ஆப்பீஸ்-2-கண்டேன் ஜாம்நகர்

ஆப்பீஸ் கண்டேன் ஜாம்நகர் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 1-நம்பிக்கை பணி நியமன கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். மார்ச் 20ஆம் தேதி ஜாம்நகர் வந்து சேருமாறு போட்டிருந்தது. இரயில் டிக்கெட் புக் செய்துகொண்டு வருமாறு போட்டிருந்தார்கள். பணத்தை ஜாம்நகர் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் போட்டிருந்தது. பெரிய கம்பெனி. கரெக்டா தந்துருவாங்க. இருந்தாலும் கையில இருந்த காசுக்கு, ஒரு தடவை போன் பண்ணி கேட்டுட்டு டிக்கெட் போடலாம்’னு மனித வளத் துறை அதிகாரிக்கு போன் செய்தேன். உங்க கம்பனி தேர்ந்தெடுத்த என்ஜினீயர் என்று அவரை  நம்பவைக்கவே பத்து நிமிடம் ஆனது. அதிகாரி பெண்ணாய் இருந்திருந்தால் ஒருவேளை அவரை நம்ப வைக்க எனக்கு இன்னும் கொஞ்சம் இலகுவாய் இருந்திருக்கலாம். ஆங், சொல்ல மறந்துட்டேனே, அந்த கால B.Tech. இந்த கால M.Tech + MBA … Continue reading ஆப்பீஸ்-2-கண்டேன் ஜாம்நகர்