட்ருடா… போலாம்டா…” என்றேன்.

அதுவரையில் சற்று தள்ளி நின்றிருந்த அந்தத் தாய், தன் கைக்குழந்தையுடன் அருகில் வந்தார். “தப்புதான் ஸார்… ஆனா, நீங்க குடுத்த நூறு ரூபாய்ல என் குழந்தைங்க ரெண்டுநாள் வயிறார சாப்டாங்க ஸார்…” என்று கூறி கையெடுத்து கும்பிட்டார். சட்டென்று உடைந்து விட்டான் தீபாங்கர். அந்த தாயிடம் இருந்து கைக்குழந்தையை வாங்கி நெற்றியில் முத்தமிட்டான். குழந்தை அட்டகாசமாக வாய் மலர்ந்து சிரிக்க, தீபாங்கர் கண்ணீரூடே சிரித்தான். அவர்கள் மறுக்க மறுக்க சில நூறு ரூபாய் தாள்களை அவர்கள் கையில் இம்முறையும் திணித்தான். பெரிய குழந்தையின் கன்னத்தை தட்டி “குட் பாய்…” என்றான். கண்களைத் துடைத்துக் கொண்டு மிக உற்சாகமாக நடக்க ஆரம்பித்தான்.

hundred rupee

ஒரு டீ கடையில் நின்று குளிர்ந்த நீரால் முகம் கழுவிக் கொண்டான். பின் ஆளுக்கொரு கட்டிங் டீ வாங்கி குடித்தோம். தீபாங்கர் தெளிவாகச் சொன்னான், “எத்தன பேர் வேணா ஏமாத்தட்டும்டா… ஒருத்தருக்கு சந்தோஷம்னா கூட போதும்… எனக்கு திருப்திதான்… எவன் எக்கேடோ இருந்துட்டுப் போகட்டும்… நான் நல்லவனா இருந்துட்டுப் போறேனே… எவன் தடுப்பான் பாப்போமே…

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மஹாகவி பாரதி

Brand Cliches
Raman Kalia
Platinum Press

Brand Cliches came to me as a surprise. There has been some change of managers at Leadstart and I had not reviewed a book for some time. Somehow one day they tracked my email and Radhika, from Leadstart, offered me a few titles. Going through the titles, having gone through a few stories in last few occasions, I wanted a change and thought of selecting the book ‘Brand Cliches’. I judged it to be a management book with theories explained about brand and developing a brand. I expected the book to be big and voluminous, given my experience of management books at IIM-B. However, what I received after a couple of days was a small A5 sized 200 page book. Scanning through it, I realised that half of it were with visuals rather than gushing lines of guidances. The book immediately caught my interest. From my experience, I knew that anything less said is worth hearing. And my memory stores visuals rather than paragraphs.

brand cliches raman kalia

Brand Cliches looks a simple book. More than a book, it looked more of a presentation with visuals that asks reader to think. Brand Cliches could not be read like any other management book with stories or incidents given as example to learn from. It says less and enables the reader to chew on the idea. It cannot be read at a stretch, but have to be digested slowly and leisurely. I would generally read a couple of pages and sit quit to dwell on the topic. A lot of pages are with just single lines or anecdotes by famous personalities, that was aptly placed relevant to the topic discussed around. Its worth the time spent on ‘reading’ this book. Foreword is given by Capt. G. R. Gopinath of Air Deccan, now Kingfisher Red, who himself conceived and developed the low cost airline brand in India. In the introduction, the author Raman Kalia (also the founder of Mimamsa Consulting) emphasises the three pillars of brand creation – logic, common sense, human empathy. Here I believe that more than the other two, human empathy is the crux of any brand creation. If you empathise your customer, your brand would automatically be a success. Further, the author goes on to stress being honest by asking the brand managers – We are not con artists, right? These may look simple single words, but carry great meanings.

The book stars with defining the brand. Brand it defines as ‘the ability to influence the market‘ and the author goes further to add three more words in order to make it unambiguous ‘for the better‘. It explains about the relation between the customer, organisation and the product, in creating a great brand. Though less said, the below visual captures the entire idea.

billion dollar brand cliches raman kalia

The book proceeds further discussing about various aspects of brand – building blocks, innovation, conversations, experience, employee and very firmly on brand donts. Every page and every visual talk to you on some aspect which you better not skip. I cannot put every visual here but can quote some that I liked

Anyone could read this book in a day. However, if you are to understand the brand, go slowly. Sit on each page. Read between the visuals. Dwell on them. Savour it. You would not definitely remember the words said in the book. Just that you would have changed or enhanced your view about brand.

One catch. The book is priced on the higher side. A manager would not worry about it, but a management student would think twice before investing his 400.

Verdict: Place in your library (if you are a manager).

Other Reviews

Whatsapp குரூப் பத்தி நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். Whatsappல இல்லாத ஆளு உண்டா? இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா? நாம பாட்டுக்கு நாம நம்ம வேலைய பார்த்துக்கிட்டு இருப்போம். த்திடீர்ன்னு நம்மள ஒரு whatsapp குரூப்’ல கோத்து விட்ருவாங்க. அதுல வர்ற காலை/மாலை வணக்கம் + நாலு அடி தாண்டி நீளும் forwardகளை delete செய்தே நாம் ஓய்ந்திருப்போம். ரெண்டு மாசம் கழிச்சி குரூப் ரொம்ம்ம்ப அமைதியா போய்ட்ருக்கும். அப்ப பொழுது போகாம யாராச்சும் ஓரண்ட இழுப்பாங்க. சுதந்திரமா தங்கள் தங்கள் எண்ணங்களை எல்லோரும் சபையில் வைக்க, அது பிரச்சனையாகி காறி துப்பி நாலு பேரு ‘left’ ஆவாங்க. ஒரே நாளுக்குள்ள, admin அவங்களை மறுபடியும் கோத்து விட்ருவாரு. இல்லேன்னா ‘left’ ஆனவங்க ஒரு புது whatsapp குரூப் ஆரம்பிச்சு பழைய குரூப்’ல அவங்களோட சண்டை போட்டவங்கள தவிர மிச்ச எல்லாரையும் சேர்த்து விட்ருவாங்க.

சமயத்துல ஜாலியாவும் போகும். ரொம்ப அமைதியா போய்ட்ருக்குற whatsapp குரூப்’ல யாராச்சும் ஒரு போஸ்ட் போடுவாங்க. அத வச்சு அந்த நாள் ஜாலியா பூரா ஓடிரும். அப்டி எங்க whatsapp குரூப்’ல நடந்து கீழ இருக்கு. பேர் எல்லாம் மாத்தியாச்சு. தங்லீஷ்’ல இருந்ததை எல்லாம் தமிழ்ல மாத்திட்டேன். மத்தபடி எந்த புது டயலாக்’உம் சேர்க்கலை. நேரம் கூட மாத்தலை. அடையாளுத்துக்காக ஒவ்வொரு பேருக்கும் ஒவ்வொரு கலர் கொடுத்தாச்சு. சம்பாஷணையில் பகிரப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ கூட இந்த பதிவில் சேர்த்தாச்சு. மற்றவர் பெயர்கள் இடது பக்கத்தில் பெயரோடு வர, என் பதிவுகள் வலது பக்கத்தில் என் பெயரோடு வரும் (என் whatsappp’இல் பார்த்தால் எனக்கு தெரிவது போல்).

[முன்குறிப்பு: இந்த whatsapp flow படிக்கிறவங்களுக்கு புரியுமா / பிடிக்குமா’ன்னு தெர்ல. இருந்தாலும் பகிர்கிறேன். படிக்கிறப்ப போரடிச்சா விட்ருங்க.]


THE START

14:44 – Monika: In this picture you will find 100 famous personalities. If you can identify minimum 15 you are genius! Plz.. Zoom?

14:44 – Monika:

whatsapp personalities

15:14 – Karthik Nilagiri: Bruce Lee

15:14 – Karthik Nilagiri: Ravindranath Tagore

15:14 – Karthik Nilagiri: Aristotle

15:14 – Karthik Nilagiri: Hitler

15:15 – Karthik Nilagiri: Mao Tse Tung

15:15 – Sasikala Karthik: Ganthiji

15:15 – Karthik Nilagiri: Jackie Chan

15:15 – Karthik Nilagiri: Chengis Khan

15:16 – Karthik Nilagiri: Karthik Nilagiri

15:16 – Karthik Nilagiri: Yasar Arafat

15:16 – Karthik Nilagiri: Che Guevara

15:16 – Karthik Nilagiri: Fidel Castro

15:16 – Kannan: Nee guere

15:17 – Karthik Nilagiri: Karl Marx

15:17 – Karthik Nilagiri: Urmila Matondkar

15:17 – Karthik Nilagiri: Lenin

15:17 – Kannan: Goli soda

15:17 – Karthik Nilagiri:

whatsapp omg

15:18 – Karthik Nilagiri: Abraham Lincoln

15:18 – Karthik Nilagiri: Siddarth Abhimanyu

15:18 – Sasikala Karthik: Mother Theresa

15:19 – Karthik Nilagiri: 23ஆம் புலிகேசி

15:19 – Karthik Nilagiri: Bahubali

15:19 – Karthik Nilagiri: Vijaya T R

15:19 – Karthik Nilagiri: Stalin

15:19 – Karthik Nilagiri: Shakespeare

15:20 – Karthik Nilagiri: Pa. Vijay

15:20 – Sasikala Karthik: Saddam Hussein

15:20 – Karthik Nilagiri: Prince Charles

15:21 – Karthik Nilagiri: வடக்குப்பட்டி ராமசாமி

15:21 – Sasikala Karthik: Abraham Lincole

15:21 – Kannan: Abdul Kalam

15:21 – Sasikala Karthik: Abraham Lincoln

15:21 – Kannan: ‘புலி’ Vijay

15:21 – Karthik Nilagiri: Mike Tyson

15:22 – Karthik Nilagiri: Charlie Chaplin

15:22 – Karthik Nilagiri: ‘தல’ Ajith

15:22 – Sasikala Karthik: Charlie chaplin

15:22 – Kannan: T R

15:22 – Kannan: Sivapu manidan

15:23 – Karthik Nilagiri: Sasi… இன்னுமா படம் பாத்து எழுதுற???

whatsapp he he

15:23 – Sasikala Karthik: Queen Elizabath

15:23 – Karthik Nilagiri: Kannan… T R I already told

15:23 – Kannan: Ok வச்சிக்கோங்க

15:26 – Karthik Nilagiri: Pele

15:26 – Karthik Nilagiri: Maradona

15:26 – Karthik Nilagiri: Dhyan Chand

15:26 – Karthik Nilagiri: Mukesh Ambani

15:26 – Sugandhi Kannan: Disco Santhi

15:26 – Urmila: Sadam Hysain

15:26 – Urmila: Husain

15:27 – Karthik Nilagiri: Kumaran S/o Mahalakshmi

15:27 – Urmila: Peethovan

15:27 – Sugandhi Kannan: ஆச்சி மனோரமா

15:27 – Urmila: ஏய்…………. அடேய்……..

15:27 – Sasikala Karthik: Sivaji

15:27 – Sasikala Karthik: MGR

15:27 – Sasikala Karthik: Rajini

15:27 – Sasikala Karthik: Kamal

15:27 – Sugandhi Kannan: Surya and jyothika

15:28 – Urmila: Jetlee

15:28 – Sasikala Karthik: Soorya and varsha

15:28 – Urmila: Peeley

15:28 – Urmila: Socrates

15:29 – Kannan: Preethi

15:29 – Urmila: Fidel Castro

15:29 – Sasikala Karthik: அது யாரு ப்ரீத்தி

15:29 – Sasikala Karthik: Suga கவனி

15:29 – Urmila: அது யாரு ப்ரீத்தி

15:29 – Sugandhi Kannan: அது யாரு ப்ரீத்தி

15:29 – Karthik Nilagiri: கண்ணன்… who’s preethi??

15:30 – Urmila: கேளு

15:30 – Urmila: நல்லா கேளு

15:30 – Sasikala Karthik: ஆதி அம்மா. கரெக்டா

15:30 – Sugandhi Kannan: ச்சே என்ன டேஸ்ட்

15:30 – Sugandhi Kannan: Who is preethi sir

15:30 – Sasikala Karthik: ஐஸ்வர்யா இல்லியா கண்ணன்

15:31 – Karthik Nilagiri: Preethi sir இல்ல… preethi madam

15:31 – Sugandhi Kannan: அது எல்லாம் ஒரு பிகர். இதுல நீங்க ஐஸ்வர்யாவ வேற லிஸ்ட்ல சேக்குறீங்க

15:31 – Urmila: நாந்தான் உளறிட்டேனோ – Kannan mind voice

15:31 – Kannan: Aishwarya also

15:31 – Karthik Nilagiri: Who’s preethi?

whatsapp beating

15:32 – Sugandhi Kannan: Karthik அண்ணே I am asking kannan ‘who is preethi, sollunga sir’

15:32 – Sasikala Karthik: பாரு suga

15:32 – Kannan: யாரும் பாக்க மாட்டாங்கன்னு நெனச்சேன்

15:32 – Vimal: Kannan girl feiend preethi.

15:32 – Urmila: மாட்னியா

15:33 – Vimal: Friend

15:33 – Sugandhi Kannan: எல்லாரும் சப்ப பிகர், அவங்கள பாக்குறதுக்கு பாக்காமலே இருக்கலாம்

15:33 – Urmila: வீட்டுக்கு வா மச்சி, suga waiting

15:33 – Sasikala Karthik: அது எங்க எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்

15:34 – Kannan: Just ஒரு flowல type பண்ணிட்டேன்

15:34 – Urmila: சரி சரி நம்பிட்டோம்

15:34 – Sugandhi Kannan: அது எப்படி ஒரு flowவா preethi, aishwaryaனு வரும்

15:34 – Sasikala Karthik: அது எப்படி aishwarya பேரு flowல வரும்

15:34 – Kannan: Lunch சாப்ட்டு இவ்ளோ alertடா எல்லாம் இருக்க கூடாதுப்பா நீங்க

15:35 – Sasikala Karthik: Suga same pinch…

15:35 – Urmila: அந்த flowல Sugaனு ஏன் வரலை

15:35 – Sugandhi Kannan: ஒரு நயன்தாரா, த்ரிஷா’ன்னு சொல்லியிருந்தா கூட k சொல்லிருப்பேன்

15:35 – Urmila: கேளு Suga, விடாத

15:35 – Sasikala Karthik: குஷ்பு okயா

15:35 – Urmila: அய்ய்யே

15:36 – Sugandhi Kannan: அக்கா, marriageக்கு முன்னடி தான் என் பேரு வாய்ல வந்துச்சு. இப்ப எல்லாம் never

15:36 – Vimal: Sugandhiன்னு சொல்ல மறந்து வேற சொல்லிட்டான் தம்பி. விடுங்கப்பா பொழைச்சு போகட்டும்

15:36 – Kannan: Sugaன்னு type பண்ணும் போது auto-dictionaryல preethi type ஆகிடுச்சு

15:36 – Urmila: Vims, என்ன supportஆ?

15:36 – Sugandhi Kannan: Suga type பண்ணா preethi வருமா

15:37 – Sasikala Karthik: அப்ப aishwarya

15:37 – Sugandhi Kannan: அப்பா நான் kannan type பண்ணா t.r. வருவாரா

15:37 – Urmila: Kannan,  சொந்த செலவுல. …….

15:37 – Kannan: Sorryக்கு aishwaryaன்னு type ஆகிடுச்சு

15:38 – Karthik Nilagiri: Jesus Christ

15:38 – Kannan: Thanks vimal அக்கா

15:38 – Sasikala Karthik: இன்னைக்கு உனக்கு சங்கு…..

15:38 – Sugandhi Kannan: வாங்க வாங்க. இன்னைக்கு ஆபீஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு வருவீங்கல்ல. வாங்க

15:38 – Karthik Nilagiri: Da Vinci

15:39 – Urmila: ஐயையோ, அந்த கண்கொள்ளக் காட்சிய காண நான் Mumbaiல இல்லியே.

15:39 – Sugandhi Kannan: Karthik அண்ணா, இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு ஒரு…

15:39 – Kannan: Ok going for a meeting. Message u later ????

15:39 – Sasikala Karthik: Mr karthik…..

15:39 – Karthik Nilagiri: Galileo

15:39 – Urmila: ஓடறான் ஓடறான்

15:39 – Sugandhi Kannan: K sasi அண்ணி now ur turn

15:39 – Karthik Nilagiri: Albert Einstein

15:39 – Kannan: ரொம்ப முக்கியம் urmila அக்கா

15:40 – Sugandhi Kannan: பாவம் போகட்டும் அக்கா

15:40 – Kannan: நா அடி வாங்குறது உங்களுக்கு சந்தோஷம்?

15:40 – Karthik Nilagiri: எனக்கும் மீட்டிங் இருக்கு… நானும் போறேன்…

whatsapp leaving

15:40 – Sugandhi Kannan: Urmila அக்கா. அதுல உங்களுக்கு மும்பை’ல இல்லேன்னு கவலை

15:41 – Kannan: அதானே

15:41 – Sasikala Karthik: Meeting முடியட்டும் kannan. போ. Night இருக்கு உனக்கு

15:41 – Kannan: Evening flight ✈ going to site

15:42 – Sasikala Karthik: Return எப்ப kannan

15:42 – Mothilal: MOTHILAL

15:42 – Sugandhi Kannan: After 1 month

15:42 – Prabhu: அட பாவிகளா ஒரு photoku எவ்வளவு sms . இன்னக்கே நெட் முடுஞ்சுரும்

whatsapp why

15:43 – Kannan: Just saying not going anywhere in Mumbai only

15:43 – Vimal: Suga kannanஐ ஒண்ணும் பண்ணிடாதே. அடிச்சி சொன்னாலும் ஒண்ணும் பண்ணிடாதே.

15:43 – Sasikala Karthik: Prabhu அண்ணா, நீங்க எந்த பேரும் சொல்லல?

15:44 – Sugandhi Kannan: அண்ணே வீட்டுக்காரம்மா பேர் சொல்லி escape ஆயிடுவாரு.

15:44 – Sugandhi Kannan: K அக்கா. நீங்க சொல்லுரதுனால பாவம்னு விடுறேன்

15:44 – Urmila: ?????

15:45 – Vimal: அய்யய்யோ என்ன suga ஜகா வாங்கிட்டே.

15:45 – Kannan: Suga பத்தி எல்லாருக்கும் தெரியும். அவ ரொம்ப நல்லவ, வல்லவ, நாலும் தெரிஞ்சவ. அடிக்கவே மாட்டா.

15:46 – Urmila: Suga, I understood. புலி பதுங்குது

15:46 – Vimal: போ suga சப்புன்னு போச்சு.

15:46 – Urmila: Ice ice

15:46 – Sugandhi Kannan: நாம இப்படி எல்லாம் பேசித்தான் பதுங்க வைக்கணும்

15:46 – Urmila: Ohhhhhh

15:47 – Urmila: Note பண்ணுங்கப்பா

15:47 – Karthik Nilagiri: புலி… புலி… புலி…

 

15:47 – Vimal: Reallyபா. Night show அடிதடி படம் பாக்கலாம்ன்னு நெனச்சேன். முடியாம போச்சே

15:47 – Sugandhi Kannan: எவ்ளோ preethi, aishwarya பாத்தாலும் last இந்த suga கிட்டதான் வரணும்

15:48 – Urmila:

whatsapp madurai

15:48 – Vimal: அப்டி போடு அருவாள

15:48 – Karthik Nilagiri:

whatsapp radhe maa

15:49 – Sugandhi Kannan: இது யாரு karthik அண்ணா girl friendஆ

15:49 – Kannan:

whatsapp radhe maa

15:49 – Vimal: கார்த்தியோட ஜோடியாம் இந்த அம்மணி

15:50 – Vimal: Sasi விடாதே கார்த்திக்கை வீடு கட்டிரு இன்னைக்கு.

15:50 – Sugandhi Kannan: S கண்ணனாவது only names, karthik அண்ணா photoவோட. Sasi அண்ணி note this

15:51 – Sasikala Karthik: இப்ப arrest ஆன ஒரு சாமியார்

15:51 – Urmila: Radhe maa????

15:51 – Vimal: ஆமா sasi

15:52 – Sasikala Karthik: Kannanக்கு preethiன்னா, karthikக்கு miss geetha

15:52 – Sugandhi Kannan: அண்ணி. அண்ணே முன்னாள் பக்தரா இருந்துருப்பாரு

15:52 – Vimal: இருந்தாலும் நீ கவனமா இரு sasi

15:52 – Urmila: சாமியாருக்கு எதுக்கு lipstick,  make up?

15:53 – Sasikala Karthik: அதுதான் அரெஸ்ட் பண்ணாங்க

15:53 – Sugandhi Kannan: Ladies சாமியார் so makeup

15:54 – Urmila: இந்த மூஞ்சிய எல்லாம் எப்படி நம்புறாங்க

15:55 – Sugandhi Kannan: பார்த்தாலே fraud மாதிரி இருக்கா

15:55 – Urmila: Sasi,  யாரு அந்த geetha

15:55 – Sasikala Karthik: நீங்க பக்தையா இருந்து பாருங்க, அப்ப தெரியும்.

15:55 – Kannan: இப்ப சொல்லுங்க ரெண்டு பேரும்

15:56 – Sugandhi Kannan: Geetha miss, surya school teacher

15:56 – Kannan: Good urmila அக்கா, நல்லா கேளுங்க

15:56 – Sugandhi Kannan: Teacher

15:56 – Urmila: யாரு ரெண்டு பேரு

15:56 – Sasikala Karthik: Soorya teacher, karthik favorite …

15:56 – Kannan: Teacherரா அண்ணே, super அண்ணே

15:57 – Sugandhi Kannan: S உங்களுக்கு எல்லாம் auntyஸ்’ஆ புடிக்குது

15:57 – Urmila: மொக்க taste

15:57 – Kannan: இந்த Saturday நா போய் sooryaவ schoolல போய் விட்டுட்டு வர்றேன். Ok அண்ணி?

15:58 – Urmila: ஒரு preethiக்கு இன்னும் பதில் வரல

15:58 – Sugandhi Kannan: She is old school teacher

15:58 – Urmila: தம்பி டீ இன்னும் வரல

15:58 – Sugandhi Kannan: கேளுங்க அக்கா நல்லா

15:59 – Urmila: Old teacherஆ? Karthik, என்ன taste இது

16:00 – Sugandhi Kannan: Old teacher இல்ல old school teacher

16:00 – Sasikala Karthik: She is so young

16:00 – Urmila: கலாய்க்க விடு suga

16:01 – Sugandhi Kannan: Ha ha.., k k அக்கா நடத்துங்க

16:01 – Sasikala Karthik: Where is karthik

16:01 – Sasikala Karthik: ஆளு escape

16:02 – Urmila: அவன் பறந்து போய் பத்து நிமிஷம் ஆகுது

16:03 – Sasikala Karthik: அடுத்த ஆளை பிடிங்கப்பா

16:03 – Sasikala Karthik: Where is prabhu அண்ணா

16:03 – Urmila: Prabhu அண்ணி தான் இங்கே இல்லியே

16:04 – Sasikala Karthik: இருந்தாலும் ஓட்டுவோம்ல

16:04 – Sasikala Karthik: நாங்க

16:04 – Urmila: ?????

16:09 – Karthik Nilagiri: லிப்ஸ்டிக் போட்டா எல்லாம் அரெஸ்ட் பண்ணுவாங்களா???

16:10 – Karthik Nilagiri: அது ஏதோ டௌரி கேஸ்

16:10 – Karthik Nilagiri: Btb, அது கீதா மிஸ்…

16:10 – Karthik Nilagiri: Bye

16:21 – Urmila:

whattsapp who is that

16:31 – Mothilal: தல சுத்து.ப்ரீதி யாரு கண்ணா

16:31 – Sasikala Karthik: அது கண்ணனோட girlfriend மாமா

16:32 – Sasikala Karthik: Sorry auntyfriend

16:32 – Vimal: Please officeபா.

16:32 – Sasikala Karthik: நாங்க வீட்ல தான் இருக்கோம்

16:41 – Karthik Nilagiri: பரீத்தி – ஆதி மம்மி…

ஐஸ்வர்யா (இது காரணப் பெயர், உண்மையான பெயர் வேறு) – மங்கு மம்மி

16:41 – Karthik Nilagiri: Bye again

16:42 – Kannan: இன்னும் முடியலியா?

16:46 – Karthik Nilagiri: ப்ரீத்தி யாருன்னு தெரியாம இங்கேந்து போகமாட்டாங்களாம்…

whtatsapp thillumullu

16:47 – Kannan: அதானே?

16:47 – Monika: Preethi zintha shortஆ Preethiன்னு போட்ருப்பாங்க

16:48 – Karthik Nilagiri: வாம்மா மோனிகா…

16:49 – Karthik Nilagiri: உன்னாலதான் இவ்ளோ குழப்பம்

16:49 – Sasikala Karthik: என்ன, அவங்க surname zinthaவா

16:49 – Monika: ?

16:50 – Karthik Nilagiri: ப்ரீதி ஸபர்வால்… (Chak De India)

whatsapp preeti sabarwal

16:51 – Sasikala Karthik: இது குழப்பம் இல்ல உங்க வாயல வந்த வினை

16:51 – Karthik Nilagiri: நானா

16:52 – Karthik Nilagiri: அது கண்ணன்

17:17 – Tharini: நல்லா பொழுது போயிடுச்சா karthik? Office முடிசிருச்சு. வீட்டுக்கு கிளம்பு.

17:17 – Karthik Nilagiri: சாரி… மீட்டிங் வித் Brazil lawyers

17:25 – Tharini: Not lawyers. Liers

17:27 – Kannan: அக்கா good evening

18:04 – Karthik Nilagiri: எவ்ளோ நடந்துருக்கு… ஸ்ரீ வத்ஸன் எங்கேப்பா??? I miss him… My MIT junior…

whatsapp vivek

18:51 – Tharini: Vasu நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலியா karthik?

18:51 – Tharini: அவன் good boy. Workல் sincere.

18:52 – Tharini: Good evening kannan.

19:07 – Charulatha: 15 names சொல்லி genius ஆயிரணும்னு ஆசைப் பட்டு இப்டி சொந்த செலவில் வெச்சிக்கிட்டேங்களே ?? பாவம் ரெண்டு பேரும்..

19:07 – Charulatha: எப்படியோ, எனக்கு breakfast time நல்லா போச்சு?

19:12 – Karthik Nilagiri: அய்யோ… நா பாவம் இல்லை… நா ஒண்ணுமே லீக் பண்ணலை… தெரியாம பேரை சொன்னது கண்ணன் தான்… so அவன் தான் பாவம்…

Pray for him ப்ரெண்ட்ச்…

19:20 – Charulatha: நீங்க தெரிஞ்சே photo அனுப்பிட்டீங்களே

19:21 – Charulatha: அண்ணி ரொம்ப alertதாக்கும்

19:21 – Kannan: Proof இருக்கு அண்ணே

19:22 – Charulatha: Kannan, karthik அண்ணனை மாட்டி விட்டுட்டு நீங்க escape ஆக முடியாது

19:23 – Charulatha: Your account is handled separately

19:24 – Kannan: ?

19:24 – Kannan: That’s by mistake

THE END

Angelic Beats
-Sarita Singh
Leadstart Publishing

Angelic Beats - Sarita Singh - front coverWhen Parag Mayekar of Leadstart gave me a list of book to choose, I selected Angelic Beats. The book was about a story of a teen boy falling in love with a married women. A little erotic subject, right? No denying the fact that I had selected Angelic Beats for the subject. However, there was another main reason for my selection.  Angelic Beats was written by a lady, Sarita Singh (Here, please do not confuse her with the Aam Admi Party leader). I surely expected the perspective of a love, between a teen boy and a married women, from the eyes of a lady. Had Angelic Beats been written by a man, I certainly would not have chosen it to read.

Once received the book, I started to read and finished it in a couple of days. Not that it was interesting, but Angelic Beats was a small story. The story was about a teen boy with a passion for defense, getting attracted to a married housewife. Through the love they support each other and the boy becomes an officer, while the lady clears services exam. A major portion of the story is about the discussions between the two and how they both grow in their career, with the support of each other. Nothing more is there to say about the story.

Angelic Beats was a disappointment to me. I expected the love between the two to be not only romantic but also from the perspective of a woman (given that the author is a lady). However, there was neither a great romance nor a great lust. I do not find any reason for the woman to fall for the boy. If it is for the reason that husband of the woman was not providing her the necessary attention or love, then it was not captured in the story. I just view it as a lust. But even that was not elaborated, maybe because author feared moral policing by the society. So the story just hangs between love and lust. Angelic Beats ends up being nowhere.

Verdict: No need to read.

Author Interview

Other Reviews

Angelic Beats - Sarita Singh - back cover

Karna
-Umesh Kotru and Ashutosh Zutshi
Leadstart Publishing

When Daniel Braganza of Leadstart gave me a list of book to choose, I scanned the titles and immediately took ‘Karna – The unsung hero of the Mahabharata’. Mahabharata have always been my favorite. Its such a great story told in very many ways. I myself have half a dozen Mahabharata books – Jaya by Devdutt Pattanaik, Ajaya – The role of the dice by Anand Nilakantan (awaiting Ajaya – Rise of Kali), Uba Pandavam (Tamil) by S Ramakrishnan and a couple more classic versions in Tamil. Still you can always read Mahabharata with same enthusiasm and interest. Mahabharata is not just a single story but is filled with lots of stories and sub-stories. Somehow it gives the feel of reading the story of our own land.

Karna - Front page

As the name suggests, this book is about the story of one of the great characters of Mahabharata. Whenever I hear the name of this first Pandava, I immediately recall two characters – friendship and generosity. In fact, on the other way round, anyone who talk about these two characters would immediately recall Karna.

Mahabharatha is by itself about the fight between two set of brothers – Pandavas and Kauravas – of which I see that it is more of a fight between two blood brothers – Karna and Arjuna. How did this happen? Because of the friendship between the first Pandava (Karna) and the first Kaurava (Duryodhana). Since Duryodhana helped Karna in the nick of the time, he felt indebted to Duryodhana that he maintained his loyalty and friendship till his death. Duryodhana kept his faith on the skills of Karna, than on anyone else. Even the Pandavas knew that they have to cross him before reaching Duryodhana. Pandava’s best Arjuna was totally focused in killing Karna, who was hence to be identified as Kaurava’s best. Thus the friendship of Karna with Duryodhana plays an important role in Mahabharata. The second character of Karna, his generosity, actually helped in Pandavas winning over Kauravas. Had he not donated his impregnable chest plates, vow to use Naga Asthra only once, and much more such, he would not have been standing stripped of all his strengths in the final battle of Kurukshetra. And the total outcome of Mahabharata would have been different. Needless to say, Karna have always been my favorite character. No wonder I enjoyed the book.

Karna - Back pageReading through the book I realise the extensive research done in writing the book. Through various movies and TV serials, we are generally a little misguided on the story of Karna. Some incidents are just added in other mediums to exaggerate the characters of Karna. But in this book, facts are facts. I sincerely appreciate the homework in making this book. I hope that the authors have put up their efforts in ensuring the correctness of the names and incidents. Second thing I liked about the book are various incidents that are very emotional and that they are very well captured in this book. Karna’s first meeting with his mother Kunti, discussion between Karna and Krishna before the war, the dilemma in the mind of Karna with regards to his support to the actions of Duryodhana, his late night discussions with his wife are a few worth mentioning. You get yourself absolved with the character and the incidents. It is also worth mentioning that there are no grammar mistakes or spelling mistakes that came to my notice. Kudos to the editing team.

However, I found one thing uneasy with this book. Named Karna, I expected the book would be from the perspective of Karna. I expected justification of his acts and no praise of the Pandavas. But this book, while praising Karna, also praises Krishna and Pandavas. It also criticizes the acts of Durhodhana, Shakuni and Kauravas. This would have been okay if the book is named something else but Karna. Yes, I agree that Karna supported the wrong deeds of Kauravas, primarily the disrobing of Draupathi. But, from the views of Karna it should have been shown in some other way but as a wrong. Many of the incidents were justified from the view point of Pandavas and Krishna. Ideally this book should have projected Karna and Kauravas as good. This was my only uneasiness with the book.

Verdict: Read it once.

Other Reviews