Fiction

செம்மொழிக் கதை

Print Friendly, PDF & Email
செய்தி: கி.பி. 2004 – தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது…

“அப்பா… அப்பா…”

“என்னப்பா செல்லம்…”

“எனக்கும் அறுவதாம் கல்யாணம் பண்ணி வைப்பா…”

“என்னடா சொல்றே?!!!”

“என் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்பா…”

“டேய் டேய்… என்னடா ஆச்சு உனக்கு?!!”

“சொந்தக்காரங்களையும் கூப்பிடணும் ஆமா…”

“அடியே… என்னடி உம்மவன் இப்படி பேசுறான்…”

“ஏங்க… உங்க மவனும் தானே அவன்…”

“சரிடி… கல்யாணம் இல்லே பண்ணி வைக்கச் சொல்றான்…”

“அறுவதாங் கல்யாணங்க…”

“ஆமா… டீட்டெயில் ரொம்ப முக்கியம்…”

“உங்க அப்பா கல்யாணத்தை பார்த்து தனக்கும் வெணுங்குரான்…”

“நீயும் என்னடி…”

“அவன் சொன்னதை சொன்னேங்க…”

“தாத்தா… தாத்தா…”

“என் இராசா… சொல்லுடா என் கன்னுக்குட்டி…”

“அப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சாரில்லெ…”

“ஆமாண்டா இராசா…”

“அறுவதாங் கல்யாணம்…”

“ஆமாண்டா… எனக்கு வயசாயிருச்சில்லெ…”

“எனக்கும் பண்ணி வைக்கச் சொல்லு தாத்தா…”

“ஹா ஹா ஹா… பண்ணி வச்சிட்டா போச்சு…”

“அப்பா…”

“டேய்… மறுபடியும் ஆரம்பிக்காதேடா…”

“அப்பா… தாத்தா கூட சம்மதிச்சிட்டாருப்பா…”

“உனக்கு எதுக்குடா கல்யாணம்…”

“தாத்தாவுக்கு மட்டும் பண்ணி வச்ச…”

“டேய்… அவருக்கு அறுவது வயசாயிருச்சுடா…”

“எனக்கும் ஆறு வயசாயிருச்சுப்பா…”

“ஆறுக்கும் அறுவதுக்கும் வித்தியாசம் இல்லையாடா…”

“எப்படியோ வயசாயிருச்சில்லெ…”

“டேய்… காமெடி பண்ணாதே…”

“அப்பா… சீரியஸா பேசுறேன்… காமெடின்னா சொல்றே…”

“டேய்… தாத்தாக்கு பல்லெல்லாம் கொட்டிப் போச்சுடா…”

“எனக்கும் போன வருஷம் பல்லு விழுந்துச்சில்லெ…”

“அப்புறம்…”

“அவருக்கும் மீசை இல்லே… எனக்கும் மீசை இல்லே…”

“இதப் பார்ரா…”

“அப்பா… என்னை கேலி பண்ணுறியா…”

“நான் பண்ணலடா… ஆனா ஊரே கேலி பண்ணும்…”

“உனக்கு ஊரு முக்கியமா… இல்லே நான் முக்கியமாப்பா…”

“டேய்… ஊரே எங்களைப் பார்த்து சிரிக்கும்டா…”

“உனக்கு தாத்தா மேல தான் பாசம்… எம் மேல இல்லே…”

“எனக்கு ரெண்டு பேரும் ஒண்ணுதாண்டா…”

“இல்லே… உனக்கு தாத்தா தான் முக்கியம்…”

“அதனாலே…”

“அதனாலே அவருக்கு கல்யாணம் பண்ணிவச்சே…”

“உனக்கு பிறந்தநாள் எதுவும் கொண்டாடலாம்டா…”

“இல்லே… எனக்கு அறுவதாம் கல்யாணம் பண்ணி வை…”

“ஐயோ… ராமா…”

“ஏங்க… பாவங்க பையன்…”

“என்னடி பண்ணச் சொல்றே…”

“சும்மா பேருக்கு பண்ணிவைங்க…”

“ஏண்டி… லூசாடி நீ…”

“உங்களுக்கு உங்க அப்பா தான் முக்கியம்…”

“நீயும் ஏண்டி உயிரெடுக்குற…”

“அப்போ… நம்ம புள்ளைக்கு செலவு பண்ணமாட்டீங்க…”

“காசாடி பிரச்சனை… மானம் போகும்டி…”

“எனக்கு எம் புள்ள சந்தோஷம்தான் முக்கியம்…”

“அடச்சே… ஏதோ பண்ணிட்டுப் போங்க…”

“ஹைய்யா… தாத்தா மாதிரியே எனக்கும் அறுவதாங் கல்யாணம்…”

“அண்ணே… எனக்கும் பண்ணிவைப்பாராண்ணே…”

“அப்பாகிட்டே அழுடா தம்பி… பண்ணி வச்சிருவாரு…”

“ஹைய்யா… ஜாலி… ஜாலி…”

பின்குறிப்பு: தமிழைத் தொடர்ந்து, ஏனைய இந்திய மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு வருகின்றன…

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.