ஆப்பீஸ்-1-நம்பிக்கை

ஆப்பீஸ் நம்பிக்கை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. கல்லூரி இறுதியாண்டில் இருந்தே இந்த நிறுவனத்தில் சேரவேண்டும் என்பது என் கனவு. கருமம், சேர்ந்த இத்தனை வருடத்தில் இன்னும் இந்த கனவு கலைய மாட்டேங்குது. இறுதியாண்டில் வந்த வேலை வாய்ப்புகள் அனைத்தும் தவிர்த்து இந்த நிறுவனத்திற்காகவே காத்திருந்தேன். நம்பிக்கை அந்த ஆண்டு எங்கள் கல்லூரிக்கு வராதபோது வேலையின்றி கல்லூரி விட்டு வெளியே வந்து ஒரு வருடம் வேலை தேடினேன். வேலை தேட ஆரம்பிச்சப்ப ரொம்ப கெத்தா Yokogawa-Bangalore, DRDO-New Delhi, HAL-Bangalore, ONGC-Chennai, ISRO(PRL)-Ahmedabad, CEDTI-Aizawl போன்ற பெரிய நிறுவனங்களிலேயே தேடிக்கொண்டிருந்தேன். நேர்முகத் தேர்வு வரை சென்று உதைபட்டு திரும்பி வருவேன். இதற்காக இந்தியா முழுவதும் சுற்றும் வாய்ப்பு கிடைத்ததுதான் மிச்சம். ஒரு கட்டத்தில் பெரிய மற்றும் அரசு நிறுவனங்களில் நுழையும் கஷ்டத்தை அறிந்து சிறு … Continue reading ஆப்பீஸ்-1-நம்பிக்கை